Skip to main content

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

 மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

திராவிட தேசீயம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார்.

அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம்.

திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக்கிய வார்த்தை என்பதாக அப்போது இதற்கு ஒரு பெரிய எதிர்ப்பு வந்துள்ளது. அதற்கு விளக்கம் தெரிவித்து அண்ணா பேசிய விஷயங்கள் புத்தகத்தில் உள்ளன. கடைசி வரை அண்ணாவின் தனி திராவிட நாடு ஆசை நிறைவேறவில்லை என்றாலும் கூட மத்திய சர்க்காருக்கு ஒரு மிகப்பெரிய அச்சத்தை கொடுத்த ஆசைதான் அண்ணாவின் இந்த திராவிட தேசியம்




மாநில சுயாட்சி

நாம் ஏற்கனவே மாநில சுயாட்சியை பெற்றுவிட்டோம். அதனால் அந்த காலங்களில் அரசியல் ரீதியாக மத்திய சர்க்கார் கொடுத்த அழுத்தங்களை இப்போது நம்மில் சிலரால் புரிந்துக்கொள்ள முடியாமல் போகலாம். அதற்குதான் அண்ணா ஒரு விளக்கம் தருகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் கிளம்பும் சர்க்கரை இன்னொரு ஒரு ஊரில் உள்ள தொழிற்சாலையில் சென்று சேர வேண்டும். இதற்கான அனுமதியை மத்திய சர்க்காரில் இது தொடர்பான அமைச்சருக்கு போன் செய்து கேட்டு வாங்க வேண்டும். அவருக்கு தமிழே தெரியாது. அந்த கிராமத்தின் பெயரை அவருக்கு விளக்கவே எனக்கு கால் மணி நேரம் ஆகிறது என்கிறார் அண்ணா.

அந்த அளவிற்கு சின்ன விஷயங்களுக்கு கூட மத்திய சர்க்காரிடம் அனுமதி பெற வேண்டிய சூழலில் அப்போது மாநிலங்களின் நிலை இருந்துள்ளது. அதனை எதிர்த்து அண்ணா மாநில சுயாட்சி கொள்கையை கொண்டு வருகிறார். அதன்படி மாநிலம் தொடர்பான அதிகப்பட்ச அதிகாரம் என்பது மாநிலத்தில் உள்ள அரசு பணியாளர்கள் மற்றும் பொறுப்பில் உள்ள அரசியல்வாதிகளுக்கே அளிக்கப்படும்.

குறைந்த அளவிலான சில பொதுவான அதிகாரம் மட்டுமே மத்திய சர்க்காருக்கு இருக்க வேண்டும். அண்ணாவின் இந்த கொள்கை இந்திய அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பல்வேறு மாநிலங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவே பிறகு மாநில சுயாட்சி என்பது சாத்தியப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விளக்கும் புத்தகமாக அறிஞர் அண்ணாவின் திராவிட தேசீயம் மாநில சுயாட்சி ஏன்? என்கிற புத்தகம் உள்ளது.


Comments

Popular posts from this blog

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...