எவ்வளவு
நேரம் இப்படியே மயங்கி கிடந்தார் என்று நாரயணனுக்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது
அவர் போட்டிருந்த உடைகளும் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிந்தது. உடலின் பாகங்கள் கண்களுக்கு
புலப்படவில்லை. ஏதோ ஒரு யோசனையில் போட்டிருந்த அனைத்து உடைகளையும் கழற்றி எறிந்தார்.
“ஒரு
வேளை கனவு ஏதும் கண்டுகொண்டு இருக்கிறோமோ. போய் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டால் கனவு
கலைந்து நிஜ உலகிற்கு சென்றுவிடலாம்” என யோசித்தார்.
ஆனால் கனவில் மயக்கமாக முடியாதே. முற்றிலும் குழப்பமாக இருந்தது. மீண்டும் கண்ணாடியை
எடுத்து பார்த்தார். இந்த முறை முகம் சுத்தமாக தெரியாமல் போயிருந்தது.
“இது
என்னடா நமக்கு வந்த சோதனை… நேற்று பகவானிடம் குடும்ப பிரச்சனை குறித்து வஞ்சனையாக சில
திட்டுக்கள் திட்டியதால் பகவான் நமக்கு சாபமளித்துவிட்டாரா?”
மிகவும்
குழப்பமாக இருந்தது நாரயணனுக்கு. திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம்
“இது
ஏன் நமக்கு கிடைத்த வரமாக இருக்க கூடாது”.
நாராயணன்
ஒரு கலாச்சார காவலர் .மனைவி இடை தெரிவது போல ஆடை உடுத்தினாலே திட்டுவார். அதற்கு காரணம்
உண்டு அவர் பெண்கள் மேல் அதிக ஈடுபாடு உடையவர். கோவிலுக்கு மனைவியோடு செல்லும் போது
பெண்கள் கண்களை மூடி கடவுளை வணங்கும் நேரத்தில் அவர்கள் அங்கங்களை பார்த்து ரசிப்பது
நாரயணனுக்கு மிகவும் பிடித்த நிகழ்வு. தன்னை போன்றுதானே உலக ஆண்கள் அனைவரும் இருப்பார்கள்
என்ற எண்ணத்தாலேயே தனது மனைவிக்கு உடை குறித்து பல சட்டங்களை விதிப்பவர் நாராயணன்.
பழைய
காலத்து சரோஜா தேவி முதல் இப்போது உள்ள சவிதா பாபி வரை பல இலக்கியங்களை பயின்றவர் என்றாலும்
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவர். ஆனால் தற்சமயம் வந்த இந்த சக்தி நேற்று பார்த்த இன்விசிபிள்
மேன் என்ற ஆங்கில படத்தையும் பக்கத்து வீட்டு பரிமளா வையும் நாராயணனுக்கு நினைவூட்டியது.
அப்போது தான் தனது மனைவி தேவி தன்னை கடந்து செல்வதை கண்டார். திடீரென்று பகவான் ராமர்
மடேர் என்று தலையில் தட்டியது போன்ற ஒரு ஞானம். தன் மனைவி கணவனே கண் கண்ட தெய்வம் என்று
நம்பி வாழ்கிறாளே அவளை விட்டு பரிமளத்தை நினைத்தோமே. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்.
அனைத்து
எண்ண ஓட்டங்களும் திடீரென்று நின்றன. இப்போது நாராயணனை பயம் பிடித்துக்கொண்டது. ஆயுளுக்கும்
யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு வாழ்வை வாழ போகிறோமோ என்கிற பயம் தான் அது. ஸ்டேட் வங்கியில்
மாதம் 80,000 சம்பளம் வாங்கும் உயர் ரக ஏழைகள் வகுப்பை சார்ந்தவர் நாராயணன். தற்போதைய
நிலையில் வேலைக்கு போகாமல் அந்த சொற்ப தொகையும் கிடைக்காமல் போய்விடுமே என்ற எண்ணம்
பயமுறுத்தியது.
“அதான்
கண்ணுக்கு தெரியாமல் மறைஞ்சுட்டோமே. இனி கடைகளில் கல்லா பெட்டியையே திருடலாம்.”
பல எண்ண ஓட்டங்கள் திரும்ப ஓட ஏதோ சத்தம் கேட்டு
திரும்பி பார்த்தார் நாராயணன். அது வள்ளியின் குரல்தான் அவள் நாராயணனை காணவில்லை என்று
தேடிக்கொண்டு இருந்தாள். மணி எட்டு ஆகி இருந்தது. வேலைக்கு நேரமாகி கொண்டிருந்தது அப்போது
தான் அவருக்கு தெரிந்தது. இதை எல்லாம் மீறி பரிமளம் குளிக்கும் சோப்பின் வாசனை நாராயணனை
கடந்து சென்றது. பரிமளம் வீடு அதிக தொலைவு என்றாலும் அவள் குளிக்கும் மைசூர் சான்டல்
சோப்பின் வாசம் தெருவுக்கே மணக்கும். திடீரென்று கிருஷ்ண பகவான் புற மண்டையில் தட்டி
தனது லீலைகளை கூற ஆரம்பித்தார். நாராயணின் மனதில் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் இடையே
ஒரு போர் நடந்தது அதில் கிருஷ்ணரே வென்றார். கிருஷ்ணர் அளவுக்கு லீலைகள் செய்யாவிட்டாலும்
பரிமளம் குளிப்பதை பார்க்கும் தனது ஆசையை நாராயணனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பரிமளம்
ஏழை வீட்டு பெண். கூரையில் குளியல் அறை கட்டப்பட்டிருப்பதால் கூரை இடுக்கு வழியாகவே
குளிப்பதை நன்கு பார்க்க முடியும். வேக வேகமாக நடந்தார் நாராயணன் பரிமளத்தை காண ஆசை
பெருக்கிடுத்து ஓட நாராயணனும் பரிமளம் வீட்டை நோக்கி ஓட கிட்டதட்ட வீட்டில் இருந்து
பாதி தூரம் கடந்து மெயின்ரோட்டை வந்தடைந்த போது உடலில் திடீர் மாற்றம். ஓடிய கால்கள்
அப்படியே நின்றன. புதிய 2000 செல்லாது என அறிவித்தது போன்ற ஒரு அதிர்ச்சி. நாராயணனுக்கு
தன்னுடைய உடல் மெலிதாக கண்ணுக்கு தெரிந்தது…. கூட்டம் அலை மோதும் மெயின் ரோட்டில் அடித்த
ஐந்து நிமிடத்தில் நடக்க போகும் சம்பவத்தை எண்ணி வேகமாக அடித்து கொண்டது ஒட்டு துணி
இல்லாமல் நின்று கொண்டிருந்த நாராயணனின் இதயம்….
தொடரும்…
Comments
Post a Comment