Skip to main content

Posts

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாராயணன் - 3 இறுதி பாகம்

நிலைமை மிகவும் மோசமாகி கொண்டிருந்தது நாராயணனின் உருவம் மெல்ல தெரிய தொடங்கியது. ஆனால் அதை எண்ணி மகிழ்ச்சி அடையும் தருவாயில் தற்சமயம் அவர் இல்லை. கடைவீதி வழக்கத்தை விட மிகவும் கூட்டமாக இருந்தது. கலகலப்பான கடைத்தெருவை பார்ப்பதே நாரயணனுக்கு அலாதி பிரியமாக இருக்கும். ஆனால் அதை அனுபவிக்க அவர் என்ன இப்போது கணவான்கள் போன்று ஆடையணிந்தா உள்ளார். தற்சமயம் உள்ள நிலைக்கு அவர் தெரு நாய்களிடம் சிக்கினாலே தன் எடையில் ஐந்து கிலோவாவது இழந்துவிடுவது உறுதி. உடலில் வியர்வை ஆறாக ஓட நாராயணன் தன் வயதுக்கு மீறிய வேகத்துடன் ஓட்டம் பிடித்தார். வீட்டு வாசலில் வந்து நின்ற போது பாதி உருவம் தெரிய ஆரம்பித்தது. நேராக குளியலறைக்கு சென்றார். குளித்துவிட்டு துண்டை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வருகையில் வள்ளி கையில் அவரது துணிகளோடு நின்று கொண்டிருந்தார். “ஏங்க அங்க ஏன் துணிய கழட்டி போட்டுட்டு வந்தேள்.” ஒன்றும் புரியாமல் வள்ளி கேட்க “வள்ளி இன்னிக்கு உடம்பு சுகப்படலடீ நான் இன்னிக்கு ஆபிஸ் போகல” என்று கூறி விஷயத்தை திசை திருப்பினார் நாராயணன் . இந்தாளுக்கு வேற வேலை இல்ல என்று நினைத்துக்கொண்டு வள்ளி நடையை கட்ட ஆழ்ந்த யோ...

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாராயணன் - 2

எவ்வளவு நேரம் இப்படியே மயங்கி கிடந்தார் என்று நாரயணனுக்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவர் போட்டிருந்த உடைகளும் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிந்தது. உடலின் பாகங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. ஏதோ ஒரு யோசனையில் போட்டிருந்த அனைத்து உடைகளையும் கழற்றி எறிந்தார். “ஒரு வேளை கனவு ஏதும் கண்டுகொண்டு இருக்கிறோமோ. போய் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டால் கனவு கலைந்து நிஜ உலகிற்கு சென்றுவிடலாம்”   என யோசித்தார். ஆனால் கனவில் மயக்கமாக முடியாதே. முற்றிலும் குழப்பமாக இருந்தது. மீண்டும் கண்ணாடியை எடுத்து பார்த்தார். இந்த முறை முகம் சுத்தமாக தெரியாமல் போயிருந்தது. “இது என்னடா நமக்கு வந்த சோதனை… நேற்று பகவானிடம் குடும்ப பிரச்சனை குறித்து வஞ்சனையாக சில திட்டுக்கள் திட்டியதால் பகவான் நமக்கு சாபமளித்துவிட்டாரா?” மிகவும் குழப்பமாக இருந்தது நாரயணனுக்கு. திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் “இது ஏன் நமக்கு கிடைத்த வரமாக இருக்க கூடாது”. நாராயணன் ஒரு கலாச்சார காவலர் .மனைவி இடை தெரிவது போல ஆடை உடுத்தினாலே திட்டுவார். அதற்கு காரணம் உண்டு அவர் பெண்கள் மேல் அதிக ஈடுபாடு உடையவர். கோவிலுக்கு மனைவியோடு செல்லு...

