உலகப்போர் சமயங்களில் போர் நிறுத்த அறிவிப்பு அல்லது போர் நிறுத்தப்படும் நேரத்தில் எதிரி நாடுகள் சில வேலைகளை பார்க்கும். அந்த நாட்டின் நினைவு சின்னங்கள், அழகிய கட்டுமானங்களை முதலில் அழித்துவிடும்.
அதே போல அங்கிருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் செல்வங்களை சூரையாடிவிடும். அப்படியாக இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வெய்ன் ஷெல்டன் சிப்பாயாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் வெளியேறும் நாட்டில் இருந்து தங்க கட்டிகளை ராணுவ ஜெனரல் திருட சொல்கிறார்.
அவற்றை ரகசியமாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து விமானத்தில் திருடி செல்வது அவரது திட்டம். ஆனால் அரசுக்கான வேலை என நினைத்து அதை செய்கிறார் வெய்ன் ஷெல்டன். ஒரு கட்டத்தில் அவர் வெய்ன் ஷெல்டனை கொலை செய்ய நினைக்கிறார்.
பதிலடியாக அவரை கொன்று அந்த விமானத்தையும் காலி செய்துவிட்டு செல்கிறார் வெய்ன் ஷெல்டன். பல டன் தங்கம் தண்ணீருக்குள் போய் செட்டில் ஆகிவிடுகிறது. இது நடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆன பிறகு அதை தேடுவதற்கான அழைப்பு வெய்ன் ஷெல்டனுக்கு வருகிறது.
அதை ஏற்றுக்கொண்ட அவர் அந்த புதையலை கண்டறிந்தாரா என்பதாக கதை செல்கிறது. பரப்பரப்பான கதை அமைப்பை கொண்டு பெரிதாக சண்டை காட்சிகள் இல்லாமல் கதை செல்கிறது.

Comments
Post a Comment