Skip to main content

பேய்ச்சி - புத்தக விமர்சனம் 2

 

பேய்ச்சி – ம.நவீன்

உலகம் முழுக்கவே மதம் மற்றும் மதம் சார்ந்த அரசியல்கள் வருவதற்கு முன்பிருந்தே இறந்தவர்களை தெய்வங்களாக வணங்கும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் குறிப்பாக சைவ சமயத்தில் குறிப்பிடப்படும் சிவன், அம்மன், முருகன் போன்றவர்கள் எல்லாம் வைணவம் வருவதற்கு முன்பு ஒவ்வொரு நிலங்களில் குல தெய்வங்களாகவும் வட்டார தெய்வங்களாகவும் வணங்கப்படும் வழக்கம் இருந்துள்ளது.

குல தெய்வ வழிபாட்டில் இருந்தவர்களை பெரு தெய்வ வழிபாட்டுக்குள் கொண்டு வரவே அம்மன் ஸ்ரீ ரங்கனின் தங்கையாகவும், சிவனின் மனைவியாகவும் ஆக்கப்பட்டார். ஆனால் உண்மையில் கர்ப்பினி பெண்கள், நோயால் இறந்த பெண், சிறுமியாக இருக்கும்போதே இறந்தவர்களே பெரும்பாலும் அம்மனாக வணங்கப்பட்டு வந்துள்ளனர்.

இன்றும் அம்மன் கோவில்களில் சிவனுக்கு அதிகமாக சன்னதியை பார்க்க முடியாது. அம்மன் கோவில்களுக்கு வெளியே காவல் தெய்வங்களாக கூட பெண் தெய்வங்களே இருப்பார்கள்.

அப்படி இருந்த அம்மன்களில் மாரியம்மன், காளி, ஆனைமலை ஆங்கார நீலி மாதிரியான துஷ்ட தெய்வங்களின் வரிசையில் முக்கியமான தெய்வம் பேச்சியம்மன்.

பேய்ச்சியை பெண்களின் பாதுகாவல் தெய்வமாக
மையப்படுத்தி மலேசிய எழுத்தாளரான நவீன் எழுதிய நாவல்தான் பேய்ச்சி. இவரது முதல்நாவல் இது.

ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் ஒரு குக்கிராமத்தில் துவங்கும் கதை பிறகு முழுக்க முழுக்க மலேசியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களோடு பயணிக்கிறது. மலேசியாவில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களின் வாழ்க்கை நிலை, பண்ணை வேலை முறை, சீனர்களின் அடக்குமுறை போன்றவை 2000 காலக்கட்டங்களில் எப்படி இருந்தது என்பதை நாவல் வழி வெளிப்படுத்தியுள்ளார் எழுத்தாளர்.

இதனாலேயே இந்த புத்தகம் மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கதையில் பேய்ச்சி அம்மனை ஏதோ திடீரென வரும் தெய்வம் என்பதாக காட்டவில்லை, மாறாக ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பேய்ச்சி இருக்கிறாள். அந்த பெண்களின் அதிகமான உக்கிரத்தில் இருந்து பேய்ச்சி வெளிப்பட்டு கொண்டே இருக்கிறாள். ஒரு நாகமாக, வண்ணத்து பூச்சியாக, குருவியாக என பேய்ச்சி ஏதோ ஒரு வகையில் மக்களை சுற்றி கொண்டே இருக்கிறாள்.

எப்போதெல்லாம் மக்களுக்கு தொல்லை வருகிறதோ முக்கியமாக பெண்ணுக்கு அநீதி நடக்கிறதோ அப்போதெல்லாம் பேய்ச்சியின் ருத்ர தாண்டவம் துவங்குகிறது. பேய்ச்சியை காட்டிய விதமும் சரி, மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறையும் சரி பாரபட்சமின்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்க வேண்டிய புத்தகம்..



Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...