யுகமாய் யுகமாய் நமது இந்தியாவில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பள்ளி என்பதே பாகற்காயாய் கசக்கிறது. இதற்கு அரசு பள்ளிகள் கூட விதிவிலக்கல்ல . இப்படி ஒரு நிலை ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் . அதற்கான சரியான காரணம் என்னவாக இருக்க முடியும். என எண்ணிய போது அதற்கான விடையாக இன்று ஒரு நிகழ்வு நடந்தது. இதற்காக பொதுவாக அனைத்து பள்ளிகளையும் அல்லது அனைத்து ஆசிரியர்களையும் குறை சொல்லி விட முடியாது என நீங்கள் கூறலாம். ஆனால் ஒரு ஆசிரியர் மன நல பாதிக்கப்பட்ட மிருகமாக பணிபுரியும் பள்ளியில் அதை கேள்வி கேட்காமல் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நல்ல ஆசிரியர்கள் எப்படி நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியும்.
இதை பற்றி பேச உதாரணமாக எனது பள்ளி வாழ்க்கையையே பேசலாம் என நினைக்கிறேன். நானும் 12 வது வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தான் பயின்றேன் . உங்கள் மேல்நிலை கல்வி வாழ்க்கையில் நீங்கள் ஆசிரியரிடம் அடியே வாங்கியதில்லை என்றால் ஒன்று நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவனாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். ஒரு படிக்காத மாணவன் என சொல்லப்படும் மாணவன் தன் பள்ளி பருவத்தில் படும் கஷ்டம் எவ்வளவு என்றால் அவன் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்தும் சூழலையே அதிகபட்சம் ஏற்படுத்திவிடும்.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் சரியாக மூன்றாம் வகுப்பு படிக்கும்போது எனது ஆசிரியை கால் வீங்க வீங்க பாதத்திலேயே என்னை அடித்து நடக்கவிடாமல் செய்தார். எனது பள்ளியின் பெயர் புனித சூசையப்பர் நடுநிலை பள்ளி. இது அரசு பள்ளிதான் என்றாலும் அரசின் நேரடி பள்ளி கிடையாது. எங்கள் பள்ளியில் சீருடை நகராட்சி பள்ளியிலிருந்து மாறுபடும். கல்வி கட்டணமாக வருடத்திற்கு 500 ரூபாய்க்குள் ஒரு தொகையை வாங்கி கொள்வர் .ஆனால் அனைத்து ஆசிரியர்களுக்கும் அரசுதான் சம்பளம் வழங்கும். என்னை எனது ஆசிரியை அடித்த அன்று நான் பள்ளிக்கு போகும் ஆசையை விட்டேன். இனி பள்ளிக்கு போகமாட்டேன் என என் வீட்டில் கூறிவிட்டேன். பின்பு இதை பற்றி எனது பெற்றோர் தலைமை ஆசிரியையிடம் பேசினார்கள். தலைமை ஆசிரியர் கொஞ்சம் நல்லவராக இருந்திருக்க வேண்டும். எனது ஆசிரியை யை அழைத்து இனி பிள்ளைகளை இப்படி அடிக்க கூடாது. என எச்சரித்து அனுப்பினார். உண்மையில் இதனால் எனக்கு நீதி கிடைத்துவிட்டது என பொருள் இல்லை. பிறகு அங்கே எட்டாம் வகுப்பு முடிக்கும் வரை என்னை அந்த ஆசிரியை பகையாகவே பார்த்தார் என்பது தான் உண்மை.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு எட்டு வயது பையனை கால் வீங்கும் வரை அடித்தது இந்த ஆசிரியைக்கு தவறாக தெரியவில்லை. மட்டுமின்றி ஒரு எட்டு வயது சிறுவனை தனது மிகப்பெரும் எதிரியாக பார்க்கும் மனநிலையை என்னவென்று சொல்வது.

