ஒவ்வொரு வருடமும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். என்னதான் பட்டாசுகளின் விலை அதிகமானாலும் காசு செலவு செய்து பட்டாசு வாங்குவதை நாம் நிறுத்துவதே இல்லை.
ஆனால் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும் பறவைகளுக்கு ஒரு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன.
தீபாவளிக்கு அடுத்த நாளில் உடல் கருகி, இறகுகள் மட்டும் எரிக்கப்பட்டு என கண்டெடுக்கப்படும் பறவைகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகி வருகின்றன. பட்டாசுகளில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற மாசுக்கள் தீபாவளி சமயத்தில் காற்றில் அதிகமாக கலக்கப்படுவதால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் இது ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களையும் பாதிக்கிறது.
பட்டாசுகளின் உரத்த ஓசையானது பறவைகளை வெகுவாக பாதிக்கின்றன மற்றும் பயமுறுத்துகின்றன. பறவைகளை இது மனதளவில் பாதிக்கின்றன. இதனால் அவற்றால் மற்ற பறவைகளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. சில பறவைகள் இதனால் இரவு முழுவதும் கூட்டிற்கு செல்லாமல் வானத்திலேயே ஓய்வில்லாமல் பித்து பிடித்தது போல சுற்றிக்கொண்டிருக்கின்றன.
பறவைகள் அதிக உணர்திறன் கொண்டவை. உலகில் எந்த ஒரு மூலைக்கு சென்றாலும் தாயகத்தை கண்டறிந்து அவற்றால் வர முடியும். ஆனால் உரத்த சத்தமானது அவைகளை வெகுவாக பாதிக்கும். இதனால் அவைகள் உணர்திறனில் பாதிப்பு ஏற்பட்டு தங்கள் கூட்டிற்கு செல்வதற்கான வழியை மறந்துவிடுகின்றன. மேலும் நாய், ஆடு போன்ற கால்நடைகளையும் இந்த வெடி சத்தங்கள் பாதிக்கின்றன.
மேலும் வெடி புகைகள் பறவைகளின் சுவாச அமைப்பை வெகுவாக பாதிக்கிறது. இந்தியர்கள் வருடா வருடம் பட்டாசு வெடிப்பது மூலம் கோடிக்கணக்கான பறவைகளின் வாழ்க்கையில் விளையாண்டு கொண்டுள்ளனர் என கூறலாம். எனவே மக்களே இந்த தீபாவளிக்காவது வெடி வெடிக்காமல் இருப்போம்.. அடுத்த தலைமுறைக்கும் இதை சொல்லி குடுங்க. முடிஞ்ச அளவுக்கு குழந்தைகளுக்கு இதை சொல்லி கொடுங்க…
ref:dailypioneer.com
Comments
Post a Comment