Skip to main content

Posts

The Imitation Game Movie- Tamil review

  The Imitation Game இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஹிட்லர் எடக்குத்தனமாக செய்த பல விஷயங்களில் உலகுக்கே விபூதி அடித்த ஒரு விஷயம்தான் எனிக்மா. எனிக்மா என்பது கிரிப்டோக்ராபி எனப்படும் முறையை அடிப்படையாக கொண்டு செயல்பட கூடியது. நாஜி இராணுவத்தின் விமானம் முதல் நீர்மூழ்கி கப்பல் வரை அனைத்திலும் எனிக்மா இருக்கும். அதன் உதவியோடு எழுதப்படும் தகவல்களை அதன் உதவி இருந்தால் மட்டும்தான் கண்டறிய முடியும். அந்த மிஷின் உங்களிடம் இருந்தாலும் அவர்கள் செய்திருக்கும் செட்டிங்கை செய்திருந்தால்தான் அந்த செய்தியை கண்டறிய முடியும். இது எதுவும் இல்லாமல் அந்த தகவலை கண்டுப்பிடிக்க சராசரியாக 20 வருடங்கள் ஆகும். தினசரி இரவு 12 மணிக்கு அந்த செட்டிங் மாற்றப்படும். எனவே இன்றைய செய்தியை நீங்கள் கண்டுப்பிடித்தாலும் அதை கொண்டு நாளைய செய்தியை கண்டறிய முடியாது. இதனால் வெளிப்படையாகவே வயர்லெஸ் சிக்னல் மூலமாக தங்கள் தகவல்களை பரிமாறி கொண்டனர் ஜெர்மானியர்கள். தினசரி அனைத்து நாடுகளாலும் அந்த தகவலை பெற முடியும். ஆனால் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை கண்டறிய முடியாது. இந்த நிலையில் இதுக்குறித்த ஆய்வில் பங்குபெறும்...

ஸ்டார் வார்ஸ் ஜெடி ஃபாலன் ஆர்டர் (Star wars Jedi Fallen Order)

  எலக்ட்ரானிக் ஆர்ட்ஸ் எனப்படும் நிறுவனத்தால் 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேம்தான் ஸ்டார்வார்ஸ் ஜெடி: ஃபாலன் ஆர்டர். ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தில் எபிசோட் 3 ஆன ரிவேஜ் ஆஃப் சித் திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்த கேம் அமைந்துள்ளது. இது ஒரு தெர்ட் பர்சன் பெர்ஸ்பெக்டிவ் கேம், பாயிண்ட் ஆஃப் வீவ் கேம் அல்ல. ஆனால் இது பெரும் கதை கொண்ட கேம். பொதுவாக கேம்கள் 8 மணி நேரம்தான் கேம் ப்ளே டைம் இருக்கும். ஆனால் 17 மணி நேரம் கேம் ப்ளே டைம் கொண்டது ஸ்டார் வார்ஸ் ஜெடி ஃபாலன் ஆர்டர். ஸ்டார் வார்ஸ் பற்றி தெரியாதவர்களுக்காக ஸ்டார் வார்ஸ் டிவேஞ்ச் ஆஃப் சித்தின் சுருக்க கதை ஜெடி என்பவர்கள் மொத்த கேலக்ஸியையும் பாதுக்கப்பவர்கள். அவர்களுக்கு ஃபோர்ஸ் எனும் சக்தி இருக்கும். அதை கொண்டு அவர்களால் எந்த ஒரு மனிதனையும், பொருளையும் கவரவோ, தூக்கி எறியவோ முடியும். அதே போல டார்க் எனர்ஜி என்கிற சக்தியை பெற்ற கெட்டவர்களும் இருப்பார்கள். ஜெடிகள் லைட் சேபர் என்னும் ஆயுதத்தை வைத்திருப்பர். அதை கொண்டு மலையை கூட இரண்டாக பிளக்க முடியும். இவர்களிடம் இருந்து கேலக்ஸியை ஜெடி வீரர்கள் காப்பாற்றி வருவார்கள். இந்த நிலையில் ஓப...

ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசங்கள்

  ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசங்கள் முதலாம் பாகம் சர் ஆர்தர் காணன் டாயில் தமிழில்: சந்திரசேகரன் 1887 இல் கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட துப்பறியும் கதை. துப்பறியும் கதைகளுக்கு எல்லாம் குரு என இதை கூறலாம். இலண்டன் நகரில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் அமைப்பை கொண்டவர்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். எந்த ஒரு குற்றத்தையும் எளிதாக அடையாளம் காணக்கூடிய நுண்ணறிவை கொண்ட ஒரு கதாபாத்திரம். மொத்த உலகமும் கொண்டாடி தீர்த்த கதை. அப்போதே பலர் உண்மையிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் இருப்பதாக நம்பி ஷெர்லாக் ஹோம்ஸ் முகவரி என நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் 221பி பேக்கர் ஸ்டீரிட் முகவரிக்கு கடிதங்களாக எழுதி தள்ளினார்கள் என்றால் அந்த நாவல் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அந்த கொண்டாட்டத்திற்கு தகுதியான நாவல்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இப்போதைய திரைப்படங்களில் நாம் பார்க்கும் துப்பறியும் திறன் கொண்ட ஆசாமியை 1800 களின் இறுதியில் ஒரு மனிதன் உருவாக்கியிருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம். 130 வருடங்கள் ஆகியும் ஷெர்லாக் ஹோம்ஸ் தாக்கம் இல்லாமல் அதிலிருந்து மாறுப்பட்ட ஒரு புதிய துப்பறிவாளனை இங்கு உ...

Call of Duty Modern Walfare 3 - Tamil review

  கால் ஆஃப் ட்யூட்டி மாடர்ன் வேல்ஃபேர் 3 கால் ஆஃப் ட்யூட்டி நம்ம அமெரிக்கன்ஸ் கேம்ங்குறதால விளையாடுற நாமளும் அமெரிக்க சோல்ஜர்தான். வழக்கம் போல ரஷ்யா காரனோட நீர்மூழ்கி கப்பல், ராணுவ படைகள் எல்லாத்தையும் காலி பண்ணிட்டு இருக்கும்போது பொசுக்குன்னு ப்ரெசிடண்டையும் அவர் பொண்ணையும் தூக்கிடுறாய்ங்க. நாமளும் பல பேர ரைட் ஹேண்ட்ல டீல் பண்ணிட்டு ப்ரெசிடெண்டையும் அவர் பொண்ணையும் காப்பாத்திட்டு கிளம்புற டைல நம்மாளுலையே ஒருத்தன் என் மூஞ்சுலையே குத்து விட்டுட்டு ப்ரெசிடெண்ட தூக்கிட்டு போயிடறான். யாருடா அவன்னு பார்த்தா உள்ளுக்குள்ளயே இருந்த கருப்பு ஆடு பேரும் விளாடிமர் மகோரவ். அவன்கிட்ட இருந்து ப்ரெசிடெண்டை ஒரு வழியா காப்பாத்திட்டு வரும்போது அவன் வச்ச பாம்ல என் கூட்டாளி காலி ஆகிடுறான். அதுனால நெக்ஸ்ட் பழி தீர்க்க கிளம்பி பய மகோரவ போட்டு தள்ளுறதுதான் இந்த கேமோட கதை. லோ கான்ஃபெகிரேஷனுக்கே (2 gb graphics) 60FPS பிரமாதமா எடுக்குது கேம். கேம் ப்ளேவும் பி.ஒ.வி சூட்டிங் கேம்ங்குறதால நல்லாவே இருக்கு. வாய்ப்பிருக்கும் கேமர்கள் விளையாண்டு பார்க்கலாம்.

