பெயர் : Stranger Things
ஸ்டேஞ்சர் திங்ஸ்
இது ஒரு நெட்ஃப்லிக்ஸ் (NETFLIX) நிறுவனத்தின்
தயாரிப்பு 2016 முதல் இணையத்தில் வெளியாகி வரும் இந்த தொடர் பார்வையாளர்களிடையே மிகுந்த
வரவேற்பை பெற்றுள்ளது .
இந்த
கதையில் கதாநாயகர்களாக 12 வயது மதிக்க தக்க சிறுவர்கள் சிறுமியர்கள் வருவதாலும் M தியரி
என கூறப்படும் அறிவியலை அடிப்படையாக கொண்டுள்ளதாலும் விருவிருப்பான கதைகளத்தை கொண்டுள்ள
ஒரு முக்கிய தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்றே சொல்லலாம்.
2016
ல் முதல் அத்தியாயமும் 2017 ல் இரண்டாம் அத்தியாயம்ய்ம் வந்த நிலையில் இந்த தொடருக்கு
அதிக வரவேற்பு வரவே அதிக பொருட் செலவில் தொடர் மேம்படுத்தி எடுக்கப்பட்டதால் 2018 ல்
அந்த தொடரின் மூன்றாம் பாகம் வெளியாகவில்லை. ஒரு வருடம் கழித்து இந்த வருடம் ஜூலை மாதம்
இந்த தொடரின் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளது..
கதைகரு :
அமைதியாக மக்கள் வாழும் ஒரு சிறிய நகரத்தில் ஒரு
விசித்திரமான சம்பவம் நடக்கிறது. ஒரு சிறுவன் காணமல் போவதில் துவங்கி பல மர்மமான நிகழ்வுகள்
நடக்க துவங்குகின்றன. இது இந்த அமைதியான சமூகத்தின் வாழ்க்கை முறையையும் அமைதியையும்
சீர்க்குழைக்கிறது. அரசாங்கத்தின் நிழலான ஒரு நிறுவனமும் இந்த மர்மத்திற்கு காரணமாய்
இருப்பதால் இந்த விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்கும்படி பார்த்துகொள்கிறது. தொடர்ச்சியாக
மர்மங்களும் இந்த நிழல் நிறுவனமும் அந்த நகரை மர்மங்களின் பூங்காவை மாற்றி கொண்டிருக்க
அதை கண்டுபிடிக்கவும் சரி செய்யவும் போராடும் கதாநாயகர்களான பள்ளி குழந்தைகளை கொண்ட
கதை தான் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்.
Stranger Things Trailer :
Links :

3 பாகங்கள், மூன்றும் பார்த்து விட்டேன்
ReplyDelete