Skip to main content

Tsunami - Race Against Time - சுனாமி அழிவில் நாம் அறியாத விஷயங்களை சொல்லும் ஆவணப்படம்

 செல்போன், இண்டர்நெட் வந்துச்சு.. இப்ப நாடே நாசமா போச்சு என கூறும் ஒரு குழுவினர் எப்போதும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள்தான் அதிகமாக இருந்துள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால்தான் 2004 சுனாமியில் இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகள் வந்த பிறகுதான் கிராமங்களில் கள்ள தொடர்புகள் குறைந்ததாக கி.ரா கோபல்ல கிராமம் கதையில் கூறுகிறார். அதுக்கூட தொழில்நுட்பத்தின் ஒரு நன்மைதானே.



இப்போது சுனாமிக்கு வருவோம் Tsunami - Race Against Time என்கிற ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. சுனாமியை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமே அணுகிய என்னை போன்றவர்களுக்கு சுனாமி குறித்து கேட்காத பல விஷயங்களை இந்த ஆவணப்படம் கூறுகிறது.

சுனாமியின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நிஜ வீடியோக்களை கொண்டே ஒட்டு மொத்த ஆவணப்படமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பெரிதாக சுனாமி ஏற்படாத ஒரு பகுதியாக இருந்து வந்தது.

அதனால் சுனாமி எச்சரிக்கை மையங்கள் எதுவுமே இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த நாடுகளுக்கு அப்போது கிடையாது. இந்த நிலையில்தான் 2004 டிசம்பர் 26 அன்று இந்தோனிஷியாவிற்கு அருகில் மனித வரலாற்றில் காணாத பெரிய நிலநடக்கம் ஏற்படுகிறது.

ரிக்டர் அளவில் 10 என்பது நிலநடுக்கத்தில் மிக அதிக அளவு அப்படியான நிலநடுக்கம் நடந்தால் நிலம் இரண்டாக பிளந்துவிடும். சுனாமியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டர் அளவுகள். அவ்வளவு பெரிய நிலநடுக்கத்தை மனித குலம் அதுவரை காணவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் இரண்டு பெரிய அலைகள் கடலில் உருவாகி ஒன்று இடது பக்கமும் மற்றொன்று வலது பக்கமும் பயணித்தது. இடது பக்கம் வந்த அலைகள் ஸ்ரீ லங்கா இந்தியாவில் துவங்கி கென்யா வரை சென்றது. வலது பக்கம் சென்ற அலைகள் தாய்லாந்து, இந்தோனிசியா, மலேசியா வரை தாக்குதலை நடத்தியது.

மனிதக்குலம் கண்டிராத ஒரு அழிவு. இந்தியா மற்றும் ஸ்ரீ லங்காவில் அப்போது நடந்த அழிவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததே காரணமாக இருந்துள்ளது. ஏனெனில் சுனாமி உருவாகி 6 மணி நேரம் கழித்துதான் இந்தியாவை வந்தடைந்துள்ளது.

சுனாமி உருவானப்போதே ஹவாய் தீவுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் அதை கண்டறிந்துள்ளனர். ஆனால் அவர்களால் அதை இந்தியாவிற்கு சொல்ல முடியவில்லை. இந்த பேரழிவுக்கு பிறகு கடலோர நாடுகள் அனைத்தும் சுனாமி எச்சரிக்கை மையத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதை விட திகிலான ஒரு விஷயம் இந்த ஆவணப்படத்தில் அதிர்ச்சியை கொடுத்தது. சுனாமிக்கு பிறகு இந்தோனிஷியாவுக்கு அருகில் ஒரு சின்ன தீவு மொத்தமாக நிர்மூகமாகிவிட்டது. அங்கு உயிர் பிழைத்தவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டனர்.

பிறகு 3 வாரங்களுக்கு பிறகு அங்கு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சர்வேதேச செய்தி நிறுவனம் அங்கு சென்றப்போது தீவு முழுவதும் பிணங்களாக நிரம்பி இருந்துள்ளது. அதற்கு நடுவே ஒரு 10 வயது சிறுவன் உயிர் பிழைத்து சுற்றியிருக்கிறான்.

அவனால் அவன் தாய் தந்தையரை கண்டறிய முடியவில்லை. அங்கு குப்பையில் கிடைத்த நூடுல்ஸ் மாதிரியான விஷயங்களை உண்டு மூன்று வாரங்களை கழித்துள்ளான். இரவு நேரங்களில் மொத்த தீவும் ஆள் அரவம் இல்லாமல் இருந்ததால் அவன் பயந்து போயுள்ளான். இதனால் தினசரி பிணங்களுடன் படுத்து உறங்கியுள்ளான்.

அவனை மீட்ட காணொளிகளும் இடம் பெற்றுள்ளன. மிக முக்கியமான ஆவணப்படம் மிஸ் பண்ணிடாதீங்க


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...