நிலைமை
மிகவும் மோசமாகி கொண்டிருந்தது நாராயணனின் உருவம் மெல்ல தெரிய தொடங்கியது. ஆனால் அதை
எண்ணி மகிழ்ச்சி அடையும் தருவாயில் தற்சமயம் அவர் இல்லை. கடைவீதி வழக்கத்தை விட மிகவும்
கூட்டமாக இருந்தது. கலகலப்பான கடைத்தெருவை பார்ப்பதே நாரயணனுக்கு அலாதி பிரியமாக இருக்கும்.
ஆனால் அதை அனுபவிக்க அவர் என்ன இப்போது கணவான்கள் போன்று ஆடையணிந்தா உள்ளார். தற்சமயம்
உள்ள நிலைக்கு அவர் தெரு நாய்களிடம் சிக்கினாலே தன் எடையில் ஐந்து கிலோவாவது இழந்துவிடுவது
உறுதி. உடலில் வியர்வை ஆறாக ஓட நாராயணன் தன் வயதுக்கு மீறிய வேகத்துடன் ஓட்டம் பிடித்தார்.
வீட்டு வாசலில் வந்து நின்ற போது பாதி உருவம் தெரிய ஆரம்பித்தது. நேராக குளியலறைக்கு
சென்றார். குளித்துவிட்டு துண்டை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வருகையில் வள்ளி கையில்
அவரது துணிகளோடு நின்று கொண்டிருந்தார்.
“ஏங்க
அங்க ஏன் துணிய கழட்டி போட்டுட்டு வந்தேள்.” ஒன்றும் புரியாமல் வள்ளி கேட்க
“வள்ளி
இன்னிக்கு உடம்பு சுகப்படலடீ நான் இன்னிக்கு ஆபிஸ் போகல” என்று கூறி விஷயத்தை திசை
திருப்பினார் நாராயணன் . இந்தாளுக்கு வேற வேலை இல்ல என்று நினைத்துக்கொண்டு வள்ளி நடையை
கட்ட ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்தார் நாராயணன்.
எது
நம்மை இப்படி மறைய வைக்க காராணமாய் இருக்கும். நீண்ட யோசனைகள் மூளையை அரித்துக்கொண்டு
இருக்க ஆபிஸில் இருந்து அழைப்பு வந்தது.
முக்கியமான
அலுவலக வேலை இருப்பதால் வரும்படி உயர் அதிகாரி அழைத்ததால் வேறு வழி இல்லாமல் தன் வேலையை
கவனிக்க ஆபிஸுக்கு சென்றார் நாராயணன்.
சரியாக
மதிய உணவு இடைவெளியில் பளிச்சென்று ஒரு எண்ணம் நாராயணனுக்கு விளங்கியது.
“செண்பகம்”.
“அட
எலவு பு@#$#யே இது தெரியாம இவ்ளோ நேரம் யோசிச்சிண்டு இருந்துட்டேனே.”
பக்கத்தில்
இருந்த பைரவன் அதிர்ச்சியோடு நாராயணனை பார்த்து கொண்டிருந்தார். மனதில் பேசுவதாக நினைத்து
வெளியே பேசி விட்டோம் என்பது இப்போதுதான் நாராயணனுக்கே விளங்கியது.
“ஓய்
வேதம் ஓதுற பிராமணாள் வாயில வர்ர வார்த்தையா ஓய் இதெல்லாம்”
காலேஜ்
ல நீ கவிதா கூட பண்ணுனத விடவா. பிராமணா எல்லாம் பரிசுத்த அவா என்று… வெளியில் நம்பட்டும்
உன் நடிப்பு சாகசத்தை அந்த கூட்டத்துக்கிட்ட காட்டும். பிராமணாள்னா யாருன்னு எனக்கு
நீ ஒன்னும் சொல்லி தர வேண்டாம்.
நாராயணனின்
இந்த பதிலுக்கு பிறகு வேறு ஏதும் பேச முடியா நிலைக்கு போனார் பைரவர்.
செண்பகத்தின்
கோமியத்தின் மகிமை நாராயணனுக்கு தெரிந்தது. இப்போது பிராமணருக்கு மனதளவில் கூட தோன்ற
கூடாத ஒரு எண்ணம் நாராயணனுக்கு தோன்றியது. செண்பகத்தை கறி போட்டு உண்டால் இந்த உலகின்
முதல் இன்விசிபிள் மனிதனாக ஆகி விடலாமே.
தனது
அழைபேசியில் யூ ட்யூப் செயலியை திறந்து கேரளாவில் செய்வது போல் மாட்டு கறி எப்படி செய்வது
என பார்த்தார். இப்போது மாட்டுக்கறி மீதான ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது அவருக்கு.
மாலை
அலுவலகம் முடிந்ததும் 80 கி.மீ வேகத்தில் வீட்டை வந்தடைந்த நாராயணன். வேகமாக வீட்டுக்கு
பின்னிருந்த கொட்டகைக்கு சென்றார். அங்கே செண்பகத்தை காணவில்லை. நாராயணனுக்கு ஒன்றுமே
புரியவில்லை. வேகமாக வள்ளியிடம் சென்றார்.
அடியேய்
செண்பகம் எங்கடி.
அதான்
கறக்குறத நிறுத்திடுச்சி இனிமே அதை வச்சிருந்து பயனில்லை அதனால விற்க போறேன்னு சொன்னேன்ல.
இன்னிக்கு நீங்க போய் கொஞ்ச நேரத்தில் முனியன் வந்தான். அவன்கிட்ட வித்துட்டேன் என்றாள்
வள்ளி..
