Skip to main content

தமிழ் மொழி வளர்ச்சி



ஏற்கனவே ஏகப்பட்ட மக்கள் தமிழின் பெருமையை திகட்ட திகட்ட எழுதி  பேசி முடித்தப்பின் புதிதாக நான் எழுதிதான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டி எதுவும் இல்லை.

நான் கிணற்று தவளை போல் ஏன் தமிழ் தமிழகத்துக்குள்ளேயே இருக்கிறது என்பதை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் எழுதலாம் என நினைத்தேன். இதற்கு அண்ணன் சீமானோ அவரது தம்பிகளோ கூட காரணமாக இருக்கலாம் . ஏன் எனில் உண்மையில் ஒரு மொழி வளர என்ன தடையாக இருக்க முடியும் . அதனின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் சரியான யோசனையில்லாத சில அண்ணன்கள் பேசும்போது “நீங்க தமிழுக்காக என்ன செஞ்சீரு “ என்று கேட்கதான் தோன்றுகிறது. சரி நான் கூற வந்ததை பார்ப்போம்.

ஒரு மொழி என்பது எப்போதும் அதன் எளிமை நடையை பொருத்தே உலகம் முழுக்க பரவுகிறது. அது படிக்கவும் கற்க்கவும் எளிதாகவும் அப்படி கற்பதால் நமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்னும் நிலையில் அதனுடைய வளர்ச்சி ஆரம்பமாகிறது.

உதாரணமாக ஆங்கிலம் , ஆங்கில மொழியில் மொத்தமே 27 எழுத்துக்கள்தான் . இந்த இருபத்து ஏழே எழுத்துக்களில் தனது மொத்த மொழியையும் அடக்கியதில் ஆங்கிலம் வெற்றிக்கரமாக தனது வளர்ச்சி பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது. ஒருவேளை உலகில் வேறு எந்த மொழியும் 27 எழுத்துக்களில் படைக்கபடாமல் இருக்கலாம். தன்னுடைய மொத்த உச்சரிப்புகளையும் 27 எழுத்துக்குள் முடித்துவிட்டது ஆங்கிலம்.
ஆனால் தமிழ்மொழி தமிழ் சமூகத்தை கடந்து ஆங்கிலம் போல எங்கும் பரவ முடியாமல் போனதற்கான காரணம் இந்த எளிமை தனம் தமிழ் மொழியில் இல்லை. 247 எழுத்துக்களை கொண்ட ஒரு மொழியை ஒரு வேற்று மொழி ஆள் கற்றுக்கொள்வது மிக சிரமம். அந்த 247 எழுத்துக்களை அவன் மனதில் பதிய வைக்க வேண்டும். 247 எழுத்துக்கள் இருந்துமே 27 எழுத்துக்களில் ஆங்கிலம் செய்தது போன்ற உச்சரிப்பை தமிழில் செய்ய முடியவில்லை.

உதாரணமாக “பா” என்னும் எழுத்தில் 2 வகை உண்டு அந்த சொல் வகைபாடு தமிழில் இல்லை. Ball, Pall இந்த வேற்றுமையை தமிழில் கொண்டு வர முடியாது. அது போல வட மொழி கலந்தால் தான் சில உச்சரிப்புகள் தமிழில் பேச முடியும். உதாரணமாக எனது பெயர் வட மொழி கலந்த பெயர் ராஜ்குமார் இதை சுத்த தமிழில் எழுத வார்த்தைகளே கிடையாது . சிலர் கூறலாம் சுத்த தமிழில் எழுதினால் ராசு குமார் என்று , ஆனால் உச்சரிப்பு மாறுகிறது இரண்டு பெயரும் மாறுபடுகிறது. ஆனால் வேறு மொழி கலவாமல் என்னால் Rajkumar எனவும் Raaskumar எனவும் உச்சரிப்பு மாறாமல் தூய ஆங்கிலத்தில் எழுத முடியும். ஆக தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் கிடையாது அல்லது தமிழால் வேறு மொழி துணை இன்றி இயங்க முடியாது.
இதை பலக்காலம் முன்பே பெரியார் சொல்லிவிட்டார் .
ஒரு புது மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் எவரும் தமிழை கற்றுக்கொள்ள தமிழில் அவருக்கு எந்த தேவையும் இருக்காது. நாம் இப்பொது ஆங்கிலம் கற்றுக்கொள்கிறோம் ஏன் எனில் நமக்கு ஆங்கிலம் தேவையான ஒன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு அமேரிக்கன் தமிழ் கற்றுக்கொள்ள அவனுக்கு எந்த தேவையும் இருக்காது. சரி தொன்மையின் காரணமாக தமிழை கற்றுக்கொள்ளலாம் எனில் மொழியின் கடினம் அவர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும்.
ஆனால் தமிழ் மற்ற நாடுகளில் வளர்ச்சியை விட சொந்த மாநிலத்திலேயே வீழ்ச்சியை கண்டுக்கொண்டுள்ளது.தற்போது தமிழ்நாட்டிலேயே தமிழ் தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

