Skip to main content

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன்

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன்



பக்கங்கள் 34

பாரதிதாசன் தொடர்ந்து திராவிட கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவரது எழுத்துக்களிலும் அதன் பிரதிபலிப்பு என்பது இருந்துள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய இரு கதைகள்தான் அகத்தியன் விட்ட புதுக்கரடி மற்றும் நல்லமுத்துவின் கதை


கரடி விடுகிறான் பார் என நாம் கூறுவோம் இல்லையா.. அதனை அடிப்படையாக கொண்டுதான் அகத்தியன் விட்ட புதுக்கரடி கதை அமைந்துள்ளது. அகத்தியன் தான் தமிழுக்கு இலக்கணம் அமைத்ததாகவும் அதனை அவர் சிவப்பெருமானிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கதை உண்டு.


அதனை தொடர்ந்து அவரது சீடர் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் எழுதியாக ஒரு கதை உண்டு.


இப்படியான கரடிகளைதான் பாரதிதாசன் விமர்சிக்கிறார். ஒன்றாக இருந்த தமிழர்கள் மத்தியில் பிராமணியத்தை பரப்ப வந்த முனிதான் அகத்தியன். அகத்தியன் வந்த பிறகு பல அறியாமைகளை அவன் மக்கள் மத்தியில் பரப்புவதாக கதை செல்கிறது. 

நல்லமுத்துவின் கதையை பொறுத்தவரை அவன் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என வாழ்ந்து வருகிறான். அப்பன் பக்கத்து கிராமத்தில் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்தப்போதும் அப்பனை மதிக்கிறான். கோபம் ரோசம், நல்லது கெட்டது தெரியாதவனாக இருக்கிறான். இந்த நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காக அவன் போராடி ஜெயில் செல்கிறான்.


அங்கு தி.கவை சேர்ந்தவர்களோடு அவனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து நல்லமுத்து தந்தைக்கு செய்யும் செய்கைகளை வைத்து கதை முடிகிறது.

திராவிட கொள்கைகளை பாரதிதாசன் அதிகமாக போற்றியுள்ளார். அதன் வீச்சம் இந்த 2 கதைகளிலுமே வெளிப்படையாக தெரிகிறது. மேலும் பழமையும், அறியாமையும் ஊறிப்போன அந்த காலக்கட்டத்தில் தி.கவின் தேவையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...