Skip to main content

மதத்தால் அழிந்த மனிதத்திற்கு மற்றுமொடு எடுத்துக்காட்டு இந்திய பிரிவினை- (உதிரத்தால் ஒரு கோடு)

 இந்திய பிரிவினை- உதிரத்தால் ஒரு கோடு

மருதன்

காலச்சுவடு பதிப்பகம்




இந்திய பிரிவினை குறித்து முடிந்த அளவு தகவல்களை முன் வைத்த புத்தகம். சில தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது என்னவென்றால் மத ரீதியான ஒரு புத்தக விமர்சனத்தை அல்லது மத ரீதியான கருத்தை பொது வெளியில் முன் வைக்கும் போது மதவாதிகளை புண்படுத்துவதாக அது அமைகிறது என பலர் சண்டைக்கு வருகிறார்கள்.

இந்த புத்தகம் மூலம் நான் சில விஷயங்களை அவர்களுக்கு விளக்க நினைக்கிறேன். ஒரு மதம் என்ன செய்ய முடியும். எதற்காக மத வாதிகள் மதங்களை பின்பற்றுகின்றனர். கண்டிப்பாக கடவுள் தனக்கு நன்மை செய்வார் என்னும் காரணத்துக்காகவே அவர்கள் கடவுளை (தங்கள் மத கடவுளை) நம்புகின்றனர்.

இவர்களுக்கு மதம் குறித்த அரசியல் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படியாக பின்பற்றும் ஒவ்வொரு மதவாதிகளும் ஆபத்தானவர்கள் என்றால் அது நிச்சயம் மத வாதிகளுக்கு அபத்தமாக தோன்றலாம். நான் எனது பகவானை, இயேசுவை, அல்லாஹ் வை வணங்குகிறேன். அதில் என்ன நாங்கள் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கி விட போகிறோம் என கேட்கலாம்.

இந்த கேள்வியை கேட்கும் முன்பு நாம் ஒரு முறை இந்திய பிரிவினை பற்றி பார்ப்போம். இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வெள்ளையர்கள் காலம் தொட்டே பிரச்சனைகள் இருந்ததாக மவுண்ட் பேட்டன் கூறுகிறார். விடுதலை இந்தியாவில் தனது இஸ்லாமிய சமூகத்திற்கு பாதுகாப்பு இருக்காது என கருதுகிறார் முகமது ஜின்னா. அந்த சமயத்தில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி காங்கிரஸ் அளவிற்கு செல்வாக்கு பெற்ற கட்சியாக இருக்கிறது.

காந்தியின் காங்கிரஸும் இந்துக்களுக்கு சப்போர்ட்டாக பேசுகிறது. காந்தி ஒரு முழு இந்துவாக இருக்கிறார். வருணாசிரமத்தை மனுதர்மத்தை ஆதரிக்கிறார். பகவத் கீதை குறித்து பேசி சிலாகிக்கிறார். ராம ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்கிறார். எனவே பிரிட்டிஷ் இந்தியாவிலேயே படாதபாடு படும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் விடுதலை இந்தியாவில் மோசமான நிலையை அடைவார்கள் என ஜின்னா நினைக்கிறார்.

இதனால் இஸ்லாமியர்களுக்கு தனி தேசம் என்னும் கோட்பாட்டை முன் வைக்கிறார். ஆனால் வெள்ளையர்கள் முதலில் காந்தியை வெறுத்தாலும் பிறகு காந்தியின் சொல்லுக்கு பொது மக்களிடையே இருக்கும் செல்வாக்கை அறிந்து அவருக்கு நல்ல மரியாதை அளிக்கின்றனர். இதனால் காந்திக்கு வெள்ளையர்களிடம் இருந்த செல்வாக்கு ஜின்னாவிற்கு இல்லை.

ஆனால் இந்தியாவில் காங்கிரஸிற்கு பிறகு பெரிய கட்சியாக முஸ்லீம் லீக் உள்ளது. அதுவும் வலுவான ஆதரவுடன். இதனால் ஜின்னாவுக்கு உரிய இடம் தானாக உருவாகிறது. இந்தியாவை கூறு போடும் பணி பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட் பேட்டன் தலையில் வந்து விழுகிறது.