எனது
இரண்டாவது முக்கிய நிகழ்வு நான் 12 வது படிக்கும் போது நடந்தது . 12வது நான் படித்தது
நேஷனல் மேல்நிலைபள்ளி . இந்த பள்ளி எங்கள் ஊரிலேயே மிகவும் பிரபலமான பள்ளி. இதுவும்
அரசு உதவி பெறும் பள்ளிதான் . எனக்கு 12வதில் வேதியியலுக்கு டி.எல்.ஆர் என்று எங்கள்
பள்ளியில் அழைக்கப்படும் ஒரு மகான் இருந்தார் . அவர் முழு பெயர் என்ன என்றே எனக்கே
என் வகுப்பு மாணவர்களுக்கே தெரியாது. அவர் தன் வீட்டில் செய்த வீட்டு வேலைகள் முதல்
முறுக்கு சுட்டது வரை அணைத்திலும் நடந்த வேதி வினைகளை கூறுவார். ஆனால் அது எங்கள் வகுப்பில்
யாருக்குமே புரியாது. அதுக்கும் நம்ம பாடத்துக்கும் என்ன சம்பந்தம் என புரியாமல் நாங்கள்
அமர்ந்திருப்போம். காலாண்டு தேர்வு வந்தது எங்கள் வகுப்பில் அனைவருமே அதில் கோழி போட்ட
மாதிரி பல முட்டைகளை வாங்கியிருந்தோம். டி.எல்.ஆர் தனது wrestling idea மொத்தத்தையும்
எங்கள் மீது இறக்கியதில் எனக்கு இரண்டு நாட்களுக்கு முதுகு Lock ஆகி விட்டது. ஒரு வகுப்பில்
அனைத்து மாணவர்களும் ஒரு பாடத்தில் முட்டை வாங்கினால் அதற்கு எப்படி அந்த மாணவர்கள்
காரணமாக இருக்க முடியும். என் வாழ்க்கையில் நான் வெறுக்கும் முக்கியமான ஆட்களில் டி.எல்.ஆர்
தான் நம்பர் 1 . அதற்காக அனைத்து ஆசிரியைகளையும் குறை கூறி விட முடியாது. எனது அதே
12ம் வகுப்பு வாழ்க்கையில் விலங்கியல் மீது எனக்கு ஆர்வம் வர காரணமாய் இருந்தவர். எனது
பள்ளி விலங்கியல் ஆசிரியர் திலகர். அவர் புத்தகத்தை மாணவர்கள் திறக்கும் முன்பே அவரது
பாடத்தை மனதில் பதிய வைத்துவிடுவார். நான் கடைசி வரை விலங்கியல் புத்தகத்தை படிக்காமலேயே
130 மதிப்பெண் எடுத்தேன் . அவர் எனது வகுப்பில் எந்த மாணவரையும் அடித்து நான் பார்த்தது
இல்லை
அவர்
வகுப்பில் பயின்ற எங்கள் மாணவர்கள் அனைவருக்குமே அவர் ஒரு கதா நாயகன் என்று சொல்லலாம்.
இதற்கும் இன்று நடந்த நிகழ்விற்கும் என்ன சம்பந்தம் என்றால் எனக்கு தெரிந்த பையன் ஒருவன்
அதே நேஷனல் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறான். அவன் தனது வகுப்பில் சில உளவியல்
ரீதியான பாதிப்புக்கு உள்ளாவதால் அவனது வகுப்பு மாற்றம் தொடர்பாக கேட்க சென்ற போது
எங்களுக்கு பல முட்டைகளை இட்ட அந்த மகான் அங்கே தலைமை ஆசிரியராக அமர்ந்திருப்பதை கண்டேன்.
அவரிடம் வகுப்பு மாற்றுவது சம்பந்தமாக பேசியபோது அவர் கூறிய பொன்மொழிகள் இதோ
பசங்க
விரும்பும் வகுப்புக்கெல்லாம் நாங்கள் மாற்றிவிட முடியாது. அப்புறம் எங்களுக்கு என்ன
மரியாதை. உங்க ஒரு பையன் விருப்பத்துக்கு ஸ்கூல் ரூல்ச மாத்த முடியாது. உங்களுக்கு
பிடிக்கலைனா டி.சி வாங்கிட்டு போய்ட்டே இருங்க. பசங்களை எல்லாம் இப்டி இஷ்ட்டத்துக்கு
விட்டுதான எங்கள இந்த நிலையில் வச்சு இருக்கீங்க.
இதுதான்
அந்த மகானின் வார்த்தைகள் . குறைந்தபட்சம் அந்த மாணவன் என்ன காரணத்திற்க்காக வகுப்பு
மாற விரும்பினான் என்று கூட கேட்கவில்லை அந்த தலைமை ஆசிரியர்.
எப்பேற்பட்ட
மன நோயாளியாக மாறியுள்ளார் இந்த மனிதர் என எனக்கு இன்றுதான் தெரிந்தது. ஒரு பள்ளியில்
ஒவ்வோரு மாணவனும் முக்கியமானவன் தான் ஒவ்வொரு மாணவன் பிரச்சனையும் முக்கியமானதுதான்.
அவன் பள்ளி விதியையே மாற்ற சொல்லவில்லை. தனக்கு ஒரு ஆரோக்கியமான சுற்று சூழலை எதிர்பார்க்கிறான்.
இது ஒரு தனி மனிதனின் குறைந்தப்பட்ச சுதந்திரம் . இதை கூட நிறைவேற்றாத இந்த ஆசிரியருக்கு
ஆயிர கணக்கில் அரசு படி அளக்கிறது .
