Skip to main content

பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்)

 

பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்)

ஆர்தர் கோனான் டாயில்

உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு டிடெக்டிவ் நாவல் கதாபாத்திரம். இவருக்கு நான் இண்ட்ரோ கொடுக்க தேவையில்லை. உலகம் முழுவதும் இப்போது வரும் துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு துப்பறியும் கதைகளுக்கு ஒரு இலக்கணமாக ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹொம்ஸ் உள்ளது.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வந்த பிறகு அவர் உண்மையிலேயே லண்டனில் இருக்கிறார் என்பதாக பலரும் நம்ப துவங்கினர். பிறகு பேக்கர்ஸ் தெருவில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு அவர்கள் கடிதங்களை எழுத துவங்கினர். உண்மையில்  அப்படி ஒரு முகவரியே அப்போது இல்லை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.

இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் பொஹிமியாவில் ஒர் அவதூறு, அடையாளம் குறித்த வழக்கு, செந்தலையர் சங்கம் ஆகிய மூன்று கதைகள் உள்ளன. மூன்றுமே சுவாரசியமான கதைகள்.

ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் உள்ள மிகப்பெரிய ட்ரிக் என்னவென்றால் அவரது நண்பரான வாட்சனின் பார்வையின் வழிதான் ஒட்டு மொத்த கதையும் செல்லும். எனவே வாட்சன் தன் கண்ணால் பார்க்காத எந்த ஒரு விஷயத்தையும் வாசகர்களாலும் தெரிந்துக்கொள்ள முடியாது. ஷெர்லாக் ஹோம்ஸ் விளக்கும் வரை வாசகர்களும் வாட்சனும் காத்திருக்க வேண்டி இருக்கும்.



எனவே கதையில் இந்த விவரத்தை சொன்னால் விஷயத்தை வாசகர்கள் கண்டறிந்துவிடுவார்கள் என தோன்றும் விஷயங்களை வாட்சன்  கண்ணுக்கு படாமல் மறைத்து விடுவார் ஆசிரியர்.

இந்த கதைகளிலும் அந்த வேலையை பார்த்திருந்தார். இதில் பிடித்த கதை என பார்த்தால் செந்தலையர் சங்கத்தை கூறலாம். தெகிடி படத்திற்கு இந்த கதைதான் இன்ஸ்ப்ரேஷனாக இருந்திருக்க வேண்டும்.

கதைப்படி ஒரு சின்ன நகைக்கடை வைத்திருக்கும் முதலாளி இருக்கிறார். அவருடைய கடையில் ஒரு இளைஞன் பாதி சம்பளத்திற்கு வேலைக்கு சேர்கிறான். ஒரு நாள் அவன் இவரிடம் ஒரு செய்தியை காட்டுகிறான். செந்தலையர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு சின்ன வேலைக்கு பெரும் சம்பளம் அறிவித்துள்ளனர்.

முதலாளிக்கு சிவப்பு முடி இருப்பதால் அந்த வேலைக்கு முயற்சிக்கிறார். வேலையும் கிடைக்கிறது. முதலாளி வேலை பார்க்கும் நேரங்களில் இளைஞன் கடையை பார்த்துக்கொள்வது என பேசிக்கொள்கின்றனர். அதன்படி வேலையும் எளிதாகவே உள்ளது. ஆனால் ஒருநாள் வேலைக்கு செல்லும்போது அங்கே எந்த அலுவலகமும் இல்லாமல் இருக்கிறது.,

அருகில் விசாரிக்கும்போது யாருக்குமே முதலாளி வேலை பார்த்த அலுவலகம் பற்றி தெரியவில்லை. இதனால் நஷ்டம் ஒன்றும் இல்லை லாபம்தான் என்றாலும் ஏன் இது நடந்தது என அறிய அவர் ஷெர்லாக் ஹோம்ஸை அணுகுகிறார். இதனை அடுத்து அதற்கு பின்னால் இருக்கும் குற்றத்தை ஷெர்லாக் ஹோம்ஸ் கண்டறிகிறார்.

இப்படியாக இதில் உள்ள மூன்றுமே சுவாரசியமான கதைகள்..

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...