இருவருக்குமிடையே சமரசம் பேசி ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் எல்லைகள் பிரிக்கப்படுகின்றன. ஆனால் இதில் காந்திக்கு இஷ்டமில்லை. சாதிக்கு எதிராக பேசினால் இந்து மதம் துண்டாகும் என அதற்கே மவுனம் காத்தவர் இந்தியா இரண்டாவதில் மகிழ்ச்சி கொள்வாரா?. இதற்கும் மதவாதிகளுக்கும் என்ன தொடர்பு என நீங்கள் கேட்கலாம்.

ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவே ஜூன் மாதம் முதலே இந்தியாவில் மத வன்முறை வெடிக்க துவங்கியது. அது மிக மிக மோசமாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை பற்றி பேசும் போது தேச பக்தியாளர்களுக்கு எல்லாம் குருதியில் நெருப்பு எரிவதை காணலாம். ஆனால் இந்திய பிரிவினையின் போது இறந்தவர்கள் அதைவிட அதிகம். அதாவது இந்தியர்களால் கொலை செய்யப்பட்ட இந்தியர்கள்.

இஸ்லாமியர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே சண்டை தொடர்ந்தது. பஞ்சாப் ரத்த காடானது. இரு மதத்தினரும் கொடூரமாக கொல்வதில் துவங்கி, பெண்களை கற்பழித்து கொல்வது, கற்ப்பிணி பெண்களின் சிசுவை வயிற்றை கிழித்து வெளியே எடுத்து போடுவது, பெண்களின் மார்பகங்களை வெட்டுவது போன்ற அனைத்து செயல்களையும் இந்த இரு மதக்காரர்களும் செய்தனர்.

ஐ.நா வில் இந்த பிரிவினையை பதிவு செய்தபோது ஜெர்மனியில் ஹிட்லரால் நடந்த இன அழிப்புக்கு சமமான ஒரு கொடூரம் இந்தியாவில் நடந்தேறியது என கூறப்பட்டது. விடுதலை இந்தியாவை வெற்று ஒரு வாரத்தில் நேரு அதை மீண்டும் மவுண்ட் பேட்டனிடம் கொடுக்க முன் வந்தார். “இந்த இரத்தம் மிதக்கும் இந்தியாவை நான் ஆட்சி செய்ய விரும்பவில்லை. வெள்ளையர்களின் ஒட்டு மொத்த ஆட்சியிலும் இல்லாத அளவு இரத்தத்தை நான் கண்டுவிட்டேன்” என்கிறார். இதன் மூலம் வெள்ளையர்களை விட இந்தியர்கள் மோசமானவர்கள் என்பதை நாம் அறியலாம். அமிர்தசரஸிற்கு வந்த  ஒரு ரயில் பிணங்கள் நிரம்பி வந்தது.

இன்னும் எவ்வளவோ கொடூரங்கள். இதையெல்லாம் செய்தது யார்?. தீவிரவாதிகளா?, வெள்ளையர்களா?, பகவானையும், அல்லாஹ்வையும் வணங்கிய மத வாதிகள் தான். அதுவரை சாமி கும்பிட்டு கொண்டிருந்த ஒவ்வொரு மத வாதியும் இந்தியா இந்துக்களுக்கான நாடு என்னும் வாசகத்தையும் பாகிஸ்தான் இஸ்லாமியர்களுக்கான நாடு என்று இஸ்லாமியர்களும் ஆளுக்கு ஒரு ஆயுதத்தை தூக்கிய போதுதான் மத வாதிகளின் உண்மை சொரூபம் வரலாற்றில் பதிவானது.

இப்போது தெரியும் மத வாதிகள் ஆபத்தானவர்கள் என ஏன் நான் கூறினேன் என்று. மதங்கள் தங்கள் வரலாற்றை இரத்தத்தின் மீது எழுதி வந்துள்ளன. இந்த கொடூரங்கள் நடந்த காலத்தில் எந்த மத சாமிகளும் அவதாரம் எடுக்கவில்லை. இங்கே மதம் பற்றி எழுதுவது உங்களை புண்படுத்துகிறது என்றால் இந்த மதம் வரலாறு முழுவதும் எங்களை புண்படுத்தி வருகிறது. அதுவும் எழுத்தாலோ கருத்தாலோ மட்டும் அல்ல. அதையும் தாண்டி புண்படுத்தி வருகிறது. எனவே மதம் வரலாற்றில் என்ன இந்திய மக்களுக்கு கூட நன்மை பயக்கவில்லை என்பதே உண்மை. மதத்தை பின்பற்றுவதால் எந்த பிரோயஜனமும் இல்லை. மாறாக அது பிரிவினையைதான் உண்டாக்குகிறது.

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...