அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா தொகுத்தவர்: ஜே.எம் சாலி எம்.ஏ பொதுவாக இஸ்லாம் குறித்த கண்ணோட்டம் என்பது பொது புத்தியில் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திரைப்படங்களில் துவங்கி பொதுவாகவே இஸ்லாமியர் என்றால் மோசமானவர் என்கிற பிம்பமே. அதற்கு தகுந்தாற் போல இஸ்லாத்தை வைத்து கடுமையான சட்டங்களை போடும் பிற்போக்குதனமான சட்டங்கள் இட்டுள்ள நாடுகளையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த மதம் அவர்களுக்கு எதை போதிக்கிறது எனும்போது இஸ்லாத்து அன்பைதான் போதிக்கிறது. அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லை என்பதாக சில இஸ்லாமிய நண்பர்களே கூற கேட்டுள்ளேன். நபிகள் இஸ்லாத்தில் என்ன போதிக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அண்ணா பேசியுள்ள உரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாடை நபிகளிடம் இருந்துதான் எடுக்கிறார். அல்லாஹ் ஒருவனே தேவன் என்கிற நபியின் கோட்பாடு ஒரு புரட்சி என்கிறார் அண்ணா. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசத்தில் அல்லாஹ் முக்கிய தெய்வமாக இருந்தாலும் கூட பல்வேறு உருவங்களை கடவுள்களாக வணங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300க்கு...