டெக்ஸ் - மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல்
காமிக்ஸ்
பக்கங்கள்: 258
விலை:350
பப்ளிஷர்: லயன் முத்து காமிக்ஸ்
கொலம்பஸ் அமெரிக்கா என்கிற தேசத்தை கண்டுப்பிடித்த பிறகு அந்த தேசம் உருவாவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அவ்வளவு பெரிய தேசத்திற்கு போதுமான மக்கள் தொகை ஐரோப்பியர்களிடமே இல்லை. இந்த நிலையில் வெள்ளையர்கள் பலரும் அமெரிக்காவிற்கு வருவதற்காக நிறைய வசிகரமான திட்டங்களை அமல்ப்படுத்தினர்.
அப்படியாக பலரும் வந்துதான் அமெரிக்க தேசம் உருவானது. அவ்வளவு பெரிய தேசம் என்பதால் அங்கு ஏதோ அத்தி பூத்தாற் போல சில இடங்களில்தான் நகரங்கள் கிராமங்கள் மாதிரியான விஷயங்கள் இருந்தன. பெரும்பான்மையான இடங்கள் காடுகளாகதான் இருந்தன.
இதனால் குற்றங்களும் அங்கு அதிகமாக நடந்து வந்தன. அரசியல் சூழ்ச்சிகள், பதவிக்காக பழி வாங்குதல் என ஆபத்துக்கு பஞ்சமில்லாத நாடாக அமெரிக்கா இருந்த நேரத்தில் ரேஞ்சர்கள் என்கிற பதவியில் ஒரு நாடோடி அரசின் சட்ட அதிகாரிகள் கூட்டம் உருவானது.
அமெரிக்காவின் எந்த ஒரு பிராந்தியத்திலும் நடவடிக்கை எடுக்கும் திறன் படைத்த இவர்களில் ஒருவர்தான் கதாநாயகன் டெக்ஸ் வில்லர். இதில் இந்த மேஜிக் மொமண்ட் ஸ்பெஷல் கதையானது அதிகார அரசியலில் டெக்ஸ் வில்லர் மாட்டுவதை அடிப்படையாக கொண்டு செல்கிறது.
ஒரு சில்லரை பிரச்சனை காரணமாக மெக்ஸிகோ செல்லும் டெக்ஸ் வேண்டுமென்றே ஒரு குற்றத்தில் சிக்க வைக்கப்படுகிறார். அமெரிக்காவின் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதி என்பதால் அமெரிக்க ரேஞ்சர் என்கிற பதவி கூட அங்கு செல்லுப்படி ஆகாமல் சென்றுவிடுகிறது.
இந்த நிலையில் டெக்ஸ் வில்லருக்கு மரண தண்டனை அறிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த அவரது நண்பர்களான டைகர், கிட் கார்சன் மற்றும் மகன் கிட் அனைவரும் மெக்ஸிகோவிற்கு பயணமாகிறார்கள்.
கர்னல் ஒலிவேரா மற்றும் கவர்னர் ஸமொரோ இருவரும் ஆட்சி மாற்றத்திற்கு செய்யும் சதி வேலை இது என்பது ஒரு கட்டத்திற்கு மேல் டெக்ஸிற்கு தெரிகிறது. இருந்தாலுமே கூட ஒலிவேராவின் திட்டத்தின் படியே கதை சென்று கொண்டுள்ளது.
க்ளைமேக்ஸில் டெக்ஸ் அந்த சிறையில் இருந்து தப்பிக்கிறார். மீதி கதை இரண்டாம் பாகத்தில் தொடர்கிறது.
25.டெக்ஸ்.. மெக்ஸிகோ மேஜிக் ஸ்பெஷல் (258)
மெக்ஸிகோ சிறையில் இருந்து தப்பிக்கும் டெக்ஸ் வில்லர். கவர்னரையும் அவரது அரசையும் நிர்மூலமாக்க முடிவு செய்கிறார். அதுவும் அமெரிக்க அரசின் உதவி இல்லாமலேயே. இதற்காக உள்ளூர் புரட்சி படை ஒன்றை கூட சேர்த்து கொண்டு ஒரு திட்டம் தீட்டுகிறார்.
மிகப்பெரிய மெக்ஸிகன் ராணுவத்திற்கு எதிராக ஒரு சிறிய புரட்சி படையும் டெக்ஸ் வில்லரும் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் டெக்ஸ் எப்படி வியூகம் வகுத்து அவர்களை தட்டி தூக்குகிறார் என்பதுதான் கதை.
இந்த கதை முடியும்போது வாவ் என நம்மை சொல்ல வைக்கும் அளவில் இருக்கும் டெக்ஸ் வில்லரின் திட்டங்கள். மிக சுறு சுறுப்பான கதை.


Comments
Post a Comment