ஸாகோர் - சிகப்பு நதி
Page - 130
சிகப்பு நதி கதை ஊர்களில் சுற்றி திரியும் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சூரிய மறைவின்போது இரத்த நிறத்திற்கு மாறும் ஒரு சிகப்பு குளம் இருக்கிறது.
அந்த குளத்தின் பக்கம் செல்லும் வேட்டையர்கள் மர்மமான முறையில் ஒரு அம்பால் கொல்லப்படுகின்றனர். ஆரம்பத்தில் அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதி செவ்விந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் வெள்ளையர்கள் அத்துமீறி உள்ளே வந்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றனர்.
அப்போது அப்பாவியான ஒரு செவ்விந்தியன் வெள்ளையனால் மூர்க்கமாக தாக்கப்பட்டு சாகிறான். அவன் இறக்கும்போது வெள்ளையர்களை மொத்தமாக பழி வாங்குவதாக சபதம் எடுக்கிறான். அவனது ஆவிதான் வேட்டையர்களை பழி வாங்குவதாக ஊரில் பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன.
இந்த சமயத்தில்தான் கதாநாயகன் ஸாகோர் அந்த ஊருக்குள் வருகிறார். அந்த குளத்தின் மர்மத்தை அவர் கண்டறிவதை வைத்து கதை செல்கிறது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டில் கதை முடிகிறது. ஆனால் கதை வெள்ளையர்களின் பேராசையை வெட்ட வெளிச்சம் ஆக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

Comments
Post a Comment