Skip to main content

Posts

ஸகுவாரோ நிழல் ஓநாய்கள் (காமிக்ஸ்)

ஸகுவாரோ நிழல் ஓநாய்கள் (காமிக்ஸ்)  பக்கங்கள்: 98 கதாநாயகன் ஸ்குவாரோ ஒரு செவ்விந்தியன் ஆவான். வழக்கம் போல இந்த கதையும் வைல்ட் வெஸ்ட் காலக்கட்டத்தில் நடக்கிறது. என்னதான் செவ்விந்தியன் என்றாலும் வெள்ளையர்கள் வாழ்க்கை மீது ஆர்வம் கொண்டு அவர்களை போலவே ஆடை அணிந்து துப்பாக்கியுடன் சுற்றுபவனாகதான் ஸகுவாரோ இருக்கின்றான். ஆனால் செவ்விந்தியர்களின் உடல் திடம் இருக்கும் காரணத்தால் சண்டை என வந்துவிட்டால் அவனை தாக்குவது எளிது அல்ல. இந்த நிலையில் ஒரு கிராமத்தில் இருக்கும் தனி வீட்டை பணம் கொடுத்து வாங்குகிறான் ஸகுவாரோ. ஆனால் அந்த இடத்தை விற்ற உரிமையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதற்கெல்லாம் காரணமாக ஃபால்சம் என்கிற ஊர் பெரியாள் ஒருவன்தான் இருந்து வருகிறான். கருப்பு உலகில் பல தில்லுமுல்லுகளை செய்து வரும் அவருக்கு ஸகுவாரோ வாங்கிய அந்த இடம் தேவைப்படுகிறது. அதற்காக நடக்கும் போராட்டத்தில் ஸகுவாரோவை போலிஸிடம் குற்றவாளியாக கோர்த்துவிடுகிறான் பால்சம். அதில் இருந்து ஸ்குவாரோ எப்படி தப்பிக்கிறார் என்பதாக கதை செல்கிறது. 90 பக்கத்தில் திரைப்படம் போன்று செல்கிறது காமிக்ஸ்.

மேற்கு சாளரம் - உலக சிறுகதைகள் தொகுதி 3.

மேற்கு சாளரம் - உலக சிறுகதைகள் தொகுதி 3 தமிழில்: எஸ்.ஷங்கர நாராயணன் 183 பக்கங்கள்  விலை: 120 உலகம் முழுக்க இருக்கும் பிரபலமான சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். தமிழ் சிறுகதைகளில் இருந்து மாறுபட்ட வகையில் எழுதப்பட்டுள்ள சில சிறுகதைகளை படிக்க முடிந்தது. முக்கியமாக ஒன்பது மைல் நடை, தனிமை, மணி பர்ஸ் போன்ற கதைகள் எல்லாம் ஒரு திரைப்படமாக்குவதற்கான தகுதியை பெற்ற கதைகளாக இருக்கின்றன. சிறுகதைகளை பொறுத்தவரை உலக அளவில் பார்க்கும்போது இன்னமும் மாறுப்பட்ட சிந்தனைகளை பார்க்க முடிகிறது. அதிலும் ஒன்பது மைல் நடை கதை கொஞ்சம் சிறப்பானது. இரு நண்பர்கள் சாதாரணமாக பேசி கொள்கின்றனர். அப்போது ஒரு நண்பன் கூறுகிறான். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் வைத்து அதன் பெரிய காரணங்களை என்னால் கண்டறிய முடியும் என்று. அப்போது இன்னொரு நண்பன் தான் ரயில்வே நிலையத்தில் காதில் கேட்ட ஒரு வசனத்தை கூறுகிறான். அது என்னவென்றால் “ஒரு ஒன்பது மைல் நடை ஒன்றும் விளையாட்டு கிடையாது. அதுவும் இந்த மழையில்” இந்த வசனம் யாரால் எதற்காக சொல்லப்பட்டது என்பது தெரியாது. அதை இன்னொரு நண்பன் அந்த வசனத்தின் வழியே கண்டறிகிறான். உதாரணமாக ஒன்பது ம...

