Skip to main content

சாதி என்னும் அடிமைதனம்


இந்த சாதிய அடக்குமுறை என்னும் வன்முறை நம் இந்திய சமுதாயத்தில் 2000 வருடங்களாக வேறுன்றி நிற்க அடிப்படை காரணமே இந்த அடிமைதனம் என்னும் மன நோய் தான். இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியனுக்கும் தெரியும். சாதியம் என்பது ஒரு அநியாயமான விஷயம் என்று., இருந்தும் அதை நியாயபடுத்த இந்த இந்திய மக்கள் கூட்டம் பல முயற்சிகளை எடுக்க காரணம். எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு வக்கிர மனநிலை அதிசயமாக மனித இனத்துக்கு மட்டும் இருப்பது தான்.இந்த மனநிலை தான் ஆப்பிரிக்க கருப்பர்களை அமெரிக்கர்களிடம் அடிமையாக்கியது.
மனித இனம் அடிமைதனத்தை விரும்புகிறது. அதில் ஒரு அளவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறது. அதில் சாதிய அடிமை முறை மிகவும் வேறுப்பட்டது. ஒரு ஆப்பிரிக்கரை ஒரு அமேரிக்கர் அடிமையாக வைத்திருப்பது என்பது சாதரண அடிமை முறை உலகில் உள்ள அனைத்து அடிமை முறைகளும் இந்த வகையை சார்ந்தது தான். இனம்,மொழி,நிறம், மதம், நாடு இதனால் வேறுபட்ட ஒருவன் மற்றவனை அடிமைப்படுத்துவது தான் சாதரண அடிமை முறை. இதில் அடிமையாய் உள்ள அந்த மக்கள் அடிமை முறையை வெறுத்தும் அதை எதிர்த்தும் அது பிடிக்காமலும் வாழ்ந்து வருவார்கள். அதாவது அமேரிக்கர்கள் அனைவருக்கும் அடிமைதனம் பிடித்தாலும் ஆப்பிரிக்கர்களுக்கு அது குமட்டலை ஏற்படுத்தும் விஷயமாகவே இருக்கும்.
ஆனால் இந்த மொத்த அடிமை முறையில் இருந்து சாதிய அடிமை முறை மாறுபடுகிறது. எப்படி எனில் ஆப்பிரிக்க அடிமைக்கு இன்னொரு ஒரு ஆளை குடுத்து அந்த ஆப்பிரிக்கரிடம் நீ எனக்கு அடிமை . ஆனால் நான் குடுக்கும் இந்த ஆள் உனக்கு அடிமை . நான் உன்னை நடத்துவதை விட நீ இவனை கேவலமாக நடத்தலாம் என்று கூறினால் அதுதான் சாதிய அடிமை முறையின் சூத்திரம்.
ஒரே ஆள் ஒரே சமயத்தில் எஜமானனாகவும் அடிமையாகவும் வாழும் வாழ்க்கையை இந்த சாதிய அமைப்பு தருகிறது. தேவன் சாதியை சேர்ந்த ஒருவன் எப்போதும் தன்னை மேல் சாதி என்றும் தனக்கு கீழ் படிநிலை சாதி மக்களை துன்புறுத்தி கொண்டும். அவர்களை தகாத வார்த்தையில் வசவு பேச்சு பேசிக்கொண்டும் அதில் சுய இன்பம் கண்டுகொண்டும் வாழ்வான் இந்த இடத்தில் அனைத்து கீழ்படிநிலை சாதிக்கும் தான் எஜமான் என்பதில் பெருமிதம் கொள்வான்.ஆனால் உண்மை அப்படியில்லை இவன் என்றுமே பிராமணனுக்கு அடிமைதான் இவன் தன்னை மேல் சாதி என சொல்லிக்கொண்டாலும் இவனால் கோவில் கருவறையில் இருக்கும் கடவுள் உருவ சிலைகளை தொட முடியாது. வேதங்கள் பயின்று அர்ச்சகர் ஆக முடியாது ஏன் ஒரு பிராமணன் வீட்டில் தண்ணீர் கூட குடிக்க முடியாது. சாதிய படிநிலையில் தேவன் சாதியை சேர்ந்தவன் பிராமணனுக்கு அடிமைசாதி அவன் என்னதான் தன்னை மன்னர் வம்சம் என புகழாரம் செய்துக்கொண்டாலும் அவன் பிராமணனுக்கு சம்மாக முடியாதப்படி பிராமணன் சாதிய கட்டமைப்பை எழுப்பி உள்ளான். இது தேவன் சாதி காரனுக்கே தெரியும் என்ற போதிலும் அவன் தனக்கு கீழே தான் அடிமைபடுத்தி துன்புறுத்தி விளையாட ஒரு அடிமை கூட்டம் இருப்பதால் சாதியை ஏற்றுக்கொண்டான். உண்மையில் மொத்த இந்தியர்களை விட பிராமணன் அறிவாளியாக இருந்துள்ளான் . இந்த மொத்த ஆட்டு மந்தையையும் சாதி என்னும் ஒரு கயிற்றில் கட்டி அதன் பிடியை தன் கையில் வைத்துக்கொண்டான். இந்த பிடி தளராமல் இருக்க வேண்டும் எனில் இந்த ஆடுகள் தன்னை எசமானனாக நினைத்து கொண்டு மற்ற ஆடுகளை தனக்கு அடிமையாக பார்க்க வேண்டும் . அதை பிராமணன் ரொம்ப சரியாக செய்து முடித்தான்.
ஆனால் இந்த சாதிய அடக்குமுறையில் ஒரு மிக பெரும் பிரச்சனை பிராமணனக்கு உண்டு. தன்னை எஜமானனாக நினைத்து பிராமனனுக்கு அடிமையாய் இருக்கும் சத்திரியனையும் வைசியனையும் பற்றி பிரச்சனை இல்லை. சத்திரியன் தான் மேல்சாதி எனவும் வைசியனும் சூத்திரனும் தனக்கு கீழ் சாதி எனவும் வாழ்வான். அதே ஒரு வைசியன் தனக்கு சூத்திரன் கீழ் சாதி என வாழ்வான் . எனவே இவர்கள் இருவரும் பிராமணனின் மகுடிக்கு ஆடும் பாம்பாய் ஆனார்கள். ஆனால் இந்த இடத்தில் சூத்திரர்கள் தான் பிரச்சனை. சாதிய படிநிலையில் அவர்கள் இறுதி வரிசை என்பதால் அவர்களால் எஜமானர்களாக இருக்க முடியாது. இந்த மூன்று சாதி காரர்களுக்கு அடிமையாக வாழ பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்பது சாதிய படிநிலையின் சட்டம். ஒருவன் தான் அடிமை என உணர்ந்துவிட்டால் அவன் இந்த அடிமை முறையை எதிர்க்க தான் நினைப்பான். அதனால் என்று இருந்தாலும் பிராமணர்களுக்கு சூத்திரர்கள் பிரச்சனையை தான் தருவார்கள்.
எனவே ஒரு சூத்திரன் பேசவே இயலாதவாறு அவனை அடிமைபடுத்த வேண்டும் அதற்கு பிராமணன் கையில் எடுத்த ஆயுதம் தான் மனு தர்ம சாஸ்த்திரம். மனு தர்ம சாஸ்த்திரம் உலகில் எந்த வெறியை விடவும் சாதி வெறி முதன்மை இடத்திற்கு செல்ல பிராமணர்கள் பயன்படுத்திய பயங்கரவாத ஆயுதம்.
--------தொடரும்…
ராஜ்குமார்.கா

Comments

Post a Comment

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...