Skip to main content

Posts

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...

இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765)

  இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765) ஆசிரியர்:ராய் மாக்ஸம் கிழக்கு பதிப்பகம் பக்கங்கள்: 278 இந்தியா குறித்து சில முக்கியமான புத்தகங்களை எழுதியவர்தான் எழுத்தாளர் ராய் மாக்ஸம். இவரின் ஆய்வுகள் பலவும் இந்திய வரலாறு குறித்து முக்கியமான விஷயங்களை பேசுகின்றன. ஏற்கனவே இவர் எழுதி தமிழில் வெளியான உப்புவேலி மற்றும் தே ஒரு இலையின் வரலாறு ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன். அந்த வகையில் இது மூன்றாவது புத்தகம். ஆங்கிலத்தில் The Theft of India: The European Conquests of India 1498–1765 என்று வெளியான புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த புத்தகம். பெரும்பாலும் பள்ளி காலத்தில் இந்திய விடுதலை குறித்து படிக்கும்போது ஏதோ பிரிட்டிஷார்தான் நம்மை அடிமைப்படுத்தியதாகவும் அதற்கு முன்பு இந்தியர்கள் எல்லையை கூட யாரும் தொட்டதில்லை என்பது போலவும் நினைத்து கொண்டிருந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே இந்தியாவை கொள்ளையடித்து போன பல கூட்டங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 1498 இல் முதன் முதலாக வாஸ்கோடாகாமா என்கிற வெள்ளையன் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் காலடி எடுத்து வைப்பதில் இருந்...

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத் பக்கங்கள் : 112 தலைப்பிலேயே ஒரு புத்தகத்திற்கு வார்னிங் கொடுத்த முதல் மனிதர் கோபிநாத் அவர்கள்தான். சுயமுன்னேற்றம் புத்தகத்தை பொறுத்தவரை அதை எழுதுவதற்கு மிக அதிகப்படியான மன முதிர்வு தேவை. எல்லோராலும் அதை எழுதிவிட முடியாது என நினைக்கிறேன். மனித மனம் குறித்த மிக ஆழமான அறிவு கொண்டவர்களால் மட்டுமே அதை சரியாக எழுத முடியும். அந்த வகையில் ஜேம்ஸ் க்ளியர் எழுதிய சின்னஞ்சிறு பழக்கங்கள் ஒரு முக்கியமான புத்தகம். ஆனால் கோபிநாத்தின் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க புத்தகம் அவ்வளவு சரியான புத்தகம் என கூறிவிட முடியாது. பல வருட அனுபவத்திற்கு பிறகு கோபிநாத் இப்படி ஒரு புத்தகத்தை எழுத நினைத்திருக்க வேண்டும். ஒருவேளை இப்போது எழுதினால் கொஞ்சம் அவர் சரியாக எழுதி இருக்கலாம். பெரும்பாலும் சுயமுன்னேற்ற புத்தகத்தில் அன்றாட வாழ்க்கை குறித்த விஷயங்கள் பதிவு செய்யப்படும்போது பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருப்பதை பார்க்கலாம் என்றுதான் பதிவு செய்வார்கள். ஆனால் கோபிநாத் புத்தகம் முழுக்க நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் அது எவ்வளவு பெரிய பிரச்சனை என பேசுகிறார். புத்தகம் முழ...

டெக்ஸ் - மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல்

டெக்ஸ் - மேஜிக் மொமண்ட்ஸ் ஸ்பெஷல் காமிக்ஸ் பக்கங்கள்: 258 விலை:350 பப்ளிஷர்: லயன் முத்து காமிக்ஸ் கொலம்பஸ் அமெரிக்கா என்கிற தேசத்தை கண்டுப்பிடித்த பிறகு அந்த தேசம் உருவாவதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. அவ்வளவு பெரிய தேசத்திற்கு போதுமான மக்கள் தொகை ஐரோப்பியர்களிடமே இல்லை. இந்த நிலையில் வெள்ளையர்கள் பலரும் அமெரிக்காவிற்கு வருவதற்காக நிறைய வசிகரமான திட்டங்களை அமல்ப்படுத்தினர்.  அப்படியாக பலரும் வந்துதான் அமெரிக்க தேசம் உருவானது. அவ்வளவு பெரிய தேசம் என்பதால் அங்கு ஏதோ அத்தி பூத்தாற் போல சில இடங்களில்தான் நகரங்கள் கிராமங்கள் மாதிரியான விஷயங்கள் இருந்தன. பெரும்பான்மையான இடங்கள் காடுகளாகதான் இருந்தன.  இதனால் குற்றங்களும் அங்கு அதிகமாக நடந்து வந்தன. அரசியல் சூழ்ச்சிகள், பதவிக்காக பழி வாங்குதல் என ஆபத்துக்கு பஞ்சமில்லாத நாடாக அமெரிக்கா இருந்த நேரத்தில் ரேஞ்சர்கள் என்கிற பதவியில் ஒரு நாடோடி அரசின் சட்ட அதிகாரிகள் கூட்டம் உருவானது. அமெரிக்காவின் எந்த ஒரு பிராந்தியத்திலும் நடவடிக்கை எடுக்கும் திறன் படைத்த இவர்களில் ஒருவர்தான் கதாநாயகன் டெக்ஸ் வில்லர். இதில் இந்த மேஜிக் மொமண்ட் ஸ்பெஷல் கதைய...

காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் வில்லர்

காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் வில்லர்  Page: 226 காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் ஒரு மர்ம காமிக்ஸ் என கூறலாம். அரிசோனாவில் குறிப்பிட்ட பகுதியில் மர்மமான ஒரு விஷயம் நடக்கிறது. அங்கு செல்லும் விலங்குகள் எல்லாம் மர்மமான முறையில் இறக்கின்றன. ஒரு விலங்கு இறந்து அது எலும்பு கூடாக சில நாட்கள் தேவைப்படும்.  ஆனால் அந்த பிராந்தியத்தில் வித்தியாசமாக இறக்கும் விலங்குகள் உடலில் இருந்து மொத்த ரத்தமும் உறிஞ்சப்பட்டு கூடு மட்டும் கிடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வழிப்போக்கர்களும் இதே மாதிரி இறக்கிறார்கள். இது இரத்த காட்டேறியின் வேலை என அங்கிருக்கும் மக்கள் முடிவு செய்கின்றனர். எனவே அங்கிருக்கும் மோரிஸ்கோ என்னும் மந்திரவாதியிடம் இந்த பிரச்சனையை கொண்டு வருகின்றனர். இதற்கு நடுவே டெக்ஸ் வில்லரும் அவரது குழுவினரும் ஒரு கொள்ளை கூட்டத்தை தேடி அதே இடத்திற்கு வருகின்றனர். அங்கு உலாவும் மர்மத்தை அவர்கள் கண்டுப்பிடிப்பதுதான் கதை. ஆரம்பத்தில் மர்மமாக சென்றாலும் பிறகு அறிவியல் பூர்வமான கதையாக மாறிவிடுகிறது இந்த கதை.

ஸாகோர் - சிகப்பு நதி

  ஸாகோர் - சிகப்பு நதி  Page - 130 சிகப்பு நதி கதை ஊர்களில் சுற்றி திரியும் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சூரிய மறைவின்போது இரத்த நிறத்திற்கு மாறும் ஒரு சிகப்பு குளம் இருக்கிறது. அந்த குளத்தின் பக்கம் செல்லும் வேட்டையர்கள் மர்மமான முறையில் ஒரு அம்பால் கொல்லப்படுகின்றனர். ஆரம்பத்தில் அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதி செவ்விந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் வெள்ளையர்கள் அத்துமீறி உள்ளே வந்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். அப்போது அப்பாவியான ஒரு செவ்விந்தியன் வெள்ளையனால் மூர்க்கமாக தாக்கப்பட்டு சாகிறான். அவன் இறக்கும்போது வெள்ளையர்களை மொத்தமாக பழி வாங்குவதாக சபதம் எடுக்கிறான். அவனது ஆவிதான் வேட்டையர்களை பழி வாங்குவதாக ஊரில் பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த சமயத்தில்தான் கதாநாயகன் ஸாகோர் அந்த ஊருக்குள் வருகிறார். அந்த குளத்தின் மர்மத்தை அவர் கண்டறிவதை வைத்து கதை செல்கிறது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டில் கதை முடிகிறது. ஆனால் கதை வெள்ளையர்களின் பேராசையை வெட்ட வெளிச்சம் ஆக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ்

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ் page:65 நாளை போய் நேற்று வா ஒரு டைம் ட்ராவல் காமிக்ஸ் ஆகும். டைம் ட்ராவலை பொறுத்தவரை அதில் பல விதமான தியரிகள் உண்டு. பேக் டு தி ஃப்யூச்சர் மாதிரி கடந்த காலத்திற்கு சென்று தவறுகளை சரி செய்வதன் மூலம் எதிர்காலம் மாறும் என்பது ஒரு ரகம். ஆனால் கடந்த காலத்தில் எதையுமே நம்மால் மாற்ற முடியாது என கூறும் திரைப்படங்களும் உண்டு. ட்ரைம் ட்ராவலர் வைஃப் என்கிற திரைப்படம் அந்த மாதிரியான கதைக்களத்தை கொண்டது. அதே மாதிரி மாநாடு மாதிரி நடந்ததே திரும்ப நடக்கும் டைம் லூப் கதைகளங்களும் உண்டு. இதில் இந்த காமிக்ஸ் வேறு வகையான டைம் ட்ராவல் ஸ்டோரி என்று கூற வேண்டும். கதையின்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கிறாள். காலையில் அவள் எழுந்திருக்கும் போது அவளை கொலை செய்ய ஒருவன் முயற்சிக்கிறான். இதற்கு நடுவே வயதான பெண் ஒருத்தி அந்த போலீஸ் அதிகாரியை காப்பாற்றுகிறாள். பிறகுதான் தெரிகிறது அந்த வயதான பெண்ணே அந்த போலீஸ் அதிகாரிதான். எதிர்காலத்தில் இருந்து இவரை காப்பாற்ற வந்துள்ளார். அந்த கொலைக்காரனும் எதிர்க்காலத்தை சேர்ந்தவன் தான். எதற்காக அவன் இவளை கொலை செய்ய நினைக்கிறான் என்பதை வைத்து கதை...