Skip to main content

காதுகள் Book Review

 காதுகள்

எம்.வி வெங்கட்ராம்

160 பக்கங்கள்

நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் புலன்களின் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டுதான் சென்று கொண்டுள்ளன. ஒருவேளை மற்றவர்களுக்கு பச்சை நிறத்தில் தெரியும் விஷயங்கள் நமக்கு நீல நிறமாகவும், நீல நிறமானது பச்சை நிறமாகவும் தெரிந்தால் இறுதி வரை நாம் பச்சை நிறத்தை நீல நிறமென்றே நம்பி கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருப்போம்.



எத்தனை பேர் அப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதும் தெரியவில்லை. 😁. இந்த நிலையில் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை தொடர்ந்து நாம் பிரச்சனையாக பார்த்து வருகிறோம். ஆனால் உடல் உறுப்புகளே செய்யும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவான ஒரு கதைதான் காதுகள்.

அறிவியல் மற்றும் மாந்தீரிகம் என இரு வகையிலுமே கதையின் போக்கு அமைந்துள்ளது. நல்ல ஒரு குடும்பத்தில் நல்ல நிலையில் இருக்கும் கதாநாயகனுக்கு திடீரென ஒரு நாள் காதுகளில் தாமாகவே யாரோ உரையாடி கொண்டிருப்பது போல தோன்றுகிறது.

அதனை தொடர்ந்து அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அவரால் எதிலுமே நாட்டம் காட்ட முடியாமல் போகிறது. குடும்பமே பெரும் வறுமைக்குள் செல்கிறது. யாருமே பார்க்க முடியாத கடும் வறுமை. இந்த மாதிரி பிரச்சனை வரும் யாருமே மனநலம் பாதிக்கப்பட்டவராக எளிமையாக மாறிவிடுவார்கள்.

ஆனால் இவ்வளவு துயரங்களுக்கு நடுவிலும் கதாநாயகன் தாக்கு பிடிப்பது நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் வாழ்ந்தாகவேண்டிய சூழல்தான் மனித மனதுக்கு தேவையானதாக இருக்கிறது.

மனைவியோடு கூடுவதை கூட அவர் வெறியோடு செய்யும் அளவிற்கு அவருக்கு மண்ட கோளாறு கொடுக்கின்றன. இந்த குரல்கள். இந்த நிலையில் தொடர்ந்து குழந்தை பேறு என இருப்பதால் ஒரு கட்டத்தில் நடக்கவே முடியாதப்படிக்கு மோசமான நிலையை எட்டுகிறார் மனைவி. சொல்லப்போனால் மொத்த புத்தகத்திலும் கதாநாயகனை விட கஷ்டப்படும் கதாபாத்திரமாக மூத்த மகளும், மனைவியும் இருக்கின்றனர்.

இதற்காக கதாநாயகனை வஞ்சிப்பதா அல்லது பாவப்படுவதா என்பதும் தெரியவில்லை. இவனால்தான் இந்த குடும்பத்துக்கு இவ்வள்வு பெரிய கஷ்டம் என்று பார்த்தால் இவன் தனக்குள்ளேயே பெரும் கஷ்டங்களை பெற்று கொண்டு வருகிறான்.

இது ஒரு வியாதி அவன் நினைக்கவே இல்லை. அவன் ஒரு முருக பக்தன். அவனை சோதிப்பதற்காக காளி அவனை தொடர்ந்து தொல்லைப்படுத்தி வருவதாகவே அவன் கருதுகிறான். தொடர்ந்து அவன் காதுகளில் ஆபாசமாக பேசி வரும் காளி ஒரு கட்டத்தில் அவனுக்கு முன்பு காட்சி அளித்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படியும் தன்னுடன் கூடும்படியும் அவனை நிர்பந்திக்கிறது.

அதனை தொடர்ந்து அவரது கண்களும், மூக்கும் கூட ஏமாற்ற துவங்குகின்றன. இவ்வளவு பிரச்சனைகளையும் சமாளித்து அவர் வாழ தொடங்குகிறார். அப்படியாக கதை நிறைவுறுகிறது. 


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...