Skip to main content

புளிக்க வைத்த அப்பம் - Book Review

 

வன்முறை யார் மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம் உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1.

தன் தேசத்தில் யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும்.

உலகம் முழுக்க உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன் பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல் இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர்.



இவளும் இப்படிதான் வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள பொருட்களை எடுக்கும் வேலையை அம்மா செய்கிறாள்.

கொலை செய்யப்பட்ட யூதர்களை புதைக்கும் வேலையை தம்பி செய்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களுமே கொல்லப்படுகின்றனர். ஹிட்லர் இறப்புக்கு பிறகு அவள் ஒரு வீட்டில் சமையல்காரராக பணிப்புரிகிறாள். அங்கு புது உணவுகளை படைப்பது அவளுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. அப்போதில் இருந்து அவள் சமைத்துக்கொண்டே இருக்கிறாள்.

இப்படியாக ஒரு யூத பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து ஒட்டு மொத்த யூதர்களின் பாடுகளையும் விளக்குகிறது இந்த கதை

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...