Skip to main content

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ்

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ்

page:65

நாளை போய் நேற்று வா ஒரு டைம் ட்ராவல் காமிக்ஸ் ஆகும். டைம் ட்ராவலை பொறுத்தவரை அதில் பல விதமான தியரிகள் உண்டு. பேக் டு தி ஃப்யூச்சர் மாதிரி கடந்த காலத்திற்கு சென்று தவறுகளை சரி செய்வதன் மூலம் எதிர்காலம் மாறும் என்பது ஒரு ரகம்.


ஆனால் கடந்த காலத்தில் எதையுமே நம்மால் மாற்ற முடியாது என கூறும் திரைப்படங்களும் உண்டு. ட்ரைம் ட்ராவலர் வைஃப் என்கிற திரைப்படம் அந்த மாதிரியான கதைக்களத்தை கொண்டது.

அதே மாதிரி மாநாடு மாதிரி நடந்ததே திரும்ப நடக்கும் டைம் லூப் கதைகளங்களும் உண்டு. இதில் இந்த காமிக்ஸ் வேறு வகையான டைம் ட்ராவல் ஸ்டோரி என்று கூற வேண்டும்.


கதையின்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கிறாள். காலையில் அவள் எழுந்திருக்கும் போது அவளை கொலை செய்ய ஒருவன் முயற்சிக்கிறான். இதற்கு நடுவே வயதான பெண் ஒருத்தி அந்த போலீஸ் அதிகாரியை காப்பாற்றுகிறாள்.

பிறகுதான் தெரிகிறது அந்த வயதான பெண்ணே அந்த போலீஸ் அதிகாரிதான். எதிர்காலத்தில் இருந்து இவரை காப்பாற்ற வந்துள்ளார். அந்த கொலைக்காரனும் எதிர்க்காலத்தை சேர்ந்தவன் தான்.




எதற்காக அவன் இவளை கொலை செய்ய நினைக்கிறான் என்பதை வைத்து கதை  செல்கிறது. ஆனால் டைம் லூப் மாதிரி ஒரு அம்சம் இதில் உள்ளது. அதாவது இந்த நிகழ்வுகள் இந்த காலவரிசைக்குள் திரும்ப திரும்ப நடந்துக்கொண்டுதான் இருக்கும்.

ஆனால் கதாபாத்திரங்கள் மட்டும் மாறுவார்கள். கடந்த காலத்தில் உள்ள எந்த நபரையோ கொல்வதற்கு அந்த கொலையாளி வந்துக்கொண்டேதான் இருப்பான். அவன் அவர்களை தீர்த்துக்கட்டுவதன் மூலம் அவனுக்கு எதிர்காலம் மாறாது. அந்த நிகழ்வு நடந்துக்கொண்டேதான் இருக்கும். எனவே அவன் திரும்ப திரும்ப பழி வாங்க வந்துக்கொண்டேதான் இருப்பான்.


அது கதை படிக்கும்போது என்ன விஷயம் என புரியும். ஆனால் நல்ல சயின்ஸ் பிக்சன் காமிக்ஸ்.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...