குமஸ்தாவின் பெண் அறிஞர் அண்ணா ஆண்கள் பெண்ணியம் பேசுறதுங்குறது பூனை எலிக்கு பரிந்து பேசுற மாதிரினு பெரியார் சொன்னதா சொல்லுவாங்க. அவர் சொன்னாரா இல்லையானு தெரியலை. ஆனால் இந்த புத்தகத்தை அண்ணா எழுதியிருந்த விதம் அப்படிதான் இருந்தது. தமிழ் சினிமாவிலும் சரி இலக்கியவாதிகள் இடத்திலும் சரி கற்பு தவறிய பெண்ணின் எண்ட் கார்டு என்பது அழுகாச்சியாகதான் முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏற்கனவே செம்மீன் நாவலில் தகழி சிவசங்கரபிள்ளையும் இதே வேலையைதான் பார்த்து வைத்திருப்பார். ஒரு பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணத்திற்கு பிறகு உறவு என செல்லும்போது அதிலும் குமஸ்தாவின் மகளிடம் எந்த ஒரு தவறுமே காணப்படவில்லை. தனது கணவனுக்கு துரோகம் கூட செய்யாத ஒரு கதாபாத்திரம் என்றுதான் கூற வேண்டும். வயதான நபருடன் திருமணம் ஆனாலும் கூட அவர் இறந்த பிறகுதான் அவள் பணக்காரர் ஒருவருடன் உறவில் செல்கிறார். அதுவும் அவருக்கு வைப்பாட்டியாக இருப்பதன் மூலம் குடும்பத்தின் ஏழ்மையை சரி செய்ய முடியும் என்கிற நோக்கத்திற்காகவே செல்கிறாள். பிறகு அந்த பணக்கார வாழ்க்கை அவளுக்கு பிடித்து மோசமானவளாக மாறுகிறாள் குமஸ்தாவின் மகள். இந்த இடத்தில்த...