Skip to main content

சாம்பலின் சங்கீதம் - Graphic Novel

 

சாம்பலின் சங்கீதம்

கிராபிக் நாவல்

மொத்த மனிதக்குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்த கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று அணுகுண்டு. இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் திரும்ப உலகப்போரே உருவாகாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்த ஒரு கண்டுப்பிடிப்பு.

அணுக்கரு குறித்த சோதனை என்பது பல நூற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் அறிவியலில் தியரியாக கூறப்படும் தத்துவங்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். இதுல எப்படினே லைட் எறியும் என்பதாகதான் அவர்களுக்கு இருக்கும்.

ஆனால் ராஜ ராஜ சோழனிடம் சென்று இண்டர்நெட் என்று ஒன்று எதிர்காலத்தில் வரும் அதில் உலகில் உள்ள எல்லா தரவுகளும் கிடைக்கும். ஆனாலும் பெரும்பாலானோர் கேலிக்கைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவர் என கூறினால் அவர் நமக்கு மண்ட கோளாறு என்றே நினைப்பார்.

அணுவை பிளப்பதன் மூலம் பெரும் ஆற்றல் வெளிப்படும் என்பதும் ஆரம்பத்தில் அப்படியான விஷயமாகதான் பார்க்கப்பட்டது. இந்த புத்தகம் அணுகுண்டு குறித்த யோசனை உருவானதில் துவங்கி ஹிரோஷிமாவில் அமெரிக்கா குண்டு போட்டவரை அரசியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் உலக நாடுகளுக்குள் அணுகுண்டு குறித்து நடந்த ஆராய்ச்சியை விவரிக்கிறது.



ஒரு நாட்டவர் நல்லவர் மற்றவர்கள் கெட்டவர்கள் என்ற பாணியில் இல்லாமல் போரில் இறங்கின எல்லா நாடுமே சல்லி பயல்கள்தான் என்கிற பாணியில் புத்தகம் அமைந்திருப்பது சிறப்பு.

ஹெச்.ஜி வெல்ஸ் என்கிற அறிவியல் புனைவு எழுத்தாளர் ஒரு மாயாஜாலமாக அவருடைய புத்தகத்தில் முதன் முதலாக அணுக்கரு ஆற்றலை குறிப்பிட்டார். ஆனால் அது சாத்தியமான விஷயம்தான் என்பதை அணுக்கரு சங்கிலி தொடர் வினையை கண்டுப்பிடித்ததன் மூலம் நிரூபணமாக்கியவர் விஞ்ஞானி சில்லார்ட்.

ஆக இந்த விஷயத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் இவர்கள் இருவர்தான். ஆனால் அதே சில்லார்ட்தான் இறுதியில் அணு ஆயுதங்கள் வேண்டாம். ஜப்பான் மீது தாக்குதல் நடத்தாதீர்கள் என்றும் மன்றாடினார். எப்படி இருந்தாலும் பூமிக்கு இப்படியான ஆபத்தை உண்டாக்கி அதை அரங்கேற்றிய பெருமை வழக்கம் போல வெள்ளையர்கள் அல்லது அமெரிக்கர்களையே சேரும்.

வரலாறு முழுக்க வெள்ளையர்கள் செய்த பெருங்கொடுமைகளில் இதுவும் ஒன்று. தற்சமயம் உலகில் உள்ள அணுகுண்டுகளை கொண்டு மூன்று முறை மொத்த பூமியையும் அழிக்க முடியுமாம். இதுதான் இப்போது உலக போர்கள் நடக்காமலும் தடுத்து வருகிறது. இந்த புத்தகம் மிக விவரமாக அணுகுண்டு ஆராய்ச்சி குறித்து பேசுகிறது. உலக மக்கள் அனைவருமே படிக்க வேண்டிய புத்தகம்.

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...