Skip to main content

வியாசனை அறிதல் - ஜெயமோகன்

 

வியாசனை அறிதல்

ஜெயமோகன்

உலகம் முழுக்க இருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புராண கதைகள் என்று ஒன்று இருக்கும். அப்படியாக இந்தியாவில் முக்கியமான புராண கதையாக இருந்து வருவது மகாபாரதம். எப்படி இப்படி ஒரு கதையாடல் பல வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது என நினைக்கும் அளவிற்கு மனித உணர்ச்சிகள் மீது விளையாடும் ஒரு இலக்கியம்.

ஹாலிவுட்டில் வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையை விடவும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கும் மோசமான விளைவுகளை மகாபாரதம் வெளிச்சம் போட்டு காட்டும். மகாபாரதத்தை எழுதியவராக கருதப்படும் கிருஷ்ண துவைபாயனார் வியாசர் என்பவரை பற்றி ஜெயமோகனின் பார்வையில் இருந்து இந்த புத்தகம் செல்கிறது.



என்னை பொறுத்தவரை மகாபாரதத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புராணமாகவும் தெய்வ கதையாகவும் மாற்றியதே அந்த கதை விரிவாக வரவேற்பை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது என நினைக்கிறேன். கௌரவன் புத்தகத்தை எழுதிய ஆனந்த் நீலகண்டன் அந்த புத்தகத்தில் கூறும்போதும் கூட மகாபாரதத்தை படிப்பவர்கள் அதில் பிழையென கண்டறியும் விஷயங்கள் அப்போது எழுதியவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். என்கிறார்.

இருந்தும் அவை அப்படியே எழுதப்பட்டதற்கு காரணம் அதை மக்கள் விமர்சிக்க வேண்டும். அதை பற்றி பேச வேண்டும் போர் என போற்றப்படும் கிருஷ்ணனிடத்தில் கூட எப்படியான விளைவுகளை கொண்டு வருகிறது என்பதை வெளிப்படைதன்மையுடன் மகாபாரதம் பேசுகிறது.

உண்மையில் நியாயம் தர்மம் என பார்த்தோம் என்றால் துரியோதனனில் துவங்கி, கிருஷ்ணன், ஏகலைவன், அர்ஜுனன், தருமன், சகுனி என ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமும் ஒரு தருமமும் உள்ள கதையாகதான் மகாபாரதம் இருக்கும்.

அவரவர் கதையில் அவர் கதாநாயகனாக இருப்பார். உதாரணத்திற்கு சகுனியை எடுத்துக்கொண்டால் தன் தேசத்தை சூரையாண்டு தன் அக்காவை நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து வைத்த அஸ்தினாபுரத்தையும் பீஸ்மரையும் அழிப்பதுதான் அவரது வாழ்நாள் கனவு. அவருடைய பழி வாங்கலுக்கு பின்னால் கூட ஒரு நியாயமான காரணம் இருக்கும்.

அதே போல கிருஷ்ணனை பொறுத்தவரை அத்தை பசங்களை எப்படியாவது போரில் ஜெயிக்க வைக்க வேண்டும் அதுவே தருமம் , எத்தனை விலை கொடுத்தாவது அஸ்தினாபுரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயம் ஒரு தருமம் கதையில் இருக்கும்.

ஜெயமோகனை பொறுத்தவரை அவர் 25 வருடங்களுக்கு மேலாக மகாபாரதத்தை ஆராய்ந்து வெண்முரசு என்கிற பெரும் இலக்கியம் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் இந்த படைப்பு என்பது உண்மையிலேயே இமாலய முயற்சிதான்.

 

இதனால் ஜெயமோகன் மகாபாரதத்திற்கு மிகப்பெரிய காதலன் ஆகிவிட்டார். மகாபாரதம் ஒரே ஒருவர் எழுதி உருவான படைப்பாக இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் அப்போது இருந்த நாட்டார் கதைகளின் தாக்கம் மகாபாரதத்தில் இருக்கும். பூதத்திடம் சிக்கும் பாண்டவர்கள், சூதில் தோற்கும் தருமன் மாதிரியான பல கதைகள் நீதி நெறி கதைகளாகவோ நாட்டார் வழக்கு கதைகளாகவோ அப்போது இருந்திருக்கலாம்.

அப்போது இந்த கதையை எழுதியவர்கள் அவற்றை எல்லாம் மகாபாரதத்தில் சேர்த்திருக்கலாம் என்கிற அனுமானம் எனக்கு உண்டு. கிட்டத்தட்ட ஜெயமோகனுக்கும் கூட அப்படியான எண்ணம் இருப்பதை தெரிவித்துள்ளார். அதே போல மகாபாரதத்தில் பின் சேர்க்கை பற்றியும் அவர் பேசியுள்ளார்.

மேலும் மகாபாரதம் குறித்த கேள்விகளுக்கு பதில்களும் அளித்துள்ளார்.

மகாபாரத கதைகளில் எனக்கு கௌரவன் மிக பிடித்தமான நாவல். ஏனெனில் பெரும்பாலும் மகாபாரதம் திரைப்படங்களில் துவங்கி சீரியல் வரை ஜெயமோகன் சொன்னது போல சில்லரை தனம்தான் செய்து வருகின்றனர்.

அதிலிருந்து வித்தியாசமாக கௌரவர்களின் பார்வையின் வழியே மகாபாரதத்தை கொண்டு செல்லும் கதை கௌரவன். அதே போல இன்னமும் நிறைய வெர்ஷன்களில் மகாபாரதம் இருக்கிறது. அவையாவையும் படிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...