ஷெர்லாக்
ஹோம்ஸின் சாகசங்கள்
முதலாம் பாகம்
சர் ஆர்தர்
காணன் டாயில்
தமிழில்:
சந்திரசேகரன்
1887 இல்
கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட துப்பறியும் கதை. துப்பறியும் கதைகளுக்கு
எல்லாம் குரு என இதை கூறலாம். இலண்டன் நகரில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் அமைப்பை
கொண்டவர்தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.
எந்த ஒரு
குற்றத்தையும் எளிதாக அடையாளம் காணக்கூடிய நுண்ணறிவை கொண்ட ஒரு கதாபாத்திரம். மொத்த
உலகமும் கொண்டாடி தீர்த்த கதை. அப்போதே பலர் உண்மையிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் இருப்பதாக
நம்பி ஷெர்லாக் ஹோம்ஸ் முகவரி என நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் 221பி பேக்கர் ஸ்டீரிட்
முகவரிக்கு கடிதங்களாக எழுதி தள்ளினார்கள் என்றால் அந்த நாவல் எப்படியான தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அந்த கொண்டாட்டத்திற்கு
தகுதியான நாவல்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இப்போதைய திரைப்படங்களில் நாம் பார்க்கும் துப்பறியும்
திறன் கொண்ட ஆசாமியை 1800 களின் இறுதியில் ஒரு மனிதன் உருவாக்கியிருப்பது பெரும் ஆச்சரியமான
விஷயம்.
130 வருடங்கள்
ஆகியும் ஷெர்லாக் ஹோம்ஸ் தாக்கம் இல்லாமல் அதிலிருந்து மாறுப்பட்ட ஒரு புதிய துப்பறிவாளனை
இங்கு உருவாக்க முடியாத அளவிற்கு நாம் படித்த அனைத்து துப்பறியும் கதைகளிலும் ஷெர்லாக்
ஹோம்ஸ் கலந்துள்ளார்.
கதையை எழுதிய
காணன் டாயில் ஒரு மருத்துவர் ஆவார். இவர் ஜோசப் பெல் என்பவரிடம் உதவியாளராக பணிப்புரிந்தார்.
ஜோசப் பெல் ஒரு துப்பறிவாளர். அவரை வைத்தே ஷெர்லாக் ஹோம்ஸை வடிவமைத்துள்ளார் காணன்
டாயில். Adventures of Sherlock Holmes என்கிற பெயரில் ஆங்கிலத்தில் 1892 இல் வெளிவந்த
புத்தகத்தின் தமிழ் பதிப்பில் முதல் பாகம் இந்த நூல்.
பி.கு: தற்சமயம்
221பி பேக்கர்ஸ் தெரு என்ற முகவரியை உருவாக்கி அங்கு ஷெர்லாக் ஹோம்ஸிற்கு மியூசியம்
கட்டியுள்ளது லண்டன். உலகிலேயே முதன் முதலாக ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு மியூசியம்
கட்டியது ஷெர்லாக் ஹோம்ஸிற்குதான்

Comments
Post a Comment