Skip to main content

இந்திக்கு இங்கே இடமில்லை - அறிஞர் அண்ணா

 

இந்திக்கு இங்கே இடமில்லை

அறிஞர் அண்ணா

பக்கங்கள் 42

 

தமிழ்நாட்டில் திமுகவின் வருகையும், இந்தி எதிர்ப்பும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்த விஷயங்கள் 1938 ஆம் ஆண்டே நேரு இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் கொண்டு வர நினைத்தார். ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

அதற்கு பிறகு 1965 காலக்கட்டங்களில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பகிரங்கமாக இந்தியை இந்தியா முழுமைக்குமான பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து இந்தி திணிக்கப்படுகிறது.



இந்நிலையில் தேசிய மாணவர் படை என்கிற அமைப்பு இந்தியை எதிர்த்து தமிழ்நாடு அளவில் போராட்டத்தை நிகழ்த்துகின்றன. அந்த சமயத்தில் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்தியை எதிர்த்து எழுதி வந்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும்.

அப்போது முதலமைச்சராக இருந்த பக்வசத்சலம் நிகழ்த்திய வன்முறையில் 200க்கும் அதிகமானோர் இறந்தனர். அதற்கு பிறகு இப்போது வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஜெயிக்கிறது.

அண்ணா முதலமைச்சராகிறார். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைதான் இந்த புத்தகம். ஏன் இந்தி எங்களுக்கு தேவையில்லை என்பதை மிக ஆணித்தரமாக இதில் அண்ணா பேசியுள்ளார் மட்டுமின்றி அப்போது நடைமுறையில் இருந்த மும்மொழி கல்வி கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை முதன்மை மொழியாகவும், முதன்மை பாடமாகவும் ஆக்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ் மொழி காக்கப்பட்டதில் வரலாற்றில் மிக முக்கியமான தருணம் அண்ணா சட்டமன்றத்தில் பேசிய தருணம்.

ஏன் இது வரலாற்றில் மிக முக்கியமான தருணம் என்றால் அந்த சமயத்தில் ஹிந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் தங்கள் தாய்மொழியை பிறகு இழந்தன. ராஜஸ்தானிலோ குஜராத்திலோ தங்கள் பாட்டிகள் பேசும் தாய்மொழி பேரப்பிள்ளைகளுக்கு புரிவதில்லையாம்.

இன்னும் சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால் ஆங்கில படங்களும் சரி, இந்தியாவில் இருக்கும் கார்ட்டூன் நெட்வொர்க் மாதிரியான சேனல்களிலும் சரி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆகிய மொழிகளில் டப்பிங் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் ஏன் குஜராத்தி, பஞ்சாபி மாதிரியான மொழிகளில் அவை டப்பிங் ஆவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தாலே போதும்.

அப்படிப்பட்ட நிலையில் தமிழ் காப்பாற்றப்பட்டதில் அண்ணாவின் பங்கு மிக முக்கியமானது. அதனாலேயே இதை வரலாற்றின் மிக முக்கிய தருணம் என குறிப்பிடுகிறேன்.

எனவே இந்த புத்தகம் தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஒரு பக்கத்தை பதிவு செய்துள்ளது. வாய்ப்புள்ளவர்கள் படித்து பாருங்கள்.

 

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...