தீ பரவட்டும்
அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா
தொடர்ந்து நிறைய முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனதில் பதித்தவர் என்பது பலருமே அறிந்த
விஷயமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா மூவரிடமும் ஒற்றுமையாக உள்ள ஒரு விஷயம் என்றால்
எதிர்ப்பு காட்டுவது என இறங்கிவிட்டால் பின் விளைவுகளை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள்.
அப்படியாக இந்து
புராணங்களை பேசும் ராமாயணம், பெரிய புராணம் ஆகிய இரண்டு நூல்களை எரிக்க வேண்டும் என்பதே
அவரது கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துக்களை
கொண்டுள்ளன.
பெரும்பாலும்
பிராமணிய கொள்கைகளை பரப்புவதாக இவை இருக்கின்றன என்பதே இவர் முன் வைக்கும் வாதமாக உள்ளது.
அதற்காக அண்ணா ஆற்றிய உரைகள்தான் இந்த புத்தகம். ராமாயணத்தை பொறுத்தவரை அது தமிழ் மக்கள்
குறித்து தரக்குறைவான கருத்தை முன் வைக்கிறது.
அப்படிப்பட்ட
நூலை தமிழில் மொழி பெயர்த்து அதை தமிழர்களிடமே விற்பனை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது.
தமிழில் எவ்வளவோ முக்கிய இலக்கியங்கள் இருக்கும்போது மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கும்
அளவிற்கு என்ன இருக்கிறது ராமாயணத்தில் என்பது அவரது கருத்து,
அதே போல பெரியபுராணத்தை
பொறுத்தவரை ஒரு அந்தணர் வந்து பிள்ளை கறி கேட்பதும், மனைவியையே கேட்பதும் பக்திக்கான
சோதனையாகவும், பக்திக்காக செய்ய கூடாத விஷயத்தையும் அவர்கள் செய்வதை பக்தி என கூறுவதும்
ஏற்புடையதாக இல்லை. எனவே இந்த இரண்டு நூல்களுமே சமூகத்திற்கு ஒவ்வாத நூல்கள் என்பது
அண்ணாவின் கருத்தாக இருக்கிறது.
அதில் உண்மையும்
இருக்கிறது. ஏனெனில் உலக அளவில் வந்த பெரும்பான்மையான இலக்கியங்கள் கடவுள், அரசன் அல்லது
உயர்குலத்து மனிதனை அடிப்படையாக கொண்டுதான் வந்துள்ளன. தமிழில்தான் சங்க காலத்திலேயே
எட்டு தொகை, பத்துப்பாட்டு மாதிரியான நூல்களில் திணை வாரியாக சாதாரண மக்களின் வாழ்க்கை
முறை குறித்து பேசப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டில்
உள்ள ஆற்றுபடை நூல்கள் மக்களின் வறுமை குறித்து பேசுகின்றன. பெரும்பாலும் அவை பாணர்,
கூத்தர், விறலியர் என்கிற எளிமையான வறுமையில் வாடும் கலைஞர்களை குறித்தவையாக இருக்கின்றன.
சங்க பாடல்களை பாடிய புலவர்களே பலர் எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர்கள்.
இப்படி தமிழில்
எளிய மக்களின் பண்பாடு கலாச்சாரம் சார்ந்து பதிவு செய்த எவ்வளவோ நல்ல நூல்கள் இருக்கும்போது
அவற்றை பிரதானமாக படிப்பதுதான் சரியான விஷயமாக இருக்கும்.

Comments
Post a Comment