ஜல்லிகட்டு விளையாட்டை பற்றி எனக்கு ரொம்ப நாளாக ஐயம் ஒன்று உண்டு .அதாவது ஒருப்பக்கம் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு சிந்து சமவெளி சமவெளி நாகரிகம் முதலே நாம் பின்பற்றி வரும் இந்த விளையாட்டை தமிழர்கள் தங்களது அடையாளமாக கருதி வருகின்றனர். அப்படி பட்ட ஒரு விளையாட்டை இப்பொழுது அரசு தடை செய்யும்பொழுது நமக்கு கோபம் வருகிறது .நாமும் விடாது இதை எதிர்த்து போராடி வருகிறோம். ஒரு சாதரண மனிதன் கூட கொந்தளித்து முகப்புத்தகத்தில் கருத்து தெரிவிக்கிறான். என்னுடைய ஐயம் எல்லாம் பராம்பரியம் என்னும் பெயரால் ஒரு தவறு சரியாக்கப்பட்டுவிட்டதோ என்பதுதான். முதலில் இவ்வளவு போராடி இங்கே ஜல்லிக்கட்டு எதற்கு நடத்தபடுகிறது அதன் பயன் தான் என்ன ? எதுவுமில்லை பொங்கல் அன்று கூட பத்து உயிர் போக வேண்டுமா? ஒப்பு கொள்கிறேன் ஜல்லிக்கட்டு ஒரு பராம்பரிய விளையாட்டுதான் ,ஆனால் மனிதனுக்கு தீங்கு விளைவிப்பது எதுவாயிருந்தாலும் தவறு தவறு தான். நம் ஊரில் சிலர் WRESTLING விளையாட்டை மனிதநேயமற்ற ஒரு விளையாட்டு. இரு மனிதன் அடித்து கொள்வதில் இன்பம் காண்பது காட்டுமிராண்டிதனமாகும் என கூறுகின்றனர். என்னை கேட்டால் அவனாவது மனிதனையும் மனிதனையும்தான் சண்டை போட விடுகிறான் ஆனால் நாமோ மிருகத்தோடு அல்லவா சண்டை போடுகிறோம். ஆனால் திடலில் நிற்கும் மாட்டிற்கு அங்கே என்ன நடக்கிறது என்று கூட தெரியாது.”என்னடா ஒரே க்ரவுடா இருக்கு எப்படா வீட்டுக்கு வுடுவாய்ங்க” என்று அது நிற்கும். அதையும் தாண்டி இப்பொழுது ஜல்லிக்கட்டு ஒரு சாதிய விளையாட்டு என்றுதான் கூற வேண்டும். ஜல்லிக்கட்டு என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது மதுரை அலங்காநல்லூர் . மதுரை என்றாலே இந்நேரம் அங்கே யாருக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என உங்களுக்கு புரிந்திருக்கும். அப்ப வீரம் என்பது சாதியை பொருத்துதான் அமைகிறதா? இல்லை ஒரு மாட்டை அடக்குவது பெரிய வீர செயலா ? எனக்கு தெரிந்து அலெக்ஸாண்டர், ஹிட்லர், ப்ரூஸ்லீ இவர்கள் எல்லாம்எந்த மாட்டையும் அடக்கவில்லை. எந்த சாதியையும் சார்ந்தவர்களும் இல்லை. அதே சிந்து சமவெளி காலம் தொட்டே நாம் செய்து வரும் தொழில் உழவு. ஆனால் அது இன்று விவசாயிகளிடம் இருந்து விலகி சென்று கொண்டிருக்கிறது.
