Skip to main content

உணவு சரித்திரம்

 உணவு சரித்திரம்

ஆசிரியர்: முகில்

வரலாற்று நிகழ்வுகளை சுறுசுறுப்பாக படிப்பதற்கு எளிமையாக எழுதக்கூடிய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் முகில். வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மூலமாக முகில் புத்தகம் மீது ஆர்வம் உண்டானது. அடுத்து இப்போது படித்த புத்தகம் உணவு சரித்திரம்

தக்காளி, வெங்காயம் மிளகாயில் துவங்கி இன்னும் எத்தனையோ உணவு பொருட்கள் காலம் காலமாக நம் பூமியில் விளைகின்றன என்றுதான் நானும் கூட பல காலங்களாக நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பது சில மாதங்களுக்கு முன்பு ராய் மார்க்ஸம் எழுதிய அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா புத்தகத்தை படித்தப்போது தெரிந்தது. அதில் கொஞ்சமாக இது பற்றிய விஷயங்கள் இருந்தன.



தற்சமயம் முகில் புத்தகம் முழுக்க முழுக்கவே உணவுகளின் வரலாற்றை கொண்டதாக உள்ளது, உண்மையில் பக்கத்துக்கு பக்கம் வியப்புகளை அளிக்க கூடிய ஒரு புத்தகம் என்றுதான் கூற வேண்டும். எப்போதும் விடை தெரியாத சின்ன சின்ன சந்தேகங்களுக்கு நாமே ஒரு விடையை உருவாக்கி கொள்வோம்.

அப்படியாக இவ்வளவு நாளாக ஏதோ மரத்தில் வழியும் பிசின் தான் பெருங்காயம் என்றுதான் நான் நினைத்து வந்தேன். அதுவே பொய் என்பது புத்தகம் படிக்கும்போதுதான் தெரிந்தது. இந்த புத்தகத்தில் உப்பு, ரொட்டி, மாம்பழம், ஹல்வா, மிளகு, பலா, சாக்லேட், கேழ்வரகு, கொழுக்கட்டை, கரும்பு, பெருங்காயம், எள், மரவள்ளி, பனை, வெற்றிலை பாக்கு ஆகியவற்றின் உணவு சரித்திரம் கூறப்பட்டுள்ளது.

இதில் என்னை வியக்க வைத்த நிறைய வரலாறு உண்டு அதில் மரவள்ளிக்கு எப்படி கப்ப கிழங்கு என பெயர் வந்தது, சாக்லேட்டின் வரலாறு, மாம்பழத்தில் ஒட்டு முறையில் உருவாகும் செடிகள், வெற்றிலையில் ஆண் வெற்றிலை பெண் வெற்றிலை வேறுபாடு (எங்கள் வீட்டில் உள்ளது ஆண் வெற்றிலை என்பதை அறிய புத்தகம் உதவியது) என பல விஷயங்களை புத்தகத்தின் வழி அறிய முடிகிறது. 

இதற்காக எக்கச்சக்கமான தகவல்களை திரட்டியிருக்கிறார் முகில். அதற்கே ஒரு பெரிய கைத்தட்டலை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு உணவிலும் அவற்றின் வரலாறு, இலக்கியத்தில் அவை எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் என்ன? உலகளவில் இவற்றை கொண்டு எந்த வகையான உணவுகள் எந்த நாடுகளில் கிடைக்கின்றன? இப்படி ஒவ்வொரு உணவுக்கும் முகில் சேர்த்துள்ள தகவல்கள் அதிக மதிப்புடையவை.

கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம்..


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...