சாய்கான் புதையல் (வெய்ன் ஷெல்டன்)

உலகப்போர் சமயங்களில் போர் நிறுத்த அறிவிப்பு அல்லது போர் நிறுத்தப்படும் நேரத்தில் எதிரி நாடுகள் சில வேலைகளை பார்க்கும். அந்த நாட்டின் நினைவு சின்னங்கள், அழகிய கட்டுமானங்களை முதலில் அழித்துவிடும். அதே போல அங்கிருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் செல்வங்களை சூரையாடிவிடும். அப்படியாக இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வெய்ன் ஷெல்டன் சிப்பாயாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் வெளியேறும் நாட்டில் இருந்து தங்க கட்டிகளை ராணுவ ஜெனரல் திருட சொல்கிறார். அவற்றை ரகசியமாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து விமானத்தில் திருடி செல்வது அவரது திட்டம். ஆனால் அரசுக்கான வேலை என நினைத்து அதை செய்கிறார் வெய்ன் ஷெல்டன். ஒரு கட்டத்தில் அவர் வெய்ன் ஷெல்டனை கொலை செய்ய நினைக்கிறார். பதிலடியாக அவரை கொன்று அந்த விமானத்தையும் காலி செய்துவிட்டு செல்கிறார் வெய்ன் ஷெல்டன். பல டன் தங்கம் தண்ணீருக்குள் போய் செட்டில் ஆகிவிடுகிறது. இது நடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆன பிறகு அதை தேடுவதற்கான அழைப்பு வெய்ன் ஷெல்டனுக்கு வருகிறது. அதை ஏற்றுக்கொண்ட அவர் அந்த புதையலை கண்டறிந்தாரா என்பதாக கதை செல்கிறது. பரப்பரப்பான கதை அமைப்பை கொண்டு பெரிதாக சண்டை ...

டெக்ஸ் வில்லர் (சாபம் வாங்கிய சுரங்கம்)

  டெக்ஸ் வில்லர் (சாபம் வாங்கிய சுரங்கம்)  லயன் முத்து காமிக்ஸ் பக்கங்கள்: 226 பொதுவாக புதையல் ரகசியங்களுக்கு பின்னால் அமானுஷ்யமான ஒரு பின் கதை இருக்கும். ஃபேண்டசி கதைகளில் புதையல்களை பூதம் காப்பது போலவே இந்த கதையும் செல்கிறது. அமெரிக்கா வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தங்க வேட்டை என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. அமெரிக்காவில் காடு மேடு எல்லாம் தங்க சுரங்கத்தை தேடுவதை பலரும் முக்கிய குறிகோளாக கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தங்க திருட்டும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் திருடப்பட்ட அதிக தங்கத்தை ஒரு குழுவினர் சுரங்கம் ஒன்றில் பதுக்குகின்றனர். அந்த சுரங்கத்தில் புதையல் இருப்பது பல காலங்களாக ஒரு வதந்தி போல சுற்று வட்டாரங்களில் வலம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதை தேடி போகும் யாருமே திரும்ப வருவதில்லை. இதனாலேயே அந்த புதையல் ஒரு சாபம் வாங்கிய புதையலாக மாறுகிறது. இந்த நிலையில் அந்த பிராந்தியத்திற்கு டெக்ஸ் வில்லர் வருகிறார் அவர் அந்த புதையல் குறித்த முடிச்சுகளை விடுவித்தாரா? என்ன நடந்தது என்பதாக செல்கிறது இந்த கதை..

தலைநகரில் தலைமகன் (டெக்ஸ் வில்லர்)

  தலைநகரில் தலைமகன் (டெக்ஸ் வில்லர்) லயன் முத்து காமிக்ஸ் பக்கங்கள்: 226 டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் என்றாலே தமிழில் வரும் ஆக்‌ஷன் படங்களை மிஞ்சிய கதைக்களம் அமைந்திருக்கும். அப்படியான ஒரு கதைதான் தலைநகரில் தலைமகன் காமிக்ஸ். ஒரு சில்லறை வேலையாக டெக்ஸ் மற்றும் கார்சன் இருவரும் ரயிலில் சென்று கொண்டுள்ளனர். அப்போது அந்த ரயிலில் ஒரு நபர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ரெக்ஸ் வில்லர் ஒரு ரேஞ்சர் என்பதால் உடனே அந்த நபரிடம் செல்கிறார். அந்த நபர் இறப்பதற்கு முன்பு ஒரு முக்கிய ஆவணத்தை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த ஆவணம் இருக்கும் இடத்திற்கான குறிப்புகளை கொடுக்கிறார். அது என்னவென்றால் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்ததில் அரசில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு ஆசாமிதான் காரணகர்த்தாவாக இருக்கிறார். அதற்கான ஆதாரங்கள்தான் அந்த ஆவணங்கள். அதை டெக்ஸ் எப்படி அதிபரிடம் கொண்டு சேர்க்க போகிறார் என்பதே கதை. மிஷன் இம்பாசிபல் படத்தை போலவே மிக சுறு சுறுப்பாக செல்லும் கதைக்களம்

