Skip to main content

ஸ்டார் வார்ஸ் ஜெடி ஃபாலன் ஆர்டர் (Star wars Jedi Fallen Order)

 எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் எனப்படும் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேம்தான் ஸ்டார்வார்ஸ் ஜெடி: ஃபாலன் ஆர்டர். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் எபிசோட் 3 ஆன ரிவேஜ் ஆஃப் சித் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த கேம் அமைந்துள்ளது.



இது ஒரு தெர்ட் பர்சன் பெர்ஸ்பெக்டிவ் கேம், பாயிண்ட் ஆஃப் வீவ் கேம் அல்ல. ஆனால் இது பெரும் கதை கொண்ட கேம். பொதுவாக கேம்கள் 8 மணி நேரம்தான் கேம் ப்ளே டைம் இருக்கும். ஆனால் 17 மணி நேரம் கேம் ப்ளே டைம் கொண்டது ஸ்டார் வார்ஸ் ஜெடி ஃபாலன் ஆர்டர்.

ஸ்டார் வார்ஸ் பற்றி தெரியாதவர்களுக்காக ஸ்டார் வார்ஸ் டிவேஞ்ச் ஆஃப் சித்தின் சுருக்க கதை

ஜெடி என்பவர்கள் மொத்த கேலக்ஸியையும் பாதுக்கப்பவர்கள். அவர்களுக்கு ஃபோர்ஸ் எனும் சக்தி இருக்கும். அதை கொண்டு அவர்களால் எந்த ஒரு மனிதனையும், பொருளையும் கவரவோ, தூக்கி எறியவோ முடியும். அதே போல டார்க் எனர்ஜி என்கிற சக்தியை பெற்ற கெட்டவர்களும் இருப்பார்கள். ஜெடிகள் லைட் சேபர் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பர். அதை கொண்டு மலையை கூட இரண்டாக பிளக்க முடியும்.

இவர்களிடம் இருந்து கேலக்ஸியை ஜெடி வீரர்கள் காப்பாற்றி வருவார்கள். இந்த நிலையில் ஓபி வான் கெனோபி என்னும் ஜெடி மாஸ்டர் அனேக்கன் ஸ்கை வாக்கர் என்கிற ஒருவனுக்கு ஜெடி பயிற்சி கொடுப்பார். ஆனால் அவன் தீயவனாக மாறிவிடவே அவன் கை, கால்களை வெட்டி போட்டுவிடுவார் ஓபிவான்.

இந்த நிலையில் அனேக்கன் தீய சக்திகளிடம் அடைக்கலம் பெற்று டார்த் வேடார் என்கிற புது அவதாரத்தை எடுக்கிறான். அவனது படைகளை கொண்டு கேலக்ஸியில் இருக்கும் மொத்த ஜெடிகளையும் அழிக்க உத்தரவிடுகிறான். அதே சமயம் பழி வாங்குவதற்காக ஓபிவானை தேடி வருகிறான்.

இப்போது கேமிற்குள் வருவோம்.

கெலக்டிக் ரிபபளிக் என பெயர் கொண்ட கேலக்ஸிக்கான ஜனநாயக அமைப்பு எம்பையர் என்கிற சர்வதிகார அமைப்பாக மாறுகிறது. ஜெடிகள் தேடி கொல்லப்படும் அந்த சமயத்தில் நமது கதாநாயகன் கால் கெஸ்டிஸ் ப்ராக்கா எனும் கிரகத்தில் மறைந்து வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் செகண்ட் சிஸ்டர் என்னும் வில்லியிடம் மாட்டும் கால் அங்கிருந்து தப்பிக்கிறான்.

டார்த் வெடாரின் பணியாட்களாக இருக்கிற செகண்ட் சிஸ்டர் மற்றும் நைனன்த் சிஸ்ட்ரை வேட்டையாட பயிற்சி வீரனாக இருக்கும் கால் கிரகம் விட்டு கிரகம் பயணிக்கும் பயணம் அதில் நடக்கும் அட்வெஞ்சர்களே இந்த கேம்.

இதற்கு நடுவே மோசமான அவனது பழைய நினைவுகள், அவை மூலம் அவன் திரும்ப பெரிய ஜெடி ஆவது என கதை செல்கிறது. கேம் இறுதிக்கு செல்வதற்கு முன்பு ஒரு ஜெடி மாஸ்டர் அளவிற்கான சக்தியை கால் பெறுகிறான்.

நடிகர் கேம்ரான் ரில்லேதான் கால் கெஸ்டிஸாக வடிவமைக்கப்பட்டுள்ளார். இந்த கேமின் இரண்டாம் பாகம் இந்த வருடம் ஏப்ரல் 28 இல் வெளியாக இருக்கிறது.


Tech Specification:

இந்த கேமை விளையாட 2ஜிபி டிடிஆர்5 கிராபிக்ஸ் போதுமானது. அதற்கே லேக் ஆகாமல் நன்றாக எடுக்கிறது. இந்த கிராபிக்ஸிற்கு காட் ஆஃப் வார் 4 மற்றும் மைல்ஸ் மோரல்ஸ் ஸ்பைடர்மேன் லேக் ஆகின்றன. ஆனால் அதற்கு சமமான கிராபிக்ஸை கொண்டிருந்த போதிலும் 60 எஃப்.பி.எஸ் குவாலிட்டியில் இந்த கேம் சிறப்பாக எடுக்கிறது.



Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...