Skip to main content

வந்த பாதை - காமிக்ஸ்

பென் என்கிற நிறுவனம் குழந்தைகளுக்கு சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல முன்னெடுப்பாக சமூகநீதி காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். போன காமிக் கானின் போதே அரசியல் தொடர்பான மக்களின் முதல்வர் என்கிற வீடியோ கேமை வெளியிட்டிருந்தனர்.

அதில் கேம் விளையாடும் நாம்தான் முதல்வராக இருப்போம். நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து நாம் முதல்வராக முடியுமா இல்லையா? என கேம் செல்லும்.

அதில் கேட்கப்படும் கேள்விகளே சமூக நீதி அடிப்படையில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் அடுத்த முன்னெடுப்பாக தமிழில் குழந்தைகளுக்கு சமூகநீதியை பயிற்றுவிக்கும் ஒரு முன்னெடுப்பாக மூன்று காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர்.

வந்த பாதை காமிக்ஸை பொறுத்தவரை வயதான பெரியவர் எப்போதுமே புத்தகங்களை படித்து வருபவராக இருக்கிறார். இந்த நிலையில் சாதிய பாகுபாடு உள்ள அந்த கிராமத்தில் தொடர்ந்து பெரியவரின் தெருவை சேர்ந்த குழந்தைகள் உடல் அளவில் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர்.



அதற்கு எதிராக பெரியவர் எடுக்கும் போராட்டங்களை வைத்து கதை செல்கிறது. இந்த பெரியவர் அப்படியே பெரியாரின் சாயலாக இருக்கிறார். பெரியார் பெரிய அளவில் செய்த அத்தனை போராட்டங்களையும் தனது கிராமத்தில் செய்கிறார் பெரியவர்.

சமூகநீதி என்னும் கருத்தை ஏன் குழந்தைகளிடம் கடத்த வேண்டும் என்கிற கேள்வி சிலருக்கு வரலாம். சமூக வலைத்தளங்களில் நண்டு சிண்டுகள் எல்லாம் சாதிய கயிறை கட்டிக்கொண்டு நாங்கள் ஆண்ட பரம்பரை என பெருமை பேசுவதை பார்க்க முடிகிறது.

நவீன யுகத்திலும் கூட இன்னமும் பல வருடங்கள் பின்னோக்கி வாழும் அந்த கூட்டங்களே சாதிய பாகுப்பாட்டை பிஞ்சிலையே விதைக்க ஆர்வம் காட்டும்போது அதை தடுப்பதற்கான முன்னெடுப்பும் சிறுவர் இலக்கியத்தில் இருந்தே துவங்க வேண்டும்.

அதற்கு இந்த காமிக்ஸை ஒரு முன்னெடுப்பாக பார்க்கிறேன். மிக விவரமாக சமூக நீதியை குழந்தைகளிடம் பேசினால் அவர்களுக்கு புரியாது. எனவே அவர்களுக்கு புரியும் அளவில் இந்த காமிக்ஸ் பேசுகிறது. நல்ல முயற்சி.. இதை முன்னெடுத்த குழுவிற்கு வாழ்த்துக்கள்.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...