மேற்கு சாளரம் - உலக சிறுகதைகள் தொகுதி 3
தமிழில்: எஸ்.ஷங்கர நாராயணன்
183 பக்கங்கள்
விலை: 120
உலகம் முழுக்க இருக்கும் பிரபலமான சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். தமிழ் சிறுகதைகளில் இருந்து மாறுபட்ட வகையில் எழுதப்பட்டுள்ள சில சிறுகதைகளை படிக்க முடிந்தது. முக்கியமாக ஒன்பது மைல் நடை, தனிமை, மணி பர்ஸ் போன்ற கதைகள் எல்லாம் ஒரு திரைப்படமாக்குவதற்கான தகுதியை பெற்ற கதைகளாக இருக்கின்றன.
சிறுகதைகளை பொறுத்தவரை உலக அளவில் பார்க்கும்போது இன்னமும் மாறுப்பட்ட சிந்தனைகளை பார்க்க முடிகிறது. அதிலும் ஒன்பது மைல் நடை கதை கொஞ்சம் சிறப்பானது. இரு நண்பர்கள் சாதாரணமாக பேசி கொள்கின்றனர்.
அப்போது ஒரு நண்பன் கூறுகிறான். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் வைத்து அதன் பெரிய காரணங்களை என்னால் கண்டறிய முடியும் என்று. அப்போது இன்னொரு நண்பன் தான் ரயில்வே நிலையத்தில் காதில் கேட்ட ஒரு வசனத்தை கூறுகிறான். அது என்னவென்றால் “ஒரு ஒன்பது மைல் நடை ஒன்றும் விளையாட்டு கிடையாது. அதுவும் இந்த மழையில்” இந்த வசனம் யாரால் எதற்காக சொல்லப்பட்டது என்பது தெரியாது.
அதை இன்னொரு நண்பன் அந்த வசனத்தின் வழியே கண்டறிகிறான். உதாரணமாக ஒன்பது மைல் நடை விளையாட்டு கிடையாது என்றால் எப்போதும் ஒன்பது மைல் நடப்பவனாக அவன் இருக்க மாட்டான். இந்த மழையில் அவன் ஒன்பது மைல் நடை நடக்க நினைக்கிறான் என்றால் அதி முக்கியமான ஒரு விஷயத்தை செய்ய போகிறான். இப்படியாக போய் ஒரு கொலை குற்றத்திற்கு காரணமான வசனமாக அந்த வசனம் அமைகிறது.
அதே மாதிரி மணி பர்ஸ் கதையை பொறுத்தவரை கீழே கிடந்து ஒரு நபர் ஒரு மணிபர்ஸை எடுக்கிறார் அதில் கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கடிதம் இருக்கிறது. அந்த மணிபர்ஸ்க்கு யார் சொந்த காரரோ அவருடைய காதலி 60 வருடங்களுக்கு முன்பு அவருக்கு எழுதிய கடிதம்.
அதை படித்த அந்த நபர் அந்த காதலியை கண்டறிந்து அந்த மணிபர்ஸ் ஓனருடன் சேர்த்து வைக்கும் கதையாக இது செல்கிறது. இப்படியாக ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சிறப்புகளை கொண்டுள்ளது.

Comments
Post a Comment