ஜல்லிகட்டு விளையாட்டை பற்றி எனக்கு ரொம்ப நாளாக ஐயம் ஒன்று உண்டு .அதாவது ஒருப்பக்கம் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு சிந்து சமவெளி சமவெளி நாகரிகம் முதலே நாம் பின்பற்றி வரும் இந்த விளையாட்டை தமிழர்கள் தங்களது அடையாளமாக கருதி வருகின்றனர். அப்படி பட்ட ஒரு விளையாட்டை இப்பொழுது அரசு தடை செய்யும்பொழுது நமக்கு கோபம் வருகிறது .நாமும் விடாது இதை எதிர்த்து போராடி வருகிறோம். ஒரு சாதரண மனிதன் கூட கொந்தளித்து முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்கிறான். என்னுடைய ஐயம் எல்லாம் பராம்பரியம் என்னும் பெயரால் ஒரு தவறு சரியாக்கப்பட்டுவிட்டதோ என்பதுதான். ...