குருதியில் பூத்த குறிஞ்சி மலர்.
காமிக்ஸ்
பக்கங்கள்: 66
எல்லா காலங்களிலும் நாகரிகத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் நாகரிக குடிகள் என்று தங்களை பறைசாற்றி கொள்ளும் விவசாய குடிகள் பல பழங்குடிகளை அழித்துதான் தங்கள் நாகரிகத்தை வளர்த்துள்ளது. இந்திய மலைவாழ் மக்கள், சீனத்தில் மங்கோலியர்கள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என இந்த லிஸ்ட் மொத்த உலகத்தையும் ஒரு சுத்து சுத்தி வரும். ஆனால் இதற்கெல்லாம் ஆதி இந்த இன வெறி மட்டுமே.
அமெரிக்கர்களும் சரி அவர்களுக்கு முன்பு அமெரிக்காவை ஆக்கிரமிப்பில் வைத்திருந்த பிரிட்டிஷாரும் சரி. வெகு காலங்களாகவே செவ்விந்தியர்களை மிக மோசமாகவே நடத்தி வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே செவ்விந்தியர்கள் வெள்ளையர்களுக்கு அடங்கி போகவில்லை.
மேலும் செவ்விந்தியர்கள் காட்டு மக்களாக இருப்பதாலும், இங்கிலாந்து காரர்களுக்கு உலகிலேயே தான் மட்டுமே தூய்மையான இனம் என்கிற பம்மாத்தும் இருக்கிறதால் அவர்கள் செவ்விந்திய கிராமங்களை எரிப்பது செவ்விந்திய பெண்களை நாசம் செய்வது போன்றவற்றை பொழுது போக்காகவே செய்து வந்தனர்.
உலகிலேயே அதிகப்படியான காட்டுமிராண்டி தனங்களை செய்தப்போதும் இன்னமும் தாங்கள்தான் உயர்ந்த இனம் என்கிற இருமாப்பு அடங்கிய பாடில்லை. செவ்விந்தியர்கள் சும்மா வாங்கி கொண்டு மட்டும் இருக்கும் ரகம் அல்ல. பதிலுக்கு அவர்களும் நிறைய செய்கை செய்திருக்கின்றனர்.
ஆனால் வெள்ளையர்கள் செய்த நாசங்களோடு ஓப்பிட்டு பார்த்தால் இவர்கள் செய்த நாசங்கள் ஒரு சதவீதமாவது இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் சமூக வளர்ச்சிக்கு பிறகு வெள்ளையர்களால் தாங்கள் செய்த பிழைகள் மீது மண்ணை போட்டு மறைக்க முடியவில்லை. இதனால் செவ்விந்திய மக்களுக்கு பிறகு ஆதரவாக உலகம் முழுக்க குரல்கள் எழுந்தன.
அவர்களுக்கு ஆதரவாக வந்த இலக்கியங்களில் காமிக்ஸ் முக்கியமானது. வைல்ட் வெஸ்ட் கதை களங்களை கொண்டு வரும் காமிக்ஸ்களில் பெரும்பாலும் செவ்விந்தியர்கள் இருப்பார்கள். இதில் செவ்விந்தியர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்ட காமிக்ஸ்களும் உண்டு.
அவர்களை வில்லனாக காட்டும் காமிக்ஸ்களும் உண்டு. அப்படி அவர்களை வில்லனாக சித்தரித்து வந்த ஒரு காமிக்ஸ்தான் இந்த குருதியில் பூத்த குறிஞ்சி மலர் புத்தகம். செவ்விந்தியர்களுக்கு இவ்வளவு செய்கை செஞ்சிட்டு இன்னமும் அவர்களை வில்லனாக காட்டி வெள்ளையர்கள் தங்களை நல்லவர்களாக காட்டுவது ஏற்புடையதாக இல்லை.
ஆனால் காமிக்ஸின் வேலைபாடுகள்தான் சிறப்பான சம்பவம். ஆர்ட் ஒர்க் அனைத்தும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. கதை முழுக்க வைபரண்ட் கலர்ஸ் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு டார்க் டோனிலேயே கொண்டு சென்றனர்.
கதாபாத்திரங்களும் பெருசாக சிரித்து பார்க்க முடியவில்லை. ஆர்ட் ஒர்க்குக்காக வாங்கலாம்..

Comments
Post a Comment