49 O படத்தில் கூறுவது போல் விவசாயம் அழியாது.மனிதனுக்கு பசி உள்ள வரை விவசாயம் அழியாது, ஆனால் அது தனியார் வசம் செல்லும்போதுதான் புரியும் ஒரு ஏழை விவசாயியின் வலி. உணவளிக்கும் விவசாயி வாழவே தகுதியில்லாத ஒரு மாநிலம் தமிழ்நாடு. இதை விட பெரிய அவமானம் தமிழகத்துக்கு தேவையில்லை என நினைக்கிறேன்.முதலில் நமது உண்மையான பிரச்சனை என்ன என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். யாரோ ஒரு உயர் சாதிக்காரன் தனது வீரத்தை நிலைநாட்ட ஜல்லிக்கட்டை கொண்டு வர சாதா மக்களை பயன்படுத்தி கொள்கிறான்.ஆனால் இந்த பிரச்சனை பற்றி எந்த பதிவையும் முகப்புத்தகத்தில் பார்க்க முடியவில்லை. விவசாயிகளின் பிரச்சனையை பரப்ப எந்த ஹிப்ஹாப் தமிழனும் தமிழகத்தில் இல்லை. தண்ணீர் பிரச்சனையால் தமிழகத்தை வறட்சி மாநிலமாக்க கோறி விவசாயிகள் தினம் இறந்து கொண்டிருக்கையில் அவர்களுக்காக கொண்டாடப்படும் உழவர் திருநாளில் ஜல்லிக்கட்டு இல்லையென்பதுதான் இப்பொழுது பெரிய பிரச்சனையாக உள்ளது.
என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்… 1 லிருந்து 3 ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் பதில் அளிக்கவும்
1. ஜல்லிக்கட்டு இல்லாமல் இங்கே உயிர் வாழ முடியும். சோறு இல்லாமல் காய்கறி இல்லாமல் உயிர் வாழ முடியுமா?
என்னுடைய கேள்வியெல்லாம் இதுதான்… 1 லிருந்து 3 ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் பதில் அளிக்கவும்
1. ஜல்லிக்கட்டு இல்லாமல் இங்கே உயிர் வாழ முடியும். சோறு இல்லாமல் காய்கறி இல்லாமல் உயிர் வாழ முடியுமா?
2. மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் இங்கே நீங்கள் யாருக்காக ஜல்லிக்கட்டு வைக்க கோரி கோஷமிடுகிறீர்கள் ? அந்த மாட்டுக்காகவா அதற்கு ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கூட தெரியாது அதற்கு தெரிந்ததெல்லாம் புல்லுக்கட்டுதான்
3. இப்படி பொங்களுக்கு பல வீட்டில் பால் ஊற்றும் ஜல்லிக்கட்டு நாம் அடிப்படை வாழ்வில் இல்லாததால் நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்படுமா ?
விவசாயத்திற்கு மட்டும் ஏன் விவசாயி மட்டும் போராட வேண்டும் ?
விவசாயத்திற்கும், உழவுக்கும் குரல் கொடுப்பது பெரும் தவறா?
ஒரு மனிதனாக அல்லது தமிழனாக நமக்கு உழவு முக்கியமா?
ஜல்லிக்கட்டு முக்கியமா?
அப்படி ஜல்லிக்கட்டு முக்கியமெனில் ஏன்?
ஜல்லிக்கட்டின் நன்மைகள் என்ன?
இதை படித்தவுடன் பலர் சினம் கொண்டிருப்பீர்கள் ஆனால் நான் கூறுவதெல்லாம் நிதானமாக பதிலளிக்கவும்…………………
நன்றி
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
விவசாயத்திற்கும், உழவுக்கும் குரல் கொடுப்பது பெரும் தவறா?
ஒரு மனிதனாக அல்லது தமிழனாக நமக்கு உழவு முக்கியமா?
ஜல்லிக்கட்டு முக்கியமா?
அப்படி ஜல்லிக்கட்டு முக்கியமெனில் ஏன்?
ஜல்லிக்கட்டின் நன்மைகள் என்ன?
இதை படித்தவுடன் பலர் சினம் கொண்டிருப்பீர்கள் ஆனால் நான் கூறுவதெல்லாம் நிதானமாக பதிலளிக்கவும்…………………
நன்றி
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Comments
Post a Comment