Skip to main content

Posts

தமிழ் மொழி வளர்ச்சி

ஏற்கனவே ஏகப்பட்ட மக்கள் தமிழின் பெருமையை திகட்ட திகட்ட எழுதி   பேசி முடித்தப்பின் புதிதாக நான் எழுதிதான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டி எதுவும் இல்லை. நான் கிணற்று தவளை போல் ஏன் தமிழ் தமிழகத்துக்குள்ளேயே இருக்கிறது என்பதை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் எழுதலாம் என நினைத்தேன். இதற்கு அண்ணன் சீமானோ அவரது தம்பிகளோ கூட காரணமாக இருக்கலாம் . ஏன் எனில் உண்மையில் ஒரு மொழி வளர என்ன தடையாக இருக்க முடியும் . அதனின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் சரியான யோசனையில்லாத சில அண்ணன்கள் பேசும்போது “நீங்க தமிழுக்காக என்ன செஞ்சீரு “ என்று கேட்கதான் தோன்றுகிறது. சரி நான் கூற வந்ததை பார்ப்போம். ஒரு மொழி என்பது எப்போதும் அதன் எளிமை நடையை பொருத்தே உலகம் முழுக்க பரவுகிறது. அது படிக்கவும் கற்க்கவும் எளிதாகவும் அப்படி கற்பதால் நமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்னும் நிலையில் அதனுடைய வளர்ச்சி ஆரம்பமாகிறது. உதாரணமாக ஆங்கிலம் , ஆங்கில மொழியில் மொத்தமே 27 எழுத்துக்கள்தான் . இந்த இருபத்து ஏழே எழுத்துக்களில் தனது மொத்த மொழியையும் அடக்கியதில் ஆங்கிலம் வெற்றிக்கர...

சாதி என்னும் அடிமைதனம்

இந்த சாதிய அடக்குமுறை என்னும் வன்முறை நம் இந்திய சமுதாயத்தில் 2000 வருடங்களாக வேறுன்றி நிற்க அடிப்படை காரணமே இந்த அடிமைதனம் என்னும் மன நோய் தான். இந்தியாவில் உள்ள அனைத்து இந்தியனுக்கும் தெரியும். சாதியம் என்பது ஒரு அநியாயமான விஷயம் என்று., இருந்தும் அதை நியாயபடுத்த இந்த இந்திய மக்கள் கூட்டம் பல முயற்சிகளை எடுக்க காரணம். எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு வக்கிர மனநிலை அதிசயமாக மனித இனத்துக்கு மட்டும் இருப்பது தான்.இந்த மனநிலை தான் ஆப்பிரிக்க கருப்பர்களை அமெரிக்கர்களிடம் அடிமையாக்கியது. மனித இனம் அடிமைதனத்தை விரும்புகிறது. அதில் ஒரு அளவில்லா மகிழ்ச்சியை அனுபவிக்கிறது. அதில் சாதிய அடிமை முறை மிகவும் வேறுப்பட்டது. ஒரு ஆப்பிரிக்கரை ஒரு அமேரிக்கர் அடிமையாக வைத்திருப்பது என்பது சாதரண அடிமை முறை உலகில் உள்ள அனைத்து அடிமை முறைகளும் இந்த வகையை சார்ந்தது தான். இனம்,மொழி,நிறம், மதம், நாடு இதனால் வேறுபட்ட ஒருவன் மற்றவனை அடிமைப்படுத்துவது தான் சாதரண அடிமை முறை. இதில் அடிமையாய் உள்ள அந்த மக்கள் அடிமை முறையை வெறுத்தும் அதை எதிர்த்தும் அது பிடிக்காமலும் வாழ்ந்து வருவார்கள். அதாவது அமேரிக்கர்கள்...