இவர்
மாணவர்களை தன் எதிரியாக நினைக்கிறார்.
பசங்களை
எல்லாம் இப்டி இஷ்ட்டத்துக்கு விட்டுதான எங்கள இந்த நிலையில் வச்சு இருக்கீங்க
இந்த
வசனத்தின் மூலம் அவர் மாணவர்கள் மீதும் மாணவர் உரிமை சட்டங்கள் மீதும் கொண்டுள்ள கோபத்தை
காணலாம். மாணவர் உரிமை சட்டத்தால் அவரால் இப்போது மாணவர்கள் மீது தன் wrestling
style களை பயன்படுத்த முடியாமல் போயிருக்கலாம்.
உண்மையில்
அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது. ஏன் நானே கூட அவரை ஒன்றும் செய்ய முடியாது. அவர்
ஒரு அரசு ஊழியர் . அவருக்கு பல அரசு ஊழியர்களை தெரியும்.
ஆனால்
அங்கு படிக்கும் மாணவர்கள் பெற்றோர்கள் அப்படி இல்லை. அவர்கள் அதிகப்பட்சம் தின கூலிகளாக
உள்ளனர். இப்படி டி.எல்.ஆர் சத்தம் போட்டாலும் அதை வாங்கிக்கொண்டு போவதை தவிற அவர்களுக்கு
வேறு வழியும் இல்லை.
ஆனால்
அந்த இடத்தில் அந்த மாணவர்களுக்கு கல்வி மீது உள்ள ஈடுபாடே போய் விடுகிறது.
ஒரு
மாணவனின் உளவியல் பிரச்சனையை அனுகுவதற்கு அதை கேட்க கூட இங்கே ஆசிரியர்கள் இல்லை என்பதே
உண்மை.
எனக்கு
தெரிந்து எங்கள் ஊரில் ஆசிரியருக்கு பயந்து படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள் பலர்.
இன்னும் எத்தனை நாட்கள் தான் இந்த கொடுமைகள் தொடரும் என எனக்கு தெரியவில்லை. ஒருவனை
வாழ்நாள் முழுதும் கோழையாக வாழ்பவனாக மாற்றும வல்லமை இந்த வாத்தியார்களுக்கு உண்டு.
ஒரு படிப்பு வராத மாணவனுக்கு படிக்க வைக்க தான் இந்த ஆசிரியர்கள் . ஆனால் இவர்கள் கல்வி
சீக்கிரம் வராத மாணவர்களை படிக்காதவன் என்று புறக்கணித்துவிட்டு புத்தகத்தை மனப்பாடம்
செய்து தேர்வில் மதிப்பெண் பெறும் மாணவர்களை ஏதோ தாங்கள் பாடம் நடத்தியதால் அதிக மதிப்பெண்
எடுத்துவிட்டதாக மார் தட்டி கொள்கின்றனர். ஒரு முட்டை மதிப்பெண் எடுக்கும் மாணவனை அதிக
மதிப்பெண் எடுக்க வைக்கும் ஆசிரியர் மிக குறைவே .கடலில் குண்டூசியை தேடுவது போல அந்த
ஆசிரியர்களை தேட வேண்டும்.
நல்ல
சமுதாயம் உருவாக நல்ல ஆசிரியர்கள் வேண்டும் அதற்கு பெற்றோர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்
. ஆசிரியர்களை கேள்வி கேட்க வேண்டும்.
பின்
குறிப்பு : அந்த அரையாண்டு தேர்வில் எங்கள் வகுப்பில் ஒருவன் மட்டும் மதிப்பெண் எடுத்திருந்தான்
. அதற்கு காரணம் அவன் டி.எல். ஆர் இடம் டியூசன் படித்தான் . முட்டை மார்க் போட்டால்
அடுத்த மாதம் டுயூசன் அனுப்ப மாட்டார்கள் என எங்கள் மகான் பார்த்துவிட்ட வேலை அது..
உங்கள் பள்ளி வாழ்க்கையிலும் நடந்த இது போன்ற விஷயங்களை கமெண்ட் செய்யலாமே
It's true. நானும் மன்னார்குடி நேஸ்னல் ஸ்கூல்ல தான் படிச்சேன். எனக்கும் அந்த ஸ்கூல் புடிக்காது அதுக்கு பல காரணம் இருக்கு அத நான் சொல்ல விரும்பவில்லை. தயவு செய்து நேஸ்னல் ஸ்கூல் ல மட்டும் சேராதிங்க. நன்றி
ReplyDeleteI love my school , love my friends , and specially love all boys are girls the THALAIVAR THILAGAR SIR he is my one of the HERO in my life
ReplyDelete