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாரயணன்

“சாணியில் என்ன மணக்குதோ தினமும் என்ன கரைக்க விட்டுடுறாள் இந்த சுக்கு” புலம்பியப்படியே சாணியை கரைத்து கொண்டிருக்கும் நாராயணன் ஐயர் ஒன்றும் முற்போக்கு சிகாமணி கிடையாது. மாமுலான பிராமணாள் போன்றே மாட்டு மூத்திரத்தின் மீது தீராத ஈடுபாடு உண்டு அவருக்கு. யாராவது “ஏன் ஓய் மாட்டு மூத்திரத்தை போய் மடக்… மடக்குன்னு குடிக்கிறியே என்று கேட்டால் உடனே ஒரு காரணத்தை எடுத்துவிடுவார் நாரயணன். “அடேய் சுக்கு மாட்டு கோமியத்துல உள்ள அறிவியல் தெரியுமாடா நோக்கு” அடுத்த ஐந்து நிமிடத்தில் கேள்வி கேட்டவன்… ஓட்டம்தான்.. தினமும் வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் வயிற்றை சுத்தப்படுத்திவிடும் மற்றும் ஆஸ்துமாவை குணபடுத்தும் என்று இணையத்தில் எவன் சொல்வதையோ கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக தினமும் காலை கோமியம் குடித்து குடித்து இப்போழுது அதுவே பழகிவிட்டது நாரயணனுக்கு. அதிலும் நாரயணுக்கு தன் வீட்டு செண்பகத்தின் கோமியம் பிடிக்காது. அவள் பண்ணை மாடு தினமும் வைக்கோல் மட்டும் தான் உண்பாள். ஆனால் முனியன் வீட்டு கறுப்பி இருக்காளே அவளை போல் சத்தான கோமியம் ஆசிய கணடத்தில் எந்த மூலையிலும் கிடைக்காது அவள் ஊர் சுற்று உலா...

இந்திய சமுதாயத்தில் ரெத்தினம் ஒரு குற்றவாளி..!

சமுதாயம் என்னும் கட்டமைப்பையும் அதன் விதிமுறைகளையும் மீறியதால் இன்று சமுதாயத்தால் சுத்தமாய் ஒதுக்கப்பட்ட ஒரு மனுசி தான் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ரெத்தினம் பாட்டி 1930 களில் 8 வயதிலேயே 13 வயது ரெங்கனுக்கு மணமுடிக்கப்பட்டார் ரெத்தினம்.பெண்களின் இந்த மோசமான வாழ்க்கையை இன்னும் மோசமாக்கும் சங்கதி தான் திருமணம் என்பதை அறியாமல் அந்த கூத்து விளையாட்டில் அவரும் அங்கமாகிவிட்டார். பிறகு 15 வயதில் வயிற்றில் பிள்ளை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதபடாத அந்த திருமண அடிமை பெண் சட்டத்தின் கீழ் மாமூலான இந்திய பெண்கள் போல் இவரும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். மாட்டு வண்டி ஓட்டுபவர் ரெங்கன். ரெங்கனுக்கு மாடு மனைவி இருவருக்குமே உணர்ச்சி இருப்பதே நினைவில் இருப்பதில்லை. அவரின் முக்கிய சொந்தங்களில் தன் மனைவி ஒன்று என்றாலும் அந்த உறவை கையாள்வதற்கான தகுதி என்பது ரங்கனுக்கு வரவே இல்லை. ஒரு துணைவன் மீது உள்ள எந்த ஈர்ப்பும் ரெங்கன் மீது ரெத்தினத்திற்கு இல்லை. இந்நிலமையில் தான் ஒருநாள் தனது வீட்டிற்கு கூரை வேய வந்த வீரப்பன் மீது ரெத்தினத்திறகு காதல் உண்டானது. மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு இந்திய ...

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் (Stranger Things)

பெயர் : Stranger Things    ஸ்டேஞ்சர் திங்ஸ் இது ஒரு நெட்ஃப்லிக்ஸ் (NETFLIX) நிறுவனத்தின் தயாரிப்பு 2016 முதல் இணையத்தில் வெளியாகி வரும் இந்த தொடர் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது . இந்த கதையில் கதாநாயகர்களாக 12 வயது மதிக்க தக்க சிறுவர்கள் சிறுமியர்கள் வருவதாலும் M தியரி என கூறப்படும் அறிவியலை அடிப்படையாக கொண்டுள்ளதாலும் விருவிருப்பான கதைகளத்தை கொண்டுள்ள ஒரு முக்கிய தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் என்றே சொல்லலாம். 2016 ல் முதல் அத்தியாயமும் 2017 ல் இரண்டாம் அத்தியாயம்ய்ம் வந்த நிலையில் இந்த தொடருக்கு அதிக வரவேற்பு வரவே அதிக பொருட் செலவில் தொடர் மேம்படுத்தி எடுக்கப்பட்டதால் 2018 ல் அந்த தொடரின் மூன்றாம் பாகம் வெளியாகவில்லை. ஒரு வருடம் கழித்து இந்த வருடம் ஜூலை மாதம் இந்த தொடரின் மூன்றாவது பாகம் வெளியாகவுள்ளது.. கதைகரு :      அமைதியாக மக்கள் வாழும் ஒரு சிறிய நகரத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடக்கிறது. ஒரு சிறுவன் காணமல் போவதில் துவங்கி பல மர்மமான நிகழ்வுகள் நடக்க துவங்குகின்றன. இது இந்த அமைதியான சமூகத்தின் வாழ்க்கை முறையையும் ...

