Skip to main content

இந்து மதத்தில் பெண்ணடிமைதனம் - 1



உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்ணடிமைத்தனம் இருந்து வருகிறது. அதற்கு ஆண்களை விட பெண்கள் வலிமைக்குன்றியவர்கள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மதங்களே இந்த அடிமைத்தனத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.ஒட்டு மொத்த மதங்களையும் நான் குறிப்பிடவில்லை என்றாலும் முக்கியமான மதங்களில் இதை நாம் காணலாம்.
கிருஸ்துவ மதத்தில் பெண்ணடிமைத்தனம் குறித்து எனக்கு பெரிதாக எதுவும் எனக்கு தெரியாமல் போய் இருக்கலாம்.கிருஸ்துவ மதம் அந்தந்த நாட்டுக்கு தகுந்தார்போல் மாறிக்கொள்வதால் எனக்கு தெரியவில்லை.
இஸ்லாம் மதம் குறித்து நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. பெண்ணடிமைதனத்தின் கோட்டை இஸ்லாம் என யோசிக்காமல் சொல்லலாம். ஆனால் நாம் முக்கியமாக இங்கே அலச வேண்டியது இந்து மதத்தை ஏன் எனில் இந்தியாவில் இந்து மதம் தானே அதிகம் அதனால் இந்து மதத்துக்கே முன்னுரிமை இப்போழுது இந்த கலாச்சாரமும், இந்து மதமும் பெண்களை எப்படி கைப்பொம்மையாக ஆட்டிவைக்கிறது எனப் பார்ப்போம்.
இந்து மதத்தில் பெண்ணடிமைத்தனம்:
இந்து மதத்தில் முதலில் மகாப்பாரதத்திற்கு போவோம். எப்ப பார்த்தாலும் ஊர் ஊராக போய் பெண் தூக்கும் வேலையை கெளரவ தொழிலாய் செய்பவர் பீஷ்மர்.
அம்பை,அம்பிகை,அம்பாலிகா மூன்று பேரையும் கடத்தி வந்து அதில் அம்பை தவிர மீதம் உள்ள 2 பேரையும் தன் தம்பி விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார். அந்த பெண்ணுக்கு விசித்திர வீரியனை பிடித்திருக்கா என்பதெல்லாம் கேள்வியே கிடையாது.
திருத்ராஷ்ட்ரனுக்கு கண் பார்வையில்லாத்தால் அவனுக்கும் பெண் கிடைக்காது வழக்கம்போல் பீஷ்மர் காந்தார தேசம் சென்று அங்குள்ள அனைத்தையும் அழித்துவிட்டு காந்தாரியையும் அவள் தம்பி சகுனி யையும் கடத்தி வந்து வழக்கம்போல அந்த பெண்ணிடம் கேள்வியே கேட்காமல் திருத்ராஷ்ட்ரனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்.
அடுத்து திரெளபதை திரெளபதை யை கடத்தியெல்லாம் வரவில்லை. அர்ச்சுனனுக்கு பேசி முடித்து திருமணம் ஆனாலும் அவள் கர்ணனின் காதலி என்பது வேறு விஷயம்.
“என்னடா தளபதி கதை சொல்லுற” என நீங்கள் கேட்கலாம். இந்த கதையை மணி சார் மாற்றி எடுத்தால் நாம் என்ன செய்வது. சரி மகாபாரதத்துக்கு வருவோம். திரெளபதை அழகில் மயங்கி 5 பேரும் மனைவியாக வைத்து கொண்ட அந்த நிகழ்வில் இந்து மதத்தின் பெண்ணடிமை தனத்தை நீங்கள் காணலாம்.
பெண்கள் போதை பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை தான் இது.
அடுத்து பகவான் கிருஷ்ணன் அவன் ஒரு PlayBoy என நான் சொல்லவில்லை. கோவில் கோபுர சிற்பங்களில் ஆடையின்றி கிருஷ்ணன் பல பெண்களோடோ ஒரு பெண்ணுடனோ அதுவும் பல விதமான முறையில் உடலுறவு வைத்துள்ளதை செதுக்கியுள்ளனர்.சான்று கெட்போர் மன்னார்குடி பெரிய கோவிலை கோபுரத்தை பார்த்தப்படி 2 சுற்று சுற்றி வரவும். பல பெண்களுடன் உறவு வைத்து கொண்ட கிருஷ்ணன் போதனை பகவத் கீதை என்னும் புனித நூலாகவும் கிருஷ்ணன் கடவுளாகவும் ஆகிறான். இதுவே ஒரு பெண் Play Girl ஆக இருந்தால் சாமியாக்கி கும்பிடுமா இந்த மதம். ஆண் செய்தால் எதுவும் தவறில்லை என்பதை நியாயபடுத்தவே பொதுவெளியில் கிருஷ்ணன் நிர்வாணமாக வன்புணர்வு செய்துகொண்டிருக்கிறான் அந்த கோவில் சிற்பங்களை
இது சாம்பிள் தான் இன்னும் எவ்வளவோ இருக்கு மகாபாரதத்தில் எனவே சாம்பிளோடு விட்டுட்டு அடுத்து கொஞ்சம் மனு தர்ம சாஸ்த்திரம் பக்கம் போவோம்
ஏன் எனில் இந்தியாவில் பெண்ணடிமை தனம் காலூன்ற காரணமாக இருந்த பிராமணியத்தையும் மனு வையும் குறிப்பிடாமல் நிச்சயம் இந்த கட்டுரையை முடிக்க முடியாது..
மனு தர்மம் பற்றி நிறைய எழுத வேண்டி இருப்பதால் TO BE CONTINUED……..

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...