பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்) ஆசிரியர்: அமரர் கல்கி பதிப்பகம் சாரதா பதிப்பகம் ஏற்கனவே நான் கல்கியின் புன்னைவனத்து புலி, ஒற்றை ரோஜா போன்ற சிறுகதைகளை படித்துள்ளேன். ஆனால் பொன்னியின் செல்வன் அதிக பேரால் புகழப்பட்ட நாவல் என்றாலும் அதன் அதிக பக்கங்கள் காரணமாகவும் ஐந்து பாகங்கள் காரணமாகவும் படிக்காமல் இருந்தேன். தற்சமயம் ஊரடங்கினாலும் பொன்னியின் செல்வன் படமாக வர இருப்பதாலும் அதை படிக்க துவங்கினேன். படிக்க துவங்கிய நாள் முதல் மிகவும் வேகமாகவே கதை சென்றது. கதை போக்கு கதையில் வரும் காவேரி ஆற்றின் போக்கை போல நம்மை அடித்து கொண்டு இறுதி பக்கத்தில் நிறுத்துகிறது. இடையில் கல்கியின் சில விவரனைகள் வேகம் குறைந்த நீரோட்டத்தை போல மெதுவாக இழுத்து செல்கிறது. அருள் மொழி வர்மன் காலத்தில் உள்ள கதைமாந்தர்கள் பற்றி அறிந்துக்கொள்ள மிகவும் வசதியாக இந்த புத்தகம் இருக்கும். மொத்தத்தில் தமிழில் பாகம் வைத்து இவ்வளவு அருமையான ஒரு கதையென்று இதைதான் நான் முதன் முதலாக படிக்கிறேன். இந்த கதையில் அருள் மொழி வர்மனை விட என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரங்கள் வந்திய தேவனும் , ஆழ்வார்க்கடியார் நம்பியும் தான்...