ஜல்லிக்கட்டு என்னும் சாதிய விளையாட்டு

ஜல்லிகட்டு   விளையாட்டை   பற்றி   எனக்கு   ரொம்ப   நாளாக   ஐயம்   ஒன்று   உண்டு   .அதாவது   ஒருப்பக்கம்   ஜல்லிக்கட்டு   தமிழர்களின்   வீர   விளையாட்டு   சிந்து   சமவெளி   சமவெளி   நாகரிகம்   முதலே   நாம்   பின்பற்றி   வரும்   இந்த   விளையாட்டை   தமிழர்கள்   தங்களது   அடையாளமாக   கருதி   வருகின்றனர்.   அப்படி   பட்ட   ஒரு   விளையாட்டை   இப்பொழுது   அரசு   தடை   செய்யும்பொழுது   நமக்கு   கோபம்   வருகிறது   .நாமும்   விடாது   இதை   எதிர்த்து   போராடி   வருகிறோம்.   ஒரு   சாதரண   மனிதன்   கூட   கொந்தளித்து   முகப்புத்தகத்தில்   கருத்து   தெரிவிக்கிறான்.   என்னுடைய   ஐயம்   எல்லாம்   பராம்பரியம்   என்னும்   பெயரால்   ஒரு   தவறு   சரியாக்கப்பட்டுவிட்டதோ   என்பதுதான். ...

எங்கள் இதய தெய்வம் பட்டமா

எங்கள் இதய தெய்வம் பட்டம்மா பட்டம்மா இன்று வீட்டுக்கு வரும்போது கையில் இரண்டு பிஸ்கட் பாக்கெட்களும், ஜவ்வு மிட்டாய் இன்னும் பிற வண்ண மிட்டாய்களும் சில உப்பு, மிளகாய்தூள் தடவிய மாங்காய் துண்டுகளும், சில பலா சுளைகளையும் வைத்திருந்தார் . எனக்கு ஒரே ஆச்சரியம் .   “என்ன பட்டமா இன்னக்கி அதிசயமா இவ்ளோ தீனி வாங்கி வச்சுருக்க” “இன்னக்கி என் பேர பிள்ளைகள பாக்க போறேன் அதான் பார்வதி கொஞ்சம் தீனி வாங்கிட்டு போறேன்.” என்றாள் பட்டமா என் பெயர் பார்வதி. பட்டமா என் வீட்டுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்தவர். எங்கள் வீட்டு வேலைகளை செய்துக்கொடுத்து அதற்கு பணம் பெற்றுக்கொள்வார் என்றாலும் அவரை எங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நான் நினைத்தேன்.  பட்டாமாவுக்கு ஒரே பிள்ளை பேரு முருகன். இளமை காலங்களில் மனம் போன போக்கில் போனான். ஒரு முறை பட்டமாவோடு வந்த தகராறில் பட்டமாவை அடித்துவிட்டு வெளியேறி வெளிநாடு போனவன் சில வருடம் கழித்து சம்பாதித்த பணத்தை ஏமாந்துவிட்டதாக அழுதுக்கொண்டு வந்து நின்றான்.  பட்டம்மா மனம் கேட்காமல் மகனுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தார். சில வருடம் கழித்து மகன் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும்...

இந்து மதத்தில் பெண்ணடிமைதனம் - 1

உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்ணடிமைத்தனம் இருந்து வருகிறது . அதற்கு ஆண்களை விட பெண்கள் வலிமைக்குன்றியவர்கள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மதங்களே இந்த அடிமைத்தனத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன . ஒட்டு மொத்த மதங்களையும் நான் குறிப்பிடவில்லை என்றாலும் முக்கியமான மதங்களில் இதை நாம் காணலாம் . கிருஸ்துவ மதத்தில் பெண்ணடிமைத்தனம் குறித்து எனக்கு பெரிதாக எதுவும்   எனக்கு தெரியாமல் போய் இருக்கலாம் . கிருஸ்துவ மதம் அந்தந்த நாட்டுக்கு தகுந்தார்போல் மாறிக்கொள்வதால் எனக்கு தெரியவில்லை . இஸ்லாம் மதம் குறித்து நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை . பெண்ணடிமைதனத்தின் கோட்டை இஸ்லாம் என யோசிக்காமல் சொல்லலாம் . ஆனால் நாம் முக்கியமாக இங்கே அலச வேண்டியது இந்து மதத்தை ஏன் எனில் இந்தியாவில் இந்து மதம் தானே அதிகம் அதனால் இந்து மதத்துக்கே முன்னுரிமை இப்போழுது இந்த கலாச்சாரமும் , இந்து மதமும் பெண்களை எப்படி கைப்பொம்மையாக ஆட்டிவைக்கிறது எனப் பார்ப்போம் . இந்து மதத்தில் பெண்ணடிமைத்தனம் : இந்து ...