காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் வில்லர் Page: 226 காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் ஒரு மர்ம காமிக்ஸ் என கூறலாம். அரிசோனாவில் குறிப்பிட்ட பகுதியில் மர்மமான ஒரு விஷயம் நடக்கிறது. அங்கு செல்லும் விலங்குகள் எல்லாம் மர்மமான முறையில் இறக்கின்றன. ஒரு விலங்கு இறந்து அது எலும்பு கூடாக சில நாட்கள் தேவைப்படும். ஆனால் அந்த பிராந்தியத்தில் வித்தியாசமாக இறக்கும் விலங்குகள் உடலில் இருந்து மொத்த ரத்தமும் உறிஞ்சப்பட்டு கூடு மட்டும் கிடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வழிப்போக்கர்களும் இதே மாதிரி இறக்கிறார்கள். இது இரத்த காட்டேறியின் வேலை என அங்கிருக்கும் மக்கள் முடிவு செய்கின்றனர். எனவே அங்கிருக்கும் மோரிஸ்கோ என்னும் மந்திரவாதியிடம் இந்த பிரச்சனையை கொண்டு வருகின்றனர். இதற்கு நடுவே டெக்ஸ் வில்லரும் அவரது குழுவினரும் ஒரு கொள்ளை கூட்டத்தை தேடி அதே இடத்திற்கு வருகின்றனர். அங்கு உலாவும் மர்மத்தை அவர்கள் கண்டுப்பிடிப்பதுதான் கதை. ஆரம்பத்தில் மர்மமாக சென்றாலும் பிறகு அறிவியல் பூர்வமான கதையாக மாறிவிடுகிறது இந்த கதை.