Skip to main content

The Imitation Game Movie- Tamil review

 

The Imitation Game

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லர் எடக்குத்தனமாக செய்த பல விஷயங்களில் உலகுக்கே விபூதி அடித்த ஒரு விஷயம்தான் எனிக்மா. எனிக்மா என்பது கிரிப்டோக்ராபி எனப்படும் முறையை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடியது.

நாஜி இராணுவத்தின் விமானம் முதல் நீர்மூழ்கி கப்பல் வரை அனைத்திலும் எனிக்மா இருக்கும். அதன் உதவியோடு எழுதப்படும் தகவல்களை அதன் உதவி இருந்தால் மட்டும்தான் கண்டறிய முடியும். அந்த மிஷின் உங்களிடம் இருந்தாலும் அவர்கள் செய்திருக்கும் செட்டிங்கை செய்திருந்தால்தான் அந்த செய்தியை கண்டறிய முடியும்.



இது எதுவும் இல்லாமல் அந்த தகவலை கண்டுப்பிடிக்க சராசரியாக 20 வருடங்கள் ஆகும். தினசரி இரவு 12 மணிக்கு அந்த செட்டிங் மாற்றப்படும். எனவே இன்றைய செய்தியை நீங்கள் கண்டுப்பிடித்தாலும் அதை கொண்டு நாளைய செய்தியை கண்டறிய முடியாது.

இதனால் வெளிப்படையாகவே வயர்லெஸ் சிக்னல் மூலமாக தங்கள் தகவல்களை பரிமாறி கொண்டனர் ஜெர்மானியர்கள். தினசரி அனைத்து நாடுகளாலும் அந்த தகவலை பெற முடியும். ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாது.

இந்த நிலையில் இதுக்குறித்த ஆய்வில் பங்குபெறும் பிரபல பிரிட்டன் கணிதவியலாளர் ஆலன் டியூரிங் கிரிஸ்டோபர் என்னும் கருவியை எனிக்மாவிற்கு எதிராக உருவாக்குகிறார். அதனால் எனிக்மாவின் மெசேஜை படிக்க முடியும். அதை எப்படி உருவாக்கினார் என்பதே படத்தின் கதை.. 

இதற்கு நடுவே தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இருந்த சட்ட ரீதியான பிரச்சனைகளையும் படம் பேசுகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் மக்கள் கண் மூடி தனமாக பைபிளை நம்பி வந்தனர். தன் பாலின ஈர்ப்பாளர்களை பைபிள் சாத்தான் என்றது. இந்த நிலையில் உலக போரில் தனது கண்டு பிடிப்பின் மூலமாக பலரையும் காப்பாற்றிய அந்த விஞ்ஞானி, மத மூட நம்பிக்கையால் சொந்த தேசத்தால் கொல்லப்படுகிறார்..

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...