மன்னார்குடி பள்ளியில்......

யுகமாய் யுகமாய் நமது இந்தியாவில் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பள்ளி என்பதே பாகற்காயாய் கசக்கிறது. இதற்கு அரசு பள்ளிகள் கூட விதிவிலக்கல்ல . இப்படி ஒரு நிலை ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும் . அதற்கான சரியான காரணம் என்னவாக இருக்க முடியும். என எண்ணிய போது அதற்கான விடையாக இன்று ஒரு நிகழ்வு நடந்தது. இதற்காக பொதுவாக அனைத்து பள்ளிகளையும் அல்லது அனைத்து ஆசிரியர்களையும் குறை சொல்லி விட முடியாது என நீங்கள் கூறலாம். ஆனால் ஒரு ஆசிரியர் மன நல பாதிக்கப்பட்ட மிருகமாக பணிபுரியும் பள்ளியில் அதை கேள்வி கேட்காமல் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நல்ல ஆசிரியர்கள் எப்படி நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியும். இதை பற்றி பேச உதாரணமாக எனது பள்ளி வாழ்க்கையையே பேசலாம் என நினைக்கிறேன். நானும் 12 வது வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளியில் தான் பயின்றேன் . உங்கள் மேல்நிலை கல்வி வாழ்க்கையில் நீங்கள் ஆசிரியரிடம் அடியே வாங்கியதில்லை என்றால் ஒன்று நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவனாக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் மாற்றுதிறனாளியாக இருக்க வேண்டும். ஒரு படிக்காத மாணவன் என சொல்லப்படும் மாணவன் தன் பள்ளி பருவத்தில் படும்...

தமிழ் மொழி வளர்ச்சி

ஏற்கனவே ஏகப்பட்ட மக்கள் தமிழின் பெருமையை திகட்ட திகட்ட எழுதி   பேசி முடித்தப்பின் புதிதாக நான் எழுதிதான் நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டி எதுவும் இல்லை. நான் கிணற்று தவளை போல் ஏன் தமிழ் தமிழகத்துக்குள்ளேயே இருக்கிறது என்பதை பற்றியும் அதன் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்தும் எழுதலாம் என நினைத்தேன். இதற்கு அண்ணன் சீமானோ அவரது தம்பிகளோ கூட காரணமாக இருக்கலாம் . ஏன் எனில் உண்மையில் ஒரு மொழி வளர என்ன தடையாக இருக்க முடியும் . அதனின் வளர்ச்சிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்பதில் சரியான யோசனையில்லாத சில அண்ணன்கள் பேசும்போது “நீங்க தமிழுக்காக என்ன செஞ்சீரு “ என்று கேட்கதான் தோன்றுகிறது. சரி நான் கூற வந்ததை பார்ப்போம். ஒரு மொழி என்பது எப்போதும் அதன் எளிமை நடையை பொருத்தே உலகம் முழுக்க பரவுகிறது. அது படிக்கவும் கற்க்கவும் எளிதாகவும் அப்படி கற்பதால் நமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்னும் நிலையில் அதனுடைய வளர்ச்சி ஆரம்பமாகிறது. உதாரணமாக ஆங்கிலம் , ஆங்கில மொழியில் மொத்தமே 27 எழுத்துக்கள்தான் . இந்த இருபத்து ஏழே எழுத்துக்களில் தனது மொத்த மொழியையும் அடக்கியதில் ஆங்கிலம் வெற்றிக்கர...