பேய்ச்சி – ம.நவீன் உலகம் முழுக்கவே மதம் மற்றும் மதம் சார்ந்த அரசியல்கள் வருவதற்கு முன்பிருந்தே இறந்தவர்களை தெய்வங்களாக வணங்கும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் குறிப்பாக சைவ சமயத்தில் குறிப்பிடப்படும் சிவன், அம்மன், முருகன் போன்றவர்கள் எல்லாம் வைணவம் வருவதற்கு முன்பு ஒவ்வொரு நிலங்களில் குல தெய்வங்களாகவும் வட்டார தெய்வங்களாகவும் வணங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது. குல தெய்வ வழிபாட்டில் இருந்தவர்களை பெரு தெய்வ வழிபாட்டுக்குள் கொண்டு வரவே அம்மன் ஸ்ரீ ரங்கனின் தங்கையாகவும், சிவனின் மனைவியாகவும் ஆக்கப்பட்டார். ஆனால் உண்மையில் கர்ப்பினி பெண்கள், நோயால் இறந்த பெண், சிறுமியாக இருக்கும்போதே இறந்தவர்களே பெரும்பாலும் அம்மனாக வணங்கப்பட்டு வந்துள்ளனர். இன்றும் அம்மன் கோவில்களில் சிவனுக்கு அதிகமாக சன்னதியை பார்க்க முடியாது. அம்மன் கோவில்களுக்கு வெளியே காவல் தெய்வங்களாக கூட பெண் தெய்வங்களே இருப்பார்கள். அப்படி இருந்த அம்மன்களில் மாரியம்மன், காளி, ஆனைமலை ஆங்கார நீலி மாதிரியான துஷ்ட தெய்வங்களின் வரிசையில் முக்கியமான தெய்வம் பேச்சியம்மன். பேய்ச்சியை பெண்களின் பாதுகாவல் தெய்வமாக மையப்படுத்த...
மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...