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் - ஓஷோ

பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் ஓஷோ பெண் விடுதலை குறித்து இதற்கு முன்பு படித்த புத்தகங்களை காட்டிலும் அதிகமான தகவல்களையும் , விவாதங்களையும் எனக்கு ஏற்படுத்திய ஒரு புத்தகம் என இதை கூறலாம். 1930 இல் இருந்து 1990 வரை வாழ்ந்த மனிதர் ஓஷோ. ஆனால் அவரது வாதங்கள் , விஷயங்கள் யாவும் இப்போதைய தலைமுறைகளை கூட தாண்டி செல்வதாய் இருக்கிறது. சமூகத்தில் இதுவரை கட்டி வைத்துள்ள அனைத்து விதிமுறைகளையும் சல்லி சல்லியாக நொறுக்குகிறார் ஓஷோ. பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம் என்பது இந்த புத்தகத்திற்கு ஒரு பொருத்தமான பெயர் எனலாம். பெண் விடுதலை குறித்து நாம் இதுவரை படித்ததில் இருந்து முற்றிலுமாக வேறுப்பட்ட ஒரு புத்தகம் இது. இப்போது புத்தகத்தில் ஓஷோ உடைத்த பர்னிச்சர்களை பார்க்கலாம்.   பெண்ணுக்கு முதலில் கிடைக்க வேண்டிய சுதந்திரம் , காமம் ரீதியான சுதந்திரம். உடலுறவை பொறுத்தவரை பெண்கள் இன்னமுமே அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். ஓஷோ , அவரது காலத்தில் பல பெண்கள் உச்சம் அடைவதை பற்றி அறிந்திருக்கவே இல்லை என கூறுகிறார். ஏனெனில் ஆண் , பெண்ணை கண்டு பயப்படுகிறான். இயற்கையாகவே பெண்களால் வரிசையாக பல முறை உச்சத்தை அட...

Dear Comrade Movie Review

பல்லை கடிச்சிக்கிட்டு மொத பாதியை மட்டும் பார்த்துட்டா அடுத்த பாதி அருமையான படம். ஆதித்ய வர்மா, இஸ்பேர் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் வரும் ரோசமான ஹீரோக்கள் வகையாறாவை சேர்ந்தவர் நம்ம ஹீரோ. இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்பவும் சுய நலமாத்தான் இருப்பாய்ங்க. கூட இருக்குற நண்பர்கள் சாப்பிட்டாய்ங்களான்னு கூட கேக்க மாட்டான். ஆனா நண்பர்கள் இந்த ஹீரோவை குழந்தை போல பாத்துக்குவாய்ங்க. டையப்பர் மாத்திவிடாததுதான் குறை. அது என்னான்னா அப்படி ஒரு நண்பர் கூட்டம் இருந்தா தான் ஹீரோவால என்ன வேணா செய்ய முடியும் இல்லையா. இப்படியாக ஹீரோ தோன்றுவய்ங்க எல்லாரையும் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்குறப்ப தலைவி ராஸ்மிகா எண்ட்ரி நம்ம ஹீரோ பொம்பள பிள்ளையல்ட்ட எப்பவும் கடு கடுன்னேதான் இருப்பார். ராஷ்மிகாக்கிட்டயும் அப்படியே கடு கடுன்னு ஒரு முதல் சந்திப்பு. அதுக்கு பிறகு ரெண்டு பேருக்குள்ளயும் காதல் வருது. டெல்லிக்கே ராஜான்னால்லும் பல்லிக்கு புள்ளதான என்பது போல் காதல், அதனால் ஏற்படும் பிரிவு. நம்ம அடித்தடி ஹீரோவை திருத்துகிறது. இதுல ராஸ்மிகாவோட கதாபாத்திரம் கொஞ்சம் தேவலையா இருந்துச்சு. எப்போதும் இந்த போக்கிரி பயக ...

பறவைகளை கொன்று பண்டிகை கொண்டாடும் நம் மக்கள்

ஒவ்வொரு வருடமும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். என்னதான் பட்டாசுகளின் விலை அதிகமானாலும் காசு செலவு செய்து பட்டாசு வாங்குவதை நாம் நிறுத்துவதே இல்லை. ஆனால் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும் பறவைகளுக்கு ஒரு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. தீபாவளிக்கு அடுத்த நாளில் உடல் கருகி, இறகுகள் மட்டும் எரிக்கப்பட்டு என கண்டெடுக்கப்படும் பறவைகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகி வருகின்றன. பட்டாசுகளில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற மாசுக்கள் தீபாவளி சமயத்தில் காற்றில் அதிகமாக கலக்கப்படுவதால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் இது ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களையும் பாதிக்கிறது. பட்டாசுகளின் உரத்த ஓசையானது பறவைகளை வெகுவாக பாதிக்கின்றன மற்றும் பயமுறுத்துகின்றன. பறவைகளை இது மனதளவில் பாதிக்கின்றன. இதனால் அவற்றால் மற்ற பறவைகளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. சில பறவைகள் இதனால் இரவு முழுவதும் கூட்டிற்கு செல்லாமல் வானத்திலேயே ஓய்வில்லாமல் பித்து பிடித்தது போல சுற்றிக்கொண்டிருக்கின்றன. பறவைகள் அதிக உணர்திறன் க...