Skip to main content

Dear Comrade Movie Review

பல்லை கடிச்சிக்கிட்டு மொத பாதியை மட்டும் பார்த்துட்டா அடுத்த பாதி அருமையான படம்.

ஆதித்ய வர்மா, இஸ்பேர் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் வரும் ரோசமான ஹீரோக்கள் வகையாறாவை சேர்ந்தவர் நம்ம ஹீரோ. இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்பவும் சுய நலமாத்தான் இருப்பாய்ங்க. கூட இருக்குற நண்பர்கள் சாப்பிட்டாய்ங்களான்னு கூட கேக்க மாட்டான். ஆனா நண்பர்கள் இந்த ஹீரோவை குழந்தை போல பாத்துக்குவாய்ங்க. டையப்பர் மாத்திவிடாததுதான் குறை. அது என்னான்னா அப்படி ஒரு நண்பர் கூட்டம் இருந்தா தான் ஹீரோவால என்ன வேணா செய்ய முடியும் இல்லையா. இப்படியாக ஹீரோ தோன்றுவய்ங்க எல்லாரையும் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்குறப்ப தலைவி ராஸ்மிகா எண்ட்ரி

நம்ம ஹீரோ பொம்பள பிள்ளையல்ட்ட எப்பவும் கடு கடுன்னேதான் இருப்பார். ராஷ்மிகாக்கிட்டயும் அப்படியே கடு கடுன்னு ஒரு முதல் சந்திப்பு. அதுக்கு பிறகு ரெண்டு பேருக்குள்ளயும் காதல் வருது. டெல்லிக்கே ராஜான்னால்லும் பல்லிக்கு புள்ளதான என்பது போல் காதல், அதனால் ஏற்படும் பிரிவு. நம்ம அடித்தடி ஹீரோவை திருத்துகிறது.

இதுல ராஸ்மிகாவோட கதாபாத்திரம் கொஞ்சம் தேவலையா இருந்துச்சு. எப்போதும் இந்த போக்கிரி பயக கிட்ட லவ் ஆனதும் அந்த பிள்ளைய பாடா படுத்துவாய்ங்க. அதுல அதிகமா ஆணாதிக்க தன்மையை பாக்கலாம். எப்போதும் கெஞ்சுறவங்களா பொம்பளை பிள்ளைகதான் இருப்பாங்க. ராஸ்மிகாவும் அப்படிதான் இருப்பா, ஆனா ஒரு லெவலுக்கு அப்புறம் போடா மயிறுன்னுட்டு போயிடும். அது கொஞ்சம் தேவலையா இருந்தது. அந்த பிரிவுக்கு அப்புறம் உள்ள கதைதான் படம்.


நம்ம ஹீரோ அடிதடி எல்லாம் விட்டுட்டு டிராவலர் ஆன பிறகு தன் காதலி அவளோட இலக்க விட்டு ரொம்ப தூரம் வந்துருப்பா. திரும்ப காதலி தன்னோட இலக்கை அடைய ஹீரோ எடுக்கும் பயங்கரமான முயற்சிகள் சொச்ச கதை. முதல் பாதி வழக்கமான க்ரிஞ்ஜா இருந்தாலும் அந்த எவ்ளோ பெரிய சைக்கோ மயிறா நீ இருந்தாலும் வாழ்க்கை செய்யுற செய்கைல சர்வமும் அடங்கி போயிடும்ங்குறது நல்லா இருந்துச்சு… இதை பூவே உனக்காக ஸ்டைல்ல சொல்லணும்னா ஒரு கல்லையும் சிற்பமாக்கும் சக்தி காதலுக்கு உள்ளதுங்கலாம். கடைசில என்னையும் ராஸ்மிகா ரசிகனா ஆக்கிட்டாய்ங்க.

அப்புறம் படத்துல அழைப்பாயா, நான் வருவேன் 2 பாட்டும் செம.

“உன் இலக்க நோக்கி போகும்போது பிரச்சனை வர்றப்ப உன்னோட பயணிக்கிற உண்மையான தோழன்தான் காம்ரெட்”

 

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...