Skip to main content

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro


பணம் சார் உளவியல் - Psychology of Money
மார்கன் ஹௌஸ்ஸேல்
பக்கங்கள்:266

பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது.

அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட.

அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம். 
ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன்.

ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு நபர் தங்கத்தை விட கோதுமை மற்றும் அரிசியைதான் அதிகமாக சேமித்து வைப்பார். ஏனெனில் மீண்டும் ஒரு பஞ்சம் வந்துவிடுமோ என்கிற அச்சம் அவருக்கு இருந்துக்கொண்டே இருக்கும்.

ஆனால் பட்டினி சாவை அறியாதவருக்கு இந்த விஷயம் சிரிப்பான விஷயமாக இருக்கலாம். 

அதே போல பங்கு சந்தை முதலீடு குறித்து ஒரு புதிய பார்வையை இந்த புத்தகத்தில் பார்க்க முடிந்தது. பெரும்பாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் அதில் கொஞ்சம் இறங்குமுகமாக பங்குகள் செல்வதை கண்டாலும் கொஞ்சம் விலை ஏறும்போது அதை விற்றுவிடுவது உண்டு.
ஆனால் முதலீடுகளை பொறுத்தவரை 10 விஷயங்களில் முதலீடு செய்தால் அதில் வெற்றி பெறும் 2 முதலீடுகள் மீதமுள்ள 8 முதலீடுகளுக்கான பலனை கொடுக்கும் என்பதுதான் நியதியாக இருக்கிறது. உதாரணத்திற்கு வால்ட் டிஸ்னி நிறுவனம் ஆரம்பத்தில் கார்ட்டூன் படங்களை எடுத்தப்போது அவை பெரிதாக லாபம் ஈட்டி தரவில்லை.

1930கள் வரை வால்ட் டிஸ்னி குறும்படங்களாகவும், பெரிய படங்களாகவும் 400 படங்களை எடுத்திருந்தன. அவை எதுவுமே பெரிய வெற்றியை பெறவில்லை. கிட்டதட்ட வால்ட் டிஸ்னி திவாலாகும் சூழ்நிலையில் இருந்தது. இந்த நிலையில் 1938 ஆம் ஆண்டு வெளியான ஸ்னோ ஒயிட் திரைப்படம் அவர்களுக்கு 8 மில்லியன் டாலர்களை ஈட்டி கொடுத்தது.

அந்த ஒரு வெற்றியின் மூலம் வால்ட் டிஸ்னி அனைத்து கடன்களையும் அடைத்து அடுத்த நிலைக்கு சென்றுள்ளது.  அதே போல பிரபல முதலீட்டாளர் வாரன் ஃபப்பெட் கூறும்போது அவர் 300க்கும் அதிகமான நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்துள்ளார். ஆனால் அதில் அவருக்கு பெரிய லாபத்தை கொடுத்தது 15 சதவீத நிறுவனங்கள் மட்டுமே.

ஆனால் அந்த லாபமே மீதமிருந்த 85 சதவீத பங்குகளின் நஷ்டத்தை ஈடுகட்டியுள்ளன. மூதலீடு செய்பவர்களும் சுய தொழில் செய்பவர்களும் இதை அறிந்திருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
மூன்றாவதாக வியந்த விஷயம் மக்கள் சேமிப்பு மீது அரசாங்கம் நிகழ்த்தும் அரசியல்.

தனி மனிதன் மிக கட்டுபாடாக இருந்து சேமிப்பது என்பது அரசாங்கத்துக்கு பெருமளவில் பிரச்சனையையும் அதே சமயம் தனி மனிதனுக்கு நன்மையையும் பயப்பதாக இருக்கிறது. உதாரணத்துக்கு புத்தகத்தில் சொன்ன ஒரு விஷயத்தை கூறுகிறேன்.

1950 காலக்கட்டத்திற்கு முன்பு வரை அமெரிக்கா மற்றும் ஆங்கிலேய நாடுகளில் மக்கள் சேமிப்பின் மீது அதிக கவனம் செலுத்தியுள்ளனர். இரண்டு உலக போர்களை சந்தித்ததால் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நிகழலாம் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது.
இரண்டாம் உலகப்போர் வரை மற்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் போர் கருவிகள் செய்து கொடுத்தே அமெரிக்கா பொருளீட்டி வந்தது. இந்த நிலையில் திடீரென போர் முடிவுக்கு வந்தது. இந்த சமயத்தில் 10 லட்சம் அமெரிக்கர்கள் போர் வீரர்கள் இருந்தனர்.

அவர்கள் அமெரிக்காவிற்கு திரும்ப வந்தப்போது அவர்களுக்கு வீடில்லை. அவர்களுக்கு தொழில் இல்லை எதுவுமே இல்லாமல் பணவீக்கத்தில் இருந்தது அமெரிக்கா. இருந்த நிறுவனங்களும் பீரங்கி, துப்பாக்கி செய்பவையாக இருந்தன. 

அவற்றுக்கும் இப்போது வேலையில்லை. எனவே அமெரிக்கா மீண்டு வர மக்கள் பணத்தைதான் பயன்படுத்த வேண்டும். எனவே அமெரிக்கா ஒரு திட்டத்தை கொண்டு வந்தது. அதுதான் கடன், அதுவும் குறைந்த வட்டியில், எலக்ட்ரானிக் சாதனங்கள் முதல் வீடு வரை அனைத்தையும் சுலப தவணை முறையிலேயே அமெரிக்கர்கள் வாங்கி கொள்ளலாம்.

அதுவரை பீரங்கி தயாரித்த நிறுவனங்கள் வீட்டு உபயோக பொருட்களை உருவாக்க துவங்கியது. ஒரு ஏழை வீட்டில் கூட கண்டிப்பாக புல் வெட்டும் கருவி வரை இருக்க வேண்டும் என அமெரிக்கர்களை நம்ப வைத்தது. அது வரை போரில் வாழ்ந்த மக்கள் ஆடம்பர வாழ்க்கை மீது ஈடுபாடு கொண்டு சுலப தவணை முறையில் பொருட்களை வாங்கினர்.

இதனால் தொழிற்சாலைகள் அதிகரிக்க துவங்கின. மக்கள் சேமிப்பு வெளிவர துவங்கியது. 1945 இல் அமெரிக்கர்கள் வீட்டு பொருட்களுக்காக வாங்கிய மொத்த கடன் 29.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. அடுத்த 20 வருடங்கள் கழித்து 1965 331.2 பில்லியன் டாலர்களாக இருந்தது. அந்த அளவிற்கு சலுகை கொடுத்து பொருட்கள் விற்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மக்கள் சேமிப்பை மறந்துள்ளனர்.

இப்படி எக்கச்சக்க விஷயங்களை புத்தகம் பேசுகிறது. எனக்கு பிடித்த சில விஷயங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன். பயனுள்ள புத்தகம்.

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...