தமிழுக்காக தமிழனின் பங்கு என்ன வாழ்க்கை முழுவதும் தமிழ் மொழியை புகழ்ந்து பேசுவதோ அதற்காக வாதிடுவதோ தமிழ் வளர்ச்சி என்று நினைத்தால் உங்களால் இந்த மொழிக்கு எந்த பயனும் இல்லை. ஒருவன் என்று தனது தவறுகளை திருத்திக்கொள்கிறானோ அன்றுதான் அவன் சரியான மனிதனாகிறான். அப்படிதான் தமிழ் மொழியும் அதன் தவறை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த மனபான்மை தமிழருக்கு வருவது கடினமான ஒன்றாகும். தற்புகழ்ச்சி கொண்ட ஒருவன் என்றுமே தனது தவறுகளை திருத்திக்கொண்டதே கிடையாது. அதே போல் தன் மொழியை தானே புகழும் ஒருவன் அதன் குறைகள், வளர்ச்சி குறித்து எந்த முயற்ச்சியும் செய்ய மாட்டான், ஆனால் நாம் தமிழர்கள் என கூறி கொள்வான்.

எதற்கெல்லாம் தற்சமயம் மாற்றுமொழி தேவைபடுகிறதோ அதற்கு மாற்றே இல்லாமல் தமிழ் மொழி மட்டுமே இருக்க வேண்டும். உதரணமாக ஆங்கிலம் தெரிந்தால் தான் கணிணி உபயோகிக்க முடியும். ஏன் எனில் கணிணி முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளது. கணிணியின் நிரலாக்க மொழிகள் (Programming Language) ஆங்கிலத்தில் உள்ளன.
தொழில்நுட்பத்தில் தமிழை கொண்டு வந்தாலே கண்டிப்பாக தமிழை தமிழ்நாட்டிலாவது அழியாமல் காக்கலாம். அடுத்த தலைமுறையே விஞ்ஞானத்தையும் , தொழில்நுட்பத்தையும் நம்பி உள்ளதால் அதில் தமிழ் புகுத்தபட்டால் அது தமிழுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்.
ஆனால் தமிழர்களுக்கே தங்கள் மொழி மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அவர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி பள்ளிகளில் சேர்க்கின்றனர். இதன் மூலம் இவர்களே அடுத்த தலைமுறை தாய்மொழியை மறக்கவும் மற்றும் அது அழியவும் மிகவும் உதவி செய்கின்றனர்.

இருந்தும் சிலர் தமிழை மீட்டெடுக்கவும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் மிகவும் பாடுபடுகின்றனர். அவ்வழியே வந்தவர்தான் திரு.முத்து அண்ணாமலை . இவர் உருவாக்கிய தமிழ் நிரலாக்க மொழி எழில்.

முன்பே சொன்னது போல கணிணி நிரலாக்க மொழிகள் எல்லாம் ஆங்கிலத்தில் இருப்பதால் நீங்கள் ஒரு Computer Programmer ஆக வேண்டும் எனில் உங்களுக்கு கண்டிப்பாக ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் தமிழ் நிரலாக்க மொழியான எழிலில் எல்லாம் தமிழில் இருப்பதால் ஒரு 5 ஆம் வகுப்பு மாணவன் கூட கணிணி யில் Programming செய்யலாம்.இதனால் தமிழின் பயன்பாட்டில் கணிணி மாறிவிடும். எதிர்காலத்தில் கணிணி கற்றுக்கொள்ள ஆங்கிலம் தேவையில்லாத நிலை ஏற்படும்.

சீனா , ஜப்பான் போன்ற தொழில்நுட்பத்தில் வளர்ச்சி கொண்ட பெரிய நாடுகளே நிரலாக்க மொழியை தங்கள் தாய் மொழியிலேயே கொண்டுள்ளன. காரணம் அவர்கள் தங்கள் மொழி மீது கொண்ட பற்று . வேற்று மொழி நட்டிற்குள் வர கூடாது என்ற எண்ணம். இதனால் இந்த நாட்டு மக்களுக்கு தாய் மொழியை தவிர்த்து வேறு மொழி யை படிப்பதற்க்கான தேவை ஏற்படுவதில்லை.
ஆனால் தமிழ்நாட்டில் சாதரணமாக பேசவே ஆங்கிலம், வட மொழி எல்லாம் தேவைபடுகிறது எனவே மொழி மீது வெறி கொண்டுள்ளதை விட அதன் மீது பற்று கொண்டிருந்தால் தான் அதன் வளர்ச்சியை பற்றி யோசிக்கவே முடியும்.

எனவே தமிழ் மொழியை பற்றி வெற்று பெருமை பேசுவதை விட்டு விட்டு உபயோகமாக எதாவது செய்யலாம் .

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...