ஏற்கனவே ஏகப்பட்ட மக்கள் தமிழின் பெருமையை திகட்ட திகட்ட எழுதி பேசி முடித்தப்பின் புதிதாக நான் எழுதிதான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டி எதுவும் இல்லை. நான் கிணற்று தவளை போல் ஏன் தமிழ் தமிழகத்துக்குள்ளேயே இருக்கிறது என்பதை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் எழுதலாம் என நினைத்தேன். இதற்கு அண்ணன் சீமானோ அவரது தம்பிகளோ கூட காரணமாக இருக்கலாம் . ஏன் எனில் உண்மையில் ஒரு மொழி வளர என்ன தடையாக இருக்க முடியும் . அதனின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் சரியான யோசனையில்லாத சில அண்ணன்கள் பேசும்போது “நீங்க தமிழுக்காக என்ன செஞ்சீரு “ என்று கேட்கதான் தோன்றுகிறது. சரி நான் கூற வந்ததை பார்ப்போம். ஒரு மொழி என்பது எப்போதும் அதன் எளிமை நடையை பொருத்தே உலகம் முழுக்க பரவுகிறது. அது படிக்கவும் கற்க்கவும் எளிதாகவும் அப்படி கற்பதால் நமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்னும் நிலையில் அதனுடைய வளர்ச்சி ஆரம்பமாகிறது. உதாரணமாக ஆங்கிலம் , ஆங்கில மொழியில் மொத்தமே 27 எழுத்துக்கள்தான் . இந்த இருபத்து ஏழே எழுத்துக்களில் தனது மொத்த மொழியையும் அடக்கியதில் ஆங்கிலம் வெற்றிக்கர...