Skip to main content

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாரயணன்



“சாணியில் என்ன மணக்குதோ தினமும் என்ன கரைக்க விட்டுடுறாள் இந்த சுக்கு” புலம்பியப்படியே சாணியை கரைத்து கொண்டிருக்கும் நாராயணன் ஐயர் ஒன்றும் முற்போக்கு சிகாமணி கிடையாது. மாமுலான பிராமணாள் போன்றே மாட்டு மூத்திரத்தின் மீது தீராத ஈடுபாடு உண்டு அவருக்கு. யாராவது
“ஏன் ஓய் மாட்டு மூத்திரத்தை போய் மடக்… மடக்குன்னு குடிக்கிறியே என்று கேட்டால் உடனே ஒரு காரணத்தை எடுத்துவிடுவார் நாரயணன்.
“அடேய் சுக்கு மாட்டு கோமியத்துல உள்ள அறிவியல் தெரியுமாடா நோக்கு” அடுத்த ஐந்து நிமிடத்தில் கேள்வி கேட்டவன்… ஓட்டம்தான்..
தினமும் வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் வயிற்றை சுத்தப்படுத்திவிடும் மற்றும் ஆஸ்துமாவை குணபடுத்தும் என்று இணையத்தில் எவன் சொல்வதையோ கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக தினமும் காலை கோமியம் குடித்து குடித்து இப்போழுது அதுவே பழகிவிட்டது நாரயணனுக்கு.
அதிலும் நாரயணுக்கு தன் வீட்டு செண்பகத்தின் கோமியம் பிடிக்காது. அவள் பண்ணை மாடு தினமும் வைக்கோல் மட்டும் தான் உண்பாள். ஆனால் முனியன் வீட்டு கறுப்பி இருக்காளே அவளை போல் சத்தான கோமியம் ஆசிய கணடத்தில் எந்த மூலையிலும் கிடைக்காது அவள் ஊர் சுற்று உலா வரும் மேய்ச்சல் பசு. கண்டது கடையது என்று மேய்வாள். நல்ல தரமான கோமியத்தை தருவாள். இதனாலேயே நாராயணனுக்கு கறுப்பியை பிடிக்கும்.
தினமும் காலை 6 மணிக்கெல்லாம் கோமியம் கொண்டு வரும் முனியன் மணி 7 ஆகியும் இன்னும் வரவில்லை. தாமதமாய் வந்தால் கூட ஆறரைக்குள் வரும் முனியன் மணி ஏழு ஆகியும் வரவில்லை. வேறு வழியில்லை இன்று செண்பகத்தின் கோமியம் தான் தலையெழுத்து..
ஆனால் அதிலும் பெரிய பிரச்சனை வந்தது. செண்பகம் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. சொர்க்க வாசல் திறக்க பக்தர்கள் காத்திருக்கும் கணக்காய் எப்பொழுது கோமியம் வரும் என்று பாத்திரத்தை வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார் நாரயணன். சரியாக 7.25 க்கு கதவு திறந்து வெளிர் மஞ்சள் நிறத்தில் கோமியம் வந்தது. மட மட வென்று கோமியத்தை பிடித்து கட கட வென குடித்தார் நாரயணன்.
கறுப்பியின் கோமியம் போல் மிதமான உப்புடன் இல்லாமல் மிகவும் உவர்ப்பாய் இருந்தது செண்பகத்தின் கோமியம்.
“இந்த சுக்குக்கு நான் கோமியம் குடிக்காமலே இருந்திருக்கலாம்.”
முகத்தை சுளித்துக்கொண்டு சொன்னார் நாராயணன்.
“இந்த 21 ஆம் நூற்றாண்டிலே இவ்வளவு உப்பாக ஒரு கோமியத்தை இந்த சண்டாளியால் தான் குடுக்க முடியும்”.
ஏசியப்படியே சவரம் செய்ய கண்ணாடியை எடுத்தார் நாரயணன் கண்ணாடியை பார்த்ததும் அதிர்ந்தே போய்விட்டார் நாராயணன். உலகில் நடக்க கூடாத ஒன்று நடந்துவிட்டிருந்தது. அப்படி என்ன இந்தியாவின் பொருளாதாரம் ஏற்றம் கண்டுவிட்டதா…அதற்கு கூட இப்படி கலவரப்பட்டிருக்க மாட்டார் மனிதர். அவரது முகம் பாதி மறைந்து இருந்தது. அவர் பின்னால் இருக்கும் புதிதாக வாங்கிய சோனி எல்.யி.டி தொலைக்காட்சி திருமண புகைப்படம், போன வாரம் மனைவியை அடிக்க தூக்கி எறிந்த பூந்தொட்டி சுவற்றில் அடித்து அதனால் ஏற்பட்ட கறை எல்லாம் தெள்ள தெளிவாக தெரிகிறது. அதனூடே அவருடைய முகம் மங்கலாய் தெரிகிறது.
எந்த சண்டாளனாவது போட்டோஷாப்பில் போட்டு நமது ஒப்பாசிட்டியை குறைத்துவிட்டானா ? அல்லது அந்த சனியன் பிடிச்ச தா?./$%ளி சுப்பு என் மேல் பகை கொண்டு எதாவது பில்லி சூனியம் என்று அவிழ்த்து விட்டானா ? (சுப்பு நாரயணணின் பரம எதிரி .பல காலமாக இருவருக்கும் பல பிரச்சனைகள்) அல்லது பகவானில் கலியுக கிருஷ்ண லீலைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேனா?
பல வித யோசனைகள் மனதில் ஓட அங்கேயே மூர்ச்சையானார் நாராயணன்.
---தொடரும்

Comments

  1. சிறப்பு, தொடரட்டும்..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...