Skip to main content

ஸ்பூன் அண்ட் ஒயிட் குத்துங்க எசமான் குத்துங்க - காமிக்ஸ்

9-ம் நூற்றாண்டில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பலர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். குறிப்பாக கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அங்கு ஏராளமான சீனர்கள் குடியேறினர்.



இவர்கள் தமக்கென ஒரு சமூகத்தை உருவாக்க விரும்பினர். இதன் விளைவாக சைனா டவுன்கள் தோன்றின. இந்த டவுன்களில் சீன உணவகங்கள், கடைகள், கோவில்கள் மற்றும் சமூக கூடங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சீன கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பேணிக்காக்கப்பட்டன.

சில முக்கியமான சைனா டவுன்கள் பின்வருமாறு:

  • சான் பிரான்சிஸ்கோ சைனா டவுன்: இது அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் பெரிய சைனா டவுன் ஆகும்.

  • நியூயார்க் நகரம் சைனா டவுன்: இது நியூயார்க் நகரில் உள்ள ஒரு பெரிய சைனா டவுன் ஆகும்.

  • சிகாகோ சைனா டவுன்: இது சிகாகோ நகரில் உள்ள ஒரு சைனா டவுன் ஆகும்.

ஸ்பூன் அண்ட் ஒயிட் என்பது காமிக்ஸில் வரும் இரண்டு நாயகர்களின் பெயர்கள்தான். அமெரிக்காவில் பூர்வ குடிகளாக செவ்விந்தியர்களை தவிர பாக்கி எல்லாம் வந்தேறிகள்தான்.


ஆனால் அதில் வெள்ளையர்கள் மட்டும் ஏனோ தங்களை பூர்வ அமெரிக்கர்களாகவும், அமெரிக்கா தங்களுடைய தேசம் என்று நினைத்து வருகின்றனர்.இதனாலேயே எப்போதும் ஆப்பிரிக்கர்கள், சீனர்கள் மாதிரியான அமெரிக்காவுக்கு வந்த வெள்ளையர்கள் அல்லாத மற்ற குடிகளின் மீது அவர்களுக்கு வன்மம் உண்டு.


காமெடி காமிக்ஸ் என்றாலும் அந்த வன்ம வெளிப்பாட்டை ஸ்பூன் அண்ட் ஒயிட் காமிக்ஸில் பார்க்க முடிந்தது. இதில் போலீஸாக வரும் இந்த பேர் வழிகளுக்கு தாங்கள்தான் அமெரிக்காவின் பூர்வ குடிகள் என்கிற நினைப்பு. அமெரிக்காவில் வளர்ந்து வரும் பணக்கார சீனர்களின் மேல் கொண்ட காழ்புணர்ச்சியில் இவர்கள் செய்யும் சேட்டைகள்தான் கதையாக இருக்கிறது.


கதை முழுக்க வெள்ளையர்கள் நல்லவர்கள் என்பது போலவும், சீனர்களும், ஆப்பிரிக்கர்களும்தான் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது போலவும் மல்லு கட்டி இருக்கின்றனர். 


டெட் வுட் டிக் காமிக்ஸில் காட்டும்போது ஆப்பிரிக்கர்களையும், சீனர்களையும் பன்றியை விட கேவலமாக அமெரிக்கர்கள் நடத்துவதாக கூறப்பட்டிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அமெரிக்காவில் நல்ல இடத்தை பிடித்து அவர்களுக்கென்று சைனா டவுன் என்கிற இடத்தை உருவாக்கும் அளவிற்கு சென்றது காமிக்ஸ் எழுதியவருக்கு வன்மத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.


அல்லது நிசமாகவே சைனா டவுன் குற்றங்களின் கூடாரமாக இருந்திருக்கலாம். எது உண்மை என்று தெரியவில்லை. ஆனால் காமெடிக்காக இந்த காமிக்ஸை படிக்கலாம்.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...