Skip to main content

Posts

Showing posts from 2020

மதத்தால் அழிந்த மனிதத்திற்கு மற்றுமொடு எடுத்துக்காட்டு இந்திய பிரிவினை- (உதிரத்தால் ஒரு கோடு)

  இந்திய பிரிவினை- உதிரத்தால் ஒரு கோடு மருதன் காலச்சுவடு பதிப்பகம் இந்திய பிரிவினை குறித்து முடிந்த அளவு தகவல்களை முன் வைத்த புத்தகம். சில தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது என்னவென்றால் மத ரீதியான ஒரு புத்தக விமர்சனத்தை அல்லது மத ரீதியான கருத்தை பொது வெளியில் முன் வைக்கும் போது மதவாதிகளை புண்படுத்துவதாக அது அமைகிறது என பலர் சண்டைக்கு வருகிறார்கள். இந்த புத்தகம் மூலம் நான் சில விஷயங்களை அவர்களுக்கு விளக்க நினைக்கிறேன். ஒரு மதம் என்ன செய்ய முடியும். எதற்காக மத வாதிகள் மதங்களை பின்பற்றுகின்றனர். கண்டிப்பாக கடவுள் தனக்கு நன்மை செய்வார் என்னும் காரணத்துக்காகவே அவர்கள் கடவுளை (தங்கள் மத கடவுளை) நம்புகின்றனர். இவர்களுக்கு மதம் குறித்த அரசியல் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படியாக பின்பற்றும் ஒவ்வொரு மதவாதிகளும் ஆபத்தானவர்கள் என்றால் அது நிச்சயம் மத வாதிகளுக்கு அபத்தமாக தோன்றலாம். நான் எனது பகவானை, இயேசுவை, அல்லாஹ் வை வணங்குகிறேன். அதில் என்ன நாங்கள் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கி விட ப...

தங்கையன் ஒரு பலூன் வியாபாரி...

  பெரிய கோவில் திருவிழா கோலகலமாக நடந்துக்கொண்டு இருந்தது. பெரிய கோவில் என்றால் தஞ்சாவூர் பெரியகோவில் கிடையாது. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் . வட்டார ஜனங்களால் இது பலகாலமாக பெரிய கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் மண்டபம் சாமி புறப்பாடுக்கு தயாராகும் முன்பே தங்கையன் அங்கே இருந்தாக வேண்டும். இல்லையன்றால் பலூன் கடை போட இடம் இருக்காது. இன்று சூரிய பிரபை வேறு.. இன்று கடையை சீக்கிரம் போட்டால்தான் நல்ல காசு பார்க்க முடியும். பலூன் கட்டி தொங்கவிடும் அந்த கம்பியை எடுத்துக்கொண்டு மகன் வேலுவையும் கூட அழைத்து சென்றார். வேலு கையில் ஒரு பை வைத்திருந்தான். அதில் காற்று நிரப்பபடாத பலூன்கள், காற்று நிரப்பும் பை, காசுகளை போட்டு வைக்க ஒரு பெட்டி ஆகியவை இருந்தன. எல்லாம் அப்போதுதான் புதிதாக வாங்கிய பலூன்கள் அவற்றை வேலு முகர்ந்து பார்த்தான். அந்த பலூன் வாசனை அவனுக்கு மிகவும் பிடித்து போனது. வேலு குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்க கட்டப்பட்டுள்ள மணிமேகலை அரசு பள்ளியில் படித்து வருகிறான். கணக்கில் அவன் கெட்டிகாரன். இதனாலேயே கூட்ட நெரிசலான காலத்தில் பணத்தை எண்ண பா...

பொன்னியின் செல்வன் 5 பாகங்கள்

பொன்னியின் செல்வன் ( 5 பாகங்கள்) ஆசிரியர்: அமரர் கல்கி பதிப்பகம் சாரதா பதிப்பகம் ஏற்கனவே நான் கல்கியின் புன்னைவனத்து புலி, ஒற்றை ரோஜா போன்ற சிறுகதைகளை படித்துள்ளேன். ஆனால் பொன்னியின் செல்வன் அதிக பேரால் புகழப்பட்ட நாவல் என்றாலும் அதன் அதிக பக்கங்கள் காரணமாகவும் ஐந்து பாகங்கள் காரணமாகவும் படிக்காமல் இருந்தேன். தற்சமயம் ஊரடங்கினாலும் பொன்னியின் செல்வன் படமாக வர இருப்பதாலும் அதை படிக்க துவங்கினேன். படிக்க துவங்கிய நாள் முதல் மிகவும் வேகமாகவே கதை சென்றது. கதை போக்கு கதையில் வரும் காவேரி ஆற்றின் போக்கை போல நம்மை அடித்து கொண்டு இறுதி பக்கத்தில் நிறுத்துகிறது. இடையில் கல்கியின் சில விவரனைகள் வேகம் குறைந்த நீரோட்டத்தை போல மெதுவாக இழுத்து செல்கிறது. அருள் மொழி வர்மன் காலத்தில் உள்ள கதைமாந்தர்கள் பற்றி அறிந்துக்கொள்ள மிகவும் வசதியாக இந்த புத்தகம் இருக்கும். மொத்தத்தில் தமிழில் பாகம் வைத்து இவ்வளவு அருமையான ஒரு கதையென்று இதைதான் நான் முதன் முதலாக படிக்கிறேன். இந்த கதையில் அருள் மொழி வர்மனை விட என்னை மிகவும் ஈர்த்த கதாபாத்திரங்கள் வந்திய தேவனும் , ஆழ்வார்க்கடியார் நம்பியும் தான்...