Skip to main content

உதிரிப்பூக்கள் விமர்சனம்

 உதிரிப்பூக்கள்

இயக்குனர்: மகேந்திரன்



மகேந்திரனின் ஒரு சில திரைப்படங்களைதான் நான் பார்த்துள்ளேன். கை கொடுக்கும் கை பார்த்தப்போதே ஒரு வியப்பு இருந்தது. தற்சமயம் பார்த்த உதிரிப்பூக்கள் 1979 இல் கண்டிப்பாக ஒரு சிறப்பான திரைப்படம். கதாநாயகனே இல்லாத ஒரு கதை. சுந்தர வடிவேலு என்னும் பண்ணையார். ஒரு சைக்கோத்தனமான மனநிலையை கொண்டவன். அவனை சுற்றிதான் கதை நகர்கிறது

நாம் பலரது வீட்டில் அதிக ஆதிக்க தன்மையுடன் இருக்கும் சில ஆண்களை பார்த்திருப்போம். இது என்ன சாதாரண விஷயம்தானே.. ஆண்கள் ஊரில் இப்படி இருப்பதில்லையா என்பதுதான் பொது மனநிலையாக இருக்கும். ஆனால் அப்படி இருப்பவர்கள் செய்யும் தவறுகள் எவ்வளவு பெரியது என்பதைதான் படத்தின் வழியே பார்க்க முடிகிறது.

தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் சுந்தரவடிவேலு. அதற்காக அவன் செய்யும் மோசமான காரியங்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே கதாபாத்திர அறிமுகங்கள் சுந்தர வடிவேலு தன் மனைவியின் தங்க சென்பகத்தின் மீது ஆசைப்படுவது எல்லாம் வந்துவிடுகிறது.

மீதம் 2 மணி நேரமும் அவளை அடைய சுந்தரம் செய்யும் விஷயங்களை 1979 காலக்கட்டத்தில் இவ்வளவு விறுவிறுப்பாக காட்டியிருப்பது வியப்புதான். அதற்கு தகுந்தாற் போல படத்தை லெவலை தாண்டி இளையராஜாவின் இசை இருக்கிறது. 

படம் முடிந்த பிறகும் “ஏ இந்த பூங்காத்து தாலாட்ட” மற்றும் அழகிய கண்ணே பாடல்கள் மனதை விட்டு நீங்காமல் நின்றுவிடுகிறது. மிக கொடூரமான வில்லன் க்ளைமேக்ஸில் சாக போகிறான். ஒரு வேளை மகேந்திரன் இயக்கவில்லை என்றால் இது அனைவருக்கும் திருப்திகரமான க்ளைமேக்ஸாக இருந்திருக்கும்.

ஆனால் மாறாக க்ளைமேக்ஸில் அவனது இறப்பு அனைவருக்கும் வருத்தத்தை கொடுக்கிறது. மிஸ்கின் சைக்கோ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு விஷயத்தை செய்ய நினைத்து தவறவிட்டிருந்தார். அதுதான் உதிரி பூக்கள் படத்தில் சரியாக அமைந்துள்ளது.

பொதுவாக ஜப்பான் அனிமே கதைகளில் வில்லன் ஏன் வில்லன் ஆனான் என்கிற பின்கதை மனதை தொடுவதாக இருக்கும். அதனால் வில்லன் இறக்கும்போது பார்ப்பவர் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்படும். அந்த ஒரு நிலையை இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...