இடந்தலைப்பாடு - சேவியர் ராஜதுரை

சிறு வயது முதலே சிறுகதைகள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில் பள்ளிகளில் துணைப்பாடங்களில் படித்தவரை சிறுகதைக்கான இலக்கணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பிறகு இலக்கிய வட்டாரத்திற்குள் வந்த பிறகு ஏதோ கடப்பாறையை கொண்டு பாறையை நகர்த்தும் வகையில் சிறுகதைக்குள் கதைக்கரு இருக்க வேண்டும் என நினைத்தேன். பிறகு போன வருடம் நிறைய சிறுகதைகளை படித்ததன் விளைவாக சிறுகதைகளுக்கு இலக்கணம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதை ஓரளவு புரிந்துக்கொண்டேன். எது வேண்டுமானாலும் ஒரு சிறுகதையாக இருக்கலாம். இரு நபர்கள் பேருந்தில் பேசி கொண்டு வரும் உரையாடல், ஒரு எறும்பின் மனநிலை, தெருவோர பிச்சைக்காரனின் நடவடிக்கை எது வேண்டுமானாலும் சிறுகதையாக மாற்றப்படலாம். பெரும்பாலும் நம் வாழ்க்கையில் நாம் சந்தித்த உணர்ந்த விஷயங்களில் இருந்தே சிறுகதைகள் உருவாகுவதாக நான் நினைக்கிறேன். நண்பர் சேவியர் ராஜதுரை எழுதிய இடந்தலைப்பாடு சிறுகதை தொகுப்பும் அப்படியான ஒரு சிறப்பான தொகுப்பாக இருந்தது. இவற்றில் உள்ள சிறுகதைகள் எல்லாம் அவர் தன் வாழ்வில் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என நினைக்கிறேன். இவற்றில் ஒரு சில காதல் கதை...

வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் 2

  வீரயுக நாயகன் வேள்பாரி -  பாகம் 2 ஆசிரியர்: சு.வெங்கடேசன் பக்கங்கள்: 800 தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் புகழப்படுபவர்களாக கடவுள்கள், அரசர்கள் மற்றும் பெருங்குடியை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். மிக அரிதாக இவர்கள் அல்லாத மனிதர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். அப்படியான நபர்களில் பாரி முக்கியமானவர். பொதுவாகவே பழங்குடி இன மக்கள், வேடர், குறவர் போன்றவர்கள் நாகரீக சமூகங்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் ஒரு மனித கூட்டமாகவே தெரிவார்கள். ஆனால் அதே சமயம் தொன்ம பழக்க வழக்கங்கள் பலவற்றையும் அழியாமல் பாதுகாத்து வருபவர்களாகவும் இந்த பழங்குடிகள் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் மலையில் வாழ்பவர்களும், அடர் காடுகளில் வாழ்பவர்களுமே பழங்குடிகளாக இருந்துள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு தேவையான அனைத்துமே மலையில் கிடைத்துவிடுவதால் அவர்கள் சமதள நிலம் பக்கம் வருவதே இல்லை. இதனால் சமதள நிலம் வெகு சீக்கிரத்தில் அடைந்த நாகரீக முன்னேற்றத்தை பழங்குடிகளால் அடைய முடியவில்லை. இந்த சமதள மக்கள் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை என்றே கூறலாம். மலை வாழ் மக்களை சம தள மக்கள் நாகரீகமற்றவர்களாகவும், காட்டு மனிதர்களாகவு...