பலேர்
என்று ஒரு அரை விழுந்தது வள்ளிக்கு…
அடியேய்
வீட்டு தெய்வத்தை இப்படி வித்துட்டு வந்து நிக்கிறியேடி பாவி.
பசு
வை கறிக்கு விற்பது பிராமண முறைப்படி தவறு என்பதற்க்காகவா நம் கணவர் நம்மை அடித்தார்.
ஆனால் பிராமணாள் எல்லோருமே அப்படிதானே செய்கிறார்கள் என யோசனையில் இருந்தாள் வள்ளி.
நாராயணன்
வேக வேகமாக முனியனின் வீட்டை அடைந்தார்.
அடேய்
முனியா எங்கடா செண்பகம் .
சாமி
ஆறு மணிக்கு மேல யாருக்கும் தெரியாம தான் நான் கறி வித்துட்டு இருக்கேன். அதுனால செண்பகத்தை
இப்பதான் உறிச்சி பீஸ் போட்டு வச்சேன்.
நாராயணனுக்கு
உள்ளூர சந்தோஷம் அப்பாடா கறியை உறித்து சுத்தம் செய்யும் வேலை மிச்சம்.ஆனால் முனியனிடம்
கோபமாக பேசினார்.
டேய்
அது எங்காத்து தெய்வம்டா அவதான் சொன்னான்னா எங்கிட்ட ஒரு வார்த்தை கேக்காம செண்பகத்தை
வாங்கினது இல்லாம அதை கறி போட்டேன்னு என்கிட்டயே சொல்றியா.இரு இந்து சனாதான கட்சி ஆட்களிடம்
சொல்லி உன் சோலியை முடிக்கிறேன்.
அரண்டு
போனான் முனியன் .”சாமி வேணாம் சாமி நான் புழைக்கணும் சாமி. நீங்க என்ன செய்ய சொல்றியளோ
சொல்ரேன் அவுக கிட்ட சொல்லி என்னைய ஏதும் செஞ்சிடாதிய..”
அப்படினா
என் செண்பகத்தோட கறியை குடு அதை நான் தகனம் செய்ய போறேன்.
தாராளமா
எடுத்துக்கோங்க சாமி எனக்கு சாப்பிட கொஞ்சம் வறுத்து வச்சி இருக்கேன் அதையும் கூட சேர்த்து
எடுத்துட்டு போங்க என்ன மட்டும் ஒண்ணும் செஞ்சிடாதிங்க சாமி..
நாராயணனுக்கு
மிகவும் மகிழ்ச்சி ஏற்கனவே சமைத்து வைத்து உள்ளதால் சமையல் வேலையும் மிச்சம்.
வேகமாக
சமைத்த கறிகளை வாங்கிய நாராயணன். மீதம் உள்ள கறிகளை நீயே தகனம் செய்துவிடு என கூறிவிட்டு
ஆற்றாங்கரை ஓரமாக அவசரமாக சென்றார்.
மாட்டுக்கறியை
உண்ண ஆரம்பித்தார். ஆகா என்ன சுவை இப்படி ஒரு சுவையை நான் வாழ்நாளில் சுவைத்ததே இல்லை.
சாப்பிட சாப்பிட கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போனார் நாராயணன்.
ஊரில்
நாராயணன் காணாமல் போன செய்தி பரவ தொடங்கியது. திடீரென்று ஒரு நாள் கோவில் வேதியர் சில
பரப்பரப்பான விஷயங்களை கூறினார்.
நேத்து
காலைல அஞ்சி மணி போல ஒரு குரல் மட்டும் எனக்கு கேட்டுது. சந்தேகமே இல்ல அது நாராயணின்
குரல் தான். அவன் கடவுளாகிட்டான் அவன் பசுவை முனியன் புசிக்க கறி போட்டதாகவும் அந்த
பசுவை காக்க தான் தன் உயிரையே விட்டதாகவும் அதனால் தான் கடவுள் ஆகிட்டதாகவும் அவன்
சொன்னான். அது மட்டுமில்லாம அவனுக்கு ஒரு கோவில் கட்டி வாரம் ஒரு நாள் கறவை நின்ன பசுவை
கறி போட்டு அதை முனியன் குடும்பம் சமைத்து படையல் வைக்கணும் னு சொன்னான்.
இவ்வாறு
வேதிகர் கூறினார் அவர் பொய் கூறமாட்டார் என்றாலும் இதை யாரும் நம்ப தயாராக இல்லை. ஆனால்
விஷயம் வேறு விதமாக சென்றது. ஊரில் உள்ள எல்லா முக்கியஸ்தலர்களுக்கும் இந்த குரல் கேட்டது
மட்டுமின்றி இரவில் அவர் சில பெண்களிடம் இன்பம் கொண்டதாகவும் தானே கலியுக பகவானின்
கல்கி அவதாரம் என்று கூறியதாகவும் சில பெண்கள் கூறினர்.
வேறு
வழியில்லை சிறப்பாக கோவில் கட்டப்பட்டது. கலியுக கல்கி நாராயணன் திருக்கோவில் கட்டப்பட்டது.
வாரா வாரம் படையல் வைக்கப்பட்டது. ஆனால் அதை சாப்பிட முடியாமல் காட்டாற்று வெள்ளத்தில்
போன வாரம் தான் நாராயணன் அடித்து செல்லப்பட்டார் என்கிற விஷயம் யாருக்குமே தெரியாமல்
போனது. படையல் வைத்த முனியன் குடும்பமே அந்த கறியை தின்று நாராயணன் என்னும் கலியுக
கிருஷ்ணனை வாழ வைத்து கொண்டிருந்தது. இப்படியாக கடவுளானார் மாட்டு கோமியம் குடித்த
நாராயணன்.
---------------முற்றும்----------
